கார் பந்தய வரலாற்றில் மிகவும் இளம் வயதில் முத்திரை பதித்த இந்திய வீரர்...!

Written By:

ஜிபி3 சீரீஸ் என்று அழைக்கப்படும் கிராண்ட் ஃபிரிக்ஸ்-3 கார் பந்தயமானது ஃபார்முலா-1 கார் பந்தயம் போன்று தனிப்பட்ட நெறிமுறைகளோடு நடத்தப்படும் ஒரு கார் பந்தயமாகும். இது உலகின் பல நாடுகளில் பல்வேறு சுற்றுக்கள் கொண்டதாக உள்ளது.

பிரபலமான ஜிபி-2 சீரீஸ் கார் பந்தயங்களின் கீழ் நிலையில் ஜிபி-3 சீரீஸ் உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் இந்தப் பந்தயம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த 19வயதே ஆன இளம் இந்திய கார் பந்தய வீரரான அர்ஜூன் மைனி இந்த ஆண்டிற்கான ஜிபி-3 சீரீஸ் பந்தயத்தில் பங்கேற்று முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

ஜிபி-3 சீரீஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெரும் முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அர்ஜூன் மைனி படைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த அர்ஜூன் மைனி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜென்சர் மோட்டார் ஸ்போர்ட்' என்ற கார் பந்தய குழுவில் இடம்பிடித்துள்ளார். இந்தக் குழு வளர்ந்து வரும் வீரராக அர்ஜூனை ஒப்பந்தம் செய்துள்ளது.

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற கேட்டலுன்யா கார் பந்தய சர்க்யூட்டில் நடைபெற்ற இப்போட்டியில், புகழ்பெற்ற ஃபிரான்ஸ் நாட்டு வீரரான டோரியன் போகோலேகி மற்றும் சக குழுவைச் சேர்ந்தவரான அலெஸியோ லோரண்டி ஆகியோரை முந்தி வெற்றி வாகை சூடியுள்ளார் அர்ஜூன்.

போட்டியின் தொடக்க கட்டத்தில் மிகவும் சவாலை சந்தித்த அர்ஜூன் முதல் லேப்பிலேயே ரவுல் ஹைமேனை பின்னுக்குத்தள்ளி முன்னிலையை ஏற்படுத்தினார்.

இந்த முன்னிலை 5 லேப்புகள் வரை நீடித்தது, எனினும் 6வது லேப்பில் மீண்டும் தென்ஆப்பிரிக்க வீரரான ரவுல் ஹைமேன் முதல் இடத்திற்கு முந்தினார். அடுத்த சில நொடிகளிலே ரவுல் ஹைமேனை மீண்டும் முந்தி முன்னிலையை அடைந்த அர்ஜீன்
பின்னர் பந்தயத்தை வென்று தனது முதல் ஜிபி 3 பந்தயத்தையும் வென்றுஅசத்தினார்.

இதன் மூலம் ஜிபி- 3 பந்தயத்தில் வாகை சூடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த 19வயதே ஆன அர்ஜூன் படைத்துள்ளார்.

அர்ஜூன் தனது 8வது வயதில் இருந்தே கார் பந்தயக் களத்தில் கலக்கி வருகிறார். 2008ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த கோ கார்ட் பந்தயத்தில் வென்று, வெளிநாடுகளில் நடந்த கோ கார்ட் பந்தயத்தில் குறைந்த வயதில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர் ஆவார்.

அர்ஜூன் மைனியின் தந்தை கவுதம் தேசிய அளவிலான கார் பந்தயங்களில் கலந்து கொண்ட வீரர் ஆவார். மேலும் அர்ஜூனின் சகோதரர் குஷ் மைனியும் ஒரு கார் பந்தய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அர்ஜூன் இடம்பிடித்துள்ள அதே ஜென்சர் மோட்டார்ஸ்போர்ட் கார் பந்தயக் குழுவில் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
Read in Tamil about 19years indian racer arjun wins gp3 car race in barcelona creates history.
Please Wait while comments are loading...

Latest Photos