பஜாஜ் நிறுவனம் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா - ரூ.2.7 லட்சம் பரிசு!

பஜாஜ் பல்சர் நிறுவனம் இரண்டாவது ஆண்டாக ஸ்பீடு திருவிழா என்ற பெயரில் பைக் ரேஸ் நடத்துகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் முறையாக ஸ்பீடு திருவிழாவை நடத்தியது. இதில் பல்சர் பைக்குகளுக்கான ரேஸ், ஸ்டண்ட் ஷோ, மியூசிக் ஷோ, உணவுத் திருவிழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் என இளைஞர்களுக்கான பிரத்யேக விழாவாக பஜாஜ் நிறுவனம் நடத்தியது.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

பல்சர் ஸ்பீடு திருவிழா தற்போது இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 நகரங்களில் நடக்கிறது. இதற்கான நிகழ்ச்சி நிரலையும் பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

புது டெல்லியின் குர்கான் நகரில் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கி நடக்கும் இத்திருவிழாவில் பஜாஜ் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள் மாடல்களை பார்வைக்கு வைப்பதோடு, இருசக்கர வாகனங்களுக்கான தேசிய பந்தயத்தையும் நடத்துகிறது.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

இதில் ரேஸ் மட்டுமல்லாது, ஸ்டண்ட் ஷோக்கள், லேசர் ஷோ, ஸ்டண்ட் வகுப்புகள், உணவுத் திருவிழா, சைக்கிள் ஸ்டண்ட் ஆகிய நிகழ்ச்சிகளோடு ரகு தீக்‌ஷித், இந்தியன் ஓசியன், ரஃப்தார் போன்ற முன்னணி இசைக்குழுவினரின் லைவ் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

200சிசி மற்றும் அதற்கு மேலான திறன் கொண்ட பைக்குகள், இந்த பந்தயத்தில் பங்கேற்கலாம். பல்சர் ஆர்எஸ்200, என்எஸ்200, ஏஎஸ்200 மற்றும் பல்சர் 220 ஆகிய மாடல்களோடு மற்ற 200சிசி பைக்குகளும் பங்கேற்க தகுதியானவை.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

ஹைதராபாத், குர்கான், சென்னை, பெங்களூரு, மும்பை, புனே மற்றும்

கோவை நகரங்களில் நடக்கும் பந்தயங்களில் அடையாளம் காணப்படும் சிறந்த 36 பைக் ரேசர்களை தேர்ந்தெடுத்து, கோவையில் நடக்க இருக்கும் இறுதிப் பந்தயத்திற்காக பயிற்சி அளிப்பதோடு, அவர்களுக்கு தங்குமிடம், பயணச் செலவு ஆகியவற்றையும் பஜாஜ் நிறுவனமே தன் சொந்த செலவில் மேற்கொள்ள உள்ளது.

பஜாஜ் நடத்தும் 2ஆம் ஆண்டு பைக் பந்தய திருவிழா!

கோவை ‘கரி மோட்டார் ஸ்பீடுவே' மைதானத்தில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு பல்சர் கோப்பை மற்றும் ரூ. 2,70,000 பரிசாக அளிக்கப்பட உள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தயம் நடக்கும் இடம் மற்றும் கால அட்டவனை:

பந்தயம் நடக்கும் இடம் மற்றும் கால அட்டவனை:

1. குர்கான் - 26 பிப்ரவரி, மதியம் 2 முதல் இரவு 9 வரை

2. ஹைதராபாத் - 5 மார்ச், மதியம் 2 முதல் இரவு 9 வரை

3. சென்னை - 11 மார்ச். மதியம் 2 முதல் இரவு 9 வரை

4. பெங்களூரு - 19 மார்ச், மதியம் 2 முதல் இரவு 9 வரை

5. மும்பை & புனே - 2 ஏப்ரல், காலை 11 முதல் மாலை 6 வரை

6. கோவை - 9 ஏப்ரல்

பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
The second season of the Pulsar Festival of Speed is back, and here are all the details, including what the event has to offer and location details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X