சென்னை சில்க்ஸ் கட்டடம் போல திடீரென ஏற்பட்ட தீயில் சாம்பலான புதிய தலைமுறை ஆடி ஏ7 கார்..!!

Written By:

ஆடி நிறுவனம் அடுத்த தலைமுறை ஆடி ஏ7 காரை தற்போது பரிசோதித்து வருகிறது. இந்த புதிய ஏ7 செடன் காரை 2019ல் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆடி நிறுவனம் புதிய ஏ7 காரை பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது, அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மலைச் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தியது.

புதிய ஆடி ஏ7 காருடன் கடினமான எடையுடன் கூடிய டிரெயிலர் ஒன்றும் இணைக்கப்பட்டது. இந்த அதிகபட்ச எடையுடன் மலைச்சாலையில் அந்த காரை சோதனைக்கு உட்படுத்திய போது அந்த எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டது.

காரை பரிசோதனைக்கு உட்படுத்திய ஓட்டுநர் காரின் இன்சின் அறை பகுதியில் இருந்து லேசான புகை வருவதை கண்டார். உடனடியாக அதில் இருந்து தீ மளமளவென எரிந்ததால் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கினார்.

அருகில் இருந்த உதவிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைகளால் தீ அணைக்கும் கருவி ஒன்றினை எடுத்து வந்து காரில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.

எனினும் தீ மளமளவென கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனால் தீயை அணைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து போல புதிய ஆடி ஏ7 காரில் ஏற்பட்ட சிறிய தீ கட்டுக்கடங்காமல் எரிந்து அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் முற்றிலும் அந்தக் காரை தீக்கிரையாக்கியது.

பின்னர் உள்ளூர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியோடு இந்த காரில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அதற்குள் இந்தக் கார் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது.

ஸ்பை ஃபோட்டோகிராஃபர் ஒருவர் இந்தக் காட்சிகளை புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

தற்போது உள்ள ஆடி ஏ7 காரை காட்டிலும் புதிய ஏ7 கார் சற்று அகலமானதாக இருக்கும், அதே போல இந்தக் கார் புதிய எம்எல்பி ஈவோ வெஹிகிள் ஆர்கிடெக்சர் முறையில் தயாரிக்கப்படுவதால் எடையிலும் குறைவானதாக இருக்கும், புதிய ஏரோடைனமிக்ஸ் தோற்றத்தில் அடுத்த தலைமுறை ஆடி ஏ7 கார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக எடை கொண்ட டிரெயிலரை மலைச்சாலையில் வைத்து இழுக்கச்செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து ஆடி நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

English summary
Read in Tamil about New audi a7 sedan car catches fire during testing
Please Wait while comments are loading...

Latest Photos