கார் ஓட்டும்போது எஸ்எம்எஸ் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் புதிய ஆப்பிள் ஆப்!

By Saravana

வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போனில் எஸ்எம்எஸ் டைப் செய்து அனுப்புவது சாதாரண வழக்கமாகிவிட்டது. சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது.

மேலும், இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷனுக்கு காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது. இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் வாகனங்களை ஓட்டும்போது எஸ்எஸ்எம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்கும் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய ஆப் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நோ எஸ்எம்எஸ்

நோ எஸ்எம்எஸ்

இந்த புதிய ஆப் டிரைவிங் செய்வதை உணர்ந்து கொண்டு எஸ்எம்எஸ் ஆப்ஷனை மொபைல்போனில் செயலிழக்க வைத்துவிடும். காரை விட்டு இறங்கிய பின்னரே, எஸ்எம்எஸ் ஆப்ஷன் உயிர்பெறும் வகையில் இந்த புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 மோஷன் சென்சார்

மோஷன் சென்சார்

இதற்காக மொபைல்போனில் இருக்கும் நகர்வதை கண்டுணரும் மோஷன் சென்சார்களும், சீனரி சென்சார்களும் இணைந்து செயல்படும். மோஷன் சென்சார் மொபைல்போன் நகர்ந்து கொண்டு இருப்பதையும், சீனரி சென்சார் மொபைல்போன் எஸ்எம்எஸ் டைப் செய்வதற்கான பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்துகொண்டு செயல்படும்.

மாறுதல்கள் வேண்டாம்

மாறுதல்கள் வேண்டாம்

இந்த புதிய ஆப் நடைமுறைக்கு வந்தால், காரில் அல்லது மொபைல்போனில் எந்தவொரு மாறுதல்களையும் செய்ய வேண்டியிருக்காது. வாகனம் நகர்வதை கண்டறிந்து எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியை செயலிழக்க வைத்துவிடும் என்று காப்புரிமை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிற பயணிகள்

பிற பயணிகள்

கார் நகர்வதை வைத்து மொபைல்போனில் எஸ்எம்எஸ் ஆப்ஷன் செயலிழக்க வைக்கப்பட்டால், டிரைவருக்கு மட்டுமின்றி, காரில் செல்லும் பயணிகளின் மொபைல்போனிலும் இதுபோன்று எஸ்எம்எஸ் ஆப்ஷன் செயலிழந்துவிடுமா என்பது குறித்து அந்த காப்புரிமையில் விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இது ஒரு பெரிய கேள்வியாக எழுகிறது.

புதிய வசதிகள்

புதிய வசதிகள்

இந்த புதிய வசதி ஆப்பிள் போன்களில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டால், இதை அடிப்படையாக வைத்து வாகனம் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவதையும் தவிர்ப்பதற்கான வசதியையும் உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
American tech giant Apple has filed a patent application for a system that aims to make texting at the wheel impossible by blocking drivers from sending messages on cell phones.
Story first published: Tuesday, April 29, 2014, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X