உலகம் முழுதும் உள்ள ஆட்டோரிக்ஷாக்கள்: ஒரு பார்வை

By Saravana

இன்றைய நகர்ப்புற போக்குவரத்தில் ஆட்டோரிக்ஷாக்களின் பங்கு இன்றியமையாததாகிவிட்டது. அலுவலகம் செல்வோர்க்கும், அவசரமாக செல்வோர்க்கும் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பதிலும், எளிய மக்களுக்கு ஏற்ற கட்டணத்திலான சிறந்த போக்குவரத்து வாகனமாகவும் இன்று ஆட்டோரிக்ஷாக்கள் விளங்குகின்றன.

த்ரீ வீலர், டக் டக், ட்ரீஷா, ஆட்டோரிக்ஷா, ஆட்டோரிக், ட்ரைசைக்கிள், மோட்டோடாக்ஸி, பேபி டாக்சி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆட்டோரிக்ஷாக்களை பார்க்க ஒரு ரவுண்டு புறப்படுவோம். வாருங்கள்...

அறிமுகம்

அறிமுகம்

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படும் ஆட்டோரிக்ஷாக்கள் வெஸ்பா ஸ்கூட்டர் அடிப்படையிலான 1948 மாடல் பியாஜியோ அபே சி ஆட்டோரிக்ஷா அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் 1959ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை பியாஜியோவிடமிருந்து லைசென்ஸ் பெற்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆட்டோரிக்ஷாக்களை தயாரித்தது.

தென்கிழக்கு ஆசியா

தென்கிழக்கு ஆசியா

1934ம் ஆண்டு முதல் ஜப்பானிலிருந்து ஆட்டோரிக்ஷாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 1957ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜப்பானிய நிறுவனமான டைட்சூவின் மிட்ஜெட் சரக்கு ஆட்டோரிக்ஷா அடிப்படையிலான ஆட்டோரிக்ஷா உதிரிபாகங்களாக தருவித்து தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆட்டோரிக்ஷாவில் 10 எச்பி திறன் கொண்ட 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிந்தது. 1960ல் ஜப்பானில் மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டது.

ஆப்ரிக்கா

ஆப்ரிக்கா

கென்யாவின் பல நகரங்களில் டக் டக் ஆட்டோரிக்ஷாக்களை காண முடியும். ஆனால், அங்குள்ள பல மலைபாங்கான பகுதிகளில் ஆட்டோரிக்ஷாக்கள் இயக்கப்படுவதில்லை.

கம்போடியா

கம்போடியா

கம்போடியாவில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷாக்கள் மோட்டார்சைக்கிள்களுடன் இணைக்கும் விதத்தில் தனி கேபின் கொண்டதாக இருக்கிறது. அங்குள்ள பல முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக குறைவாகவே இருப்பதால், இப்போதும் இதுபோன்ற ஆட்டோரிக்ஷாக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தோனேஷியா

இந்தோனேஷியா

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் மோட்டார்சைக்கிளில் பின்புறத்தில் ஆட்டோரிக்ஷா போன்று இருக்கை வசதியுடன் வடிவமைக்கப்படுகிறது. இது பென்டர் என்று அழைக்கப்படுகிறது. ஜகார்த்தாவில் மட்டும் இந்த ஆட்டோரிக்ஷா பஜாஜ் என்று அழைக்கப்படுகிறது.

நேபாளம்

நேபாளம்

1980ம் முதல் 1990 வரையிலும் நேபாள நாட்டில் ஆட்டோரிக்ஷாக்கள் மிகவும் பிரபல போக்குவரத்து சாதனமாக இருந்து வந்தன. 2000ல் அங்கு ஓடிய 600 ஆட்டோரிக்ஷாக்களை இயக்குவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. அங்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆட்டோரிக்ஷாக்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நகரங்களில் ஆட்டோரிக்ஷா போக்குவரத்து மிகவும் பிரபலமாக இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த வெஸ்பா பிராண்டு ஆட்டோரிக்ஷாக்கள் அங்கு பிரபலமாக இருக்கின்றன. பாகிஸ்தானின் லாகூர் நகரம் சிஎன்ஜி ஆட்டோரிக்ஷாக்கள் அதிகளவில் இருக்கின்றன. வரும் 2015ம் ஆண்டில் அந்நாட்டில் ஓடும் அனைத்து ஆட்டோரிக்ஷாக்களும் சிஎன்ஜியில் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. சந்த் கரி என்றும், சிங்சி என்றும் அஹ்கு அழைக்கின்றனர்.

இலங்கை

இலங்கை

இலங்கையில் பெரும்பாலான நகரங்களில் ஆட்டோரிக்ஷாக்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோரிக்ஷாக்கள் இந்தியாவின் பஜாஜ் ஆட்டோரிக்ஷாவில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலேயாகும். பியாஜியோ பிராண்டு ஆட்டோரிக்ஷாக்களும் அங்கு மெல்ல அதிகரித்து வருகின்றன.

தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்தின் சியாங்மய் நகரில் போலீசாரின் ஆஸ்தான வாகனமாக ஆட்டோரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு டக் டக் ஆட்டோரிக்ஷாக்களை டுக் டுக் என்றும் அழைக்கின்றனர். பேங்காக் உள்பட பெரும்பாலான நகரங்களில் ஆட்டோரிக்ஷாக்கள் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயன்படுகின்றன. மோனிகா மோட்டார்ஸ் உள்பட தாய்லாந்தை சேர்ந்த சில நிறுவனங்கள் ஆட்டோரிக்ஷாக்களை தயாரிக்கின்றன.

 ஐரோப்பா

ஐரோப்பா

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மலிவான போக்குவரத்து சாதனமாக ஆட்டோரிக்ஷாக்கள் மாறின. முதலில் சரக்கு வாகனமாகவும், பின்னர் பயணிகள் வாகனமாக அங்கு பயன்படுத்தப்பட்டன. குறுகிய சாலைகள், குறைந்த தூரத்திற்கான மிக மலிவான போக்குவரத்து சாதனமாக இருந்ததால், மெல்ல ஆட்டோ ரிக்ஷாக்கள் பிற நாடுகளுக்கும் அடியெடுத்து வைக்க துவங்கின.

இந்தியாவில்...

இந்தியாவில்...

மத்திய பிரதேசத்தில் இயக்கப்பட்ட பழைய மாடல் ஆட்டோரிக்ஷா.

இந்தியாவில்...

இந்தியாவில்...

சென்னையிலும் ஆட்டோரிக்ஷாக்களின் போக்குவரத்து இன்றிமையாததாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

தாய்லாந்தில் போலீஸ் வாகனமாக ஆட்டோரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

கியூபாவிலும் ஆட்டோரிக்ஷாக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

டாக்கா

டாக்கா

வங்கதேச தலைநகரிலும் ஆட்டோரிக்ஷாக்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

எத்தியோபியாவில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷாவின் படம்.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

எல் சால்வேடார் நாட்டில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷாவின் படம்.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

பிலிப்பைன்ஸ் நாட்டின் டுமாகுவேட் நகரில் இயக்கப்படும் ஆட்டோரிக்ஷா.

உலகம் முழுவதும் ஆட்டோரிக்ஷாக்கள் ஒரு பார்வை

உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடாக திகழும் சீனாவிலும் போக்குவரத்தில் ஆட்டோரிக்ஷாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அமெரிக்கா

அமெரிக்கா

2006ம் ஆண்டில் அமெரிக்காவில் முதல்முறையாக ஆட்டோரிக்ஷாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இன்றைய அவசர உலகில் போக்குவரத்தில் ஆட்டோரிக்ஷாக்களின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

Most Read Articles
English summary
Autorickshaws around the world. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X