இந்திய ஆட்டோமொபைல் துறையின் மைல்கல்: சென்னையில் புதிய டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

ரூ.963 கோடி மதிப்பீட்டில் சென்னை ஓரகடத்தில் உலகத்தரத்திலான புதிய ஆட்டோமொபைல் டெஸ்ட் டிராக் மையம் தொடங்கப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

By Arun

இந்திய ஆட்டோமொபைல் துறையை உலகலாவிய தரத்தில் உயர்த்த உதவும், சென்னை ஓரகடம் ஆட்டோமொபைல் பரிசோதனை மையத்தை மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் கீதே துவக்கி வைத்துள்ளார்.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

நேட்ரிப் (NATRiP) எனப்படும் தேசிய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனை மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் குளோபல் ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி மையம் சென்னை ஓரகடத்தில் ஆட்டோமொபைல் பரிசோதனை மையம் ஒன்றினை கட்டமைத்து வந்தது.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

ஓரகடம் ஆட்டோமொபைல் பரிசோதனை மையமானது 963 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 304 ஏக்கர் பரப்பளவில் ஓரகடம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

இந்த பரிசோதனை மையமானது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை உலகத்தரத்திற்கு உயர்த்த உதவும் வகையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

304 ஏக்கர் பரப்பளவிலான இந்த பரிசோதனை மையத்தில் வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ள வசதியாக மூன்றில் ஒரு பங்கு டெஸ்ட் டிராக்குகளை கொண்டதாக உள்ளது.

இங்கு ஹை-ஸ்பீடு டிராக், ஹில் டிராக், வெளிப்புற ஒலி டிராக், பிரேக்கிங் டிராக் மற்றும் ஸ்டீரிங் பேட் உள்ளிட்ட சோதனை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகள், டிரக், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் ஒவ்வொரு அம்சங்களின் தரத்தையும் பரிசோதனை செய்து பார்க்கும் வசதி இதன்மூலம் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

வாகனத்தின் அமைப்புகள், தொழில்நுட்பங்கள், உதிரிபாகங்களின் செயல்பாடு, புகை மாசு உள்ளிட்ட என்னற்ற அம்சங்களையும் இந்த ஒரே மையத்திலேயே பரிசோதனை செய்து பார்க்கும் வசதி இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ, நிசான், ஹூண்டாய், ,மிட்சுபிஷி,ஃபோர்டு, டேய்ம்லர், ரெனால்ட் உள்ளிட்ட கார் நிறுவனங்கள் சூழ்ந்துள்ள ஓரகடம் பகுதியில் இந்த ஆட்டோமொபைல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது இத்துறையில் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவே இருக்கிறது.

சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

ஓரகடம் ஆட்டோமொபைல் பரிசோதனை மையத்தில் அமைந்துள்ள வசதிகள்..

  • இன்ஃபோடிரானிக்ஸ் லேப்
  • பாசிவ் சேஃப்ட்டி லேப்
  • ஈஎம்சி லேப்
  • பவர்டிரெயின் லேப்
  • ஃபேடிக் லேப்
  • செர்டிபிகேஷன் லேப்
  • மெட்டீரியல் லேப்
  • காம்பொனெண்ட் லேப்
  • ஹோமோலோகேஷன் டிராக்ஸ்
  • சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

    சர்வதேச நாடுகளில் இந்த வசதி ஏற்கெனவே இருந்து வரும் நிலையில் ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னையில் முதன் முறையாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னையின் புதிய மகுடம்: உலகத்தர டெஸ்ட் டிராக் வசதி துவக்கம்..!

    இதன் மூலம் அதிகப்படியான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமைந்துள்ள சென்னையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் சர்வதேச தரத்தில் சோதனை செய்து சான்றளிக்கப்படும்.

Most Read Articles
English summary
Read in Tamil about New Automobile test track facility inaugurated at Oragadam, chennai.
Story first published: Friday, May 19, 2017, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X