ஆடி ஆர்8 காரை ஓரங்கட்டி வெற்றி வாகை சூடிய டுகாட்டி பைக்!

காருக்கும், பைக்குக்கும் ரேஸ் வைத்தால் எது வெற்றி பெறும்? என்பது பலருக்குள்ளும் இருக்கும் கேள்வி. இதற்கு விடை காணும் வகையில், கடந்த வார இறுதியில் ஆட்டோகார் இதழ் ஒரு முயற்சியை செய்தது. ஆடி ஆர்8 கார் மற்றும் டுகாட்டி டயாவெல் சூப்பர் பைக் இரண்டையும் ஒரு கைவிடப்பட்ட விமான ஓடுபாதையில் வைத்து சோதனை நடத்தினர்.

மணிக்கு 150 மைல்(241கிமீ) வேகத்தை தொட்டுவிட்டு, உடனடியாக 150-0 கிமீ வேகத்துக்கு வர வேண்டும் என்பது போட்டியாக வைக்கப்பட்டது. ஆடி ஆர்8 வி10 காரை ஆட்டோகார் இதழின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டர் ஸ்டீவ் சட்கிளிஃபும், டுகாட்டி பைக்கை கிறிஸ் நார்த்ஓவரும் கையிலெடுத்தனர். இந்த போட்டி பலத்தை எதிர்பார்ப்புடன் துவங்கியது. துவக்கம் முதலே முன்னிலை வகித்த டுகாட்டி டயாவெல் இறுதியில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார் மற்றும் பைக்கின் ஆக்சிலரேசன், பிரேக் திறன் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ்

ஆடியின் ஆர்8 வி10 ப்ளஸ் கார் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. போட்டியில் பயன்படுத்தப்பட்ட காரில் 582 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 5.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கார் 3.5 வினாடிகளில் 0-97 கிமீ வேகத்தை எட்டவல்லது. இதே வேகத்தை டுகாட்டி டயாவெல் 2.6 வினாடிகளில் எட்டிவிடும்.

 டுகாட்டி டயாவெல்

டுகாட்டி டயாவெல்

234 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 1198சிசி திறன் கொண்ட 1198 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 162 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டுகாட்டி எடையுடன் பவரை வெளிப்படுத்தும் திறனை ஒப்பிடும்போது ஆடி காரைவிட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியை ருசித்த டுகாட்டி

போட்டியில் டுகாட்டி டயாவெல் 25.6 வினாடிகளிலும், ஆடி கார் 25.7 வினாடிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை எட்டி, திரும்பவும் பூஜ்யத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Most Read Articles
English summary
Drag racing cars is always fun, but many will agree that the drag race gets even more interesting when its four wheels against two. Two British auto magazines decided to get together and give auto enthusiasts the thrill of one such drag race this weekend.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X