அமெரிக்க பீஸ்ட் காரை விட்டு 'இந்திய பீஸ்ட்' காருக்கு மாறுகிறார் ஒபாமா?!

By Saravana

இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிபர் ஒபாமா தனது உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களின்போது அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட தி பீஸ்ட் காரை பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் குடியரசு தலைவரின் காரில் ஒன்றாக வருவது வழக்கம்.

எனவே, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பீஸ்ட் காரை விட்டு விட்டு, முதல்முறையாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காரில் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதி நவீன கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொடர்பு வசதிகள் கொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் லிமோசின் கார் பற்றிய சுவையான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மீடியாவுக்கு கைவலி ஏற்படுத்திய கார்

மீடியாவுக்கு கைவலி ஏற்படுத்திய கார்

கடந்த 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவரானதும் பிரணாப்புக்கு கிடைக்கப் போகும் சலுகைகளின் பட்டியலை தயாரித்து மீடியாவிற்கு கை வலி கண்டதுதான் மிச்சம். அவருக்கான சலுகைகள் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில், முக்கியமானது அவர் வசிக்கும் அதிகாரப் பூர்வமான இல்லமான குடியரசுத் தலைவர் மாளிகையைும், அவர் பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் புல்மேன் லிமோசின் ரக காரையும் பற்றியும் அதிகம் எழுதின. அம்பாசடரை விட்டு இறங்காமல் இருந்து வந்த பிரணாப் முகர்ஜி முதல்முறையாக இந்த பென்ஸ் புல்மேன் காருக்கு மாறினார்.

பார்த்து பார்த்து செய்த பென்ஸ்

பார்த்து பார்த்து செய்த பென்ஸ்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்காக இந்த கார் வாங்கப்பட்டது. ஓர் ஆண்டு காலம் எடுத்துக் கொண்டு இந்த காரை பார்த்து பார்த்து கஸ்டமைஸ் செய்து கொடுத்தது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். ஆனால், அவர் 8 மாதங்கள் பயன்படுத்திய நிலையில், புதிய குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ காராக மாறியது.

மாடல்

மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் கார்டு(W221)மாடல் கார்தான், குடியரசு தலைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது. இது மிகச்சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கும். அதாவது, ஓர் விசாலமான அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும்.

ஒபாமாவை கவரும்

ஒபாமாவை கவரும்

பீஸ்ட் கார் அளவுக்கு இல்லையெனினும், இந்த காரிலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 4 பேர் அமரும் வகையில் எதிரெதிர் இருக்கை அமைப்பு கொண்டது. அவசர காலத்தில் ஆலோசனைகள் நடத்துவதற்கான வசதி, தகவல் தொடர்பு, உட்புறத்தில் காற்றை சுத்திகரிக்கும் வசதி ஆகியவை உள்ளன. பொழுதுபோக்கு சாதனங்களும் உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் கூட இந்த கார் சேதமடையாது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் விஷேச புல்லட் ப்ரூப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. பஞ்சரானால் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. 8 ஏர்பேக்குகள் உள்ளன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

சேட்டிலைட் நேவிகேஷன் வசதி, ஏர்பேக்குகள் விரிவடைந்தால், தானியங்கி முறையில் அவசர அழைப்பு மேற்கொள்ளும் வசதி, ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி போன்றவையும் உள்ளன. மேலும், ஓர் மினி அலுவலகம் போல குடியரசுத் தலைவர் பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகளும் உண்டு. இந்த காரில் தீப்பிடிக்காத தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த எஞ்சின்

சக்திவாய்ந்த எஞ்சின்

இந்த காரில் 5513 சிசி திறன் கொண்ட (5.5 லிட்டர்) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 517 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். ஏதெனும், அவசரம் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் சிட்டாய் பறந்துவிடும் ஆற்றல் படைத்தது.

"இந்தியாவின் பீஸ்ட்"...!!

இது இந்தியாவின் பீஸ்ட் என்றே கூறலாம். எனவே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காரில் அதிபர் ஒபாமா பயணிக்கலாம் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காரில் அதிபர் ஒபாமா பயணித்தால், வேறு காரில் பயணிக்கும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய சிறப்புச் செய்தி - 1

தொடர்புடைய சிறப்புச் செய்தி - 1

தொடர்புடைய சிறப்புச் செய்தி - 2

தொடர்புடைய சிறப்புச் செய்தி - 2

Most Read Articles
English summary
American president Barack Obama may travel in the Indian president's car at this year's Republic Day parade. This is the first time he is not using his own vehicle.
Story first published: Friday, January 23, 2015, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X