அமெரிக்க அதிபர் ஒபாமா ஆடம்பர பஸ்சின் மற்றொரு பக்கம்

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவியேற்றிருக்கும் பாரக் ஒபாமா மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆட்சி செய்து வருகிறார். உலகின் எந்தவொரு ஆட்சியாளருக்கு இல்லாத அளவில் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்து வருகிறது. குறிப்பாக, அவரது பயணங்கள் உச்சக் கட்ட பாதுகாப்பு நிறைந்ததாகவே இருக்கிறது.

இதற்காகவே, அவருக்கு நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. லிமோசின் காரை பயன்படுத்தி வந்த அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காகவே ஆடம்பர பஸ் ஒன்றை கடந்த 2011ல் வாங்கினார். கொள்கை விளக்க பயணமாகட்டும் அல்லது பிரச்சார பயணங்களாட்டும் காரை தவிர்த்து இந்த பஸ்சில்தான் அவர் சென்று வருகிறார். இந்த பஸ்சில் இருக்கும் விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளை ஸ்லைடரில் பார்க்கலாம்.

ஆடம்பர பஸ்

ஆடம்பர பஸ்

டிசி நிறுவனம் போல கஸ்டமைஸ் செய்வதில் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹெம்பில் பிரதர்ஸ் கோச் நிறுவனம் இந்த சொகுசு பஸ்சை சிறப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கட்டிக் கொடுத்தது.

 மல்டி ஆக்ஸில்

மல்டி ஆக்ஸில்

ஏராளமான இடவசதி கொண்ட இந்த பஸ் பின்புறம் இரண்டு ஆக்சில்களை கொண்டது.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த பஸ்சில் 500 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பவர்ஃபுல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அவசர சமயங்களில் விரைவாக செல்வதற்கு ஏதுவாக இதன் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

ரன் பிளாட் டயர்

ரன் பிளாட் டயர்

இந்த பஸ்சில் ரன் பிளாட் டயர் பொருத்தப்பட்டிருக்கிறது. பஞ்சர் அல்லது குண்டுவெடிப்பில் சேதமடைந்தால் கூட இந்த பஸ்சை ஓட்டிச் செல்ல முடியும்.

புல்லட் புரூப்

புல்லட் புரூப்

இந்த பஸ் குண்டு துளைக்காத வசதிகளை கொண்டது. முன்புற வைன்ட்ஷீல்டு முதல் பஸ் முழுவதும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 தொடர்பு வசதிகள்

தொடர்பு வசதிகள்

அவசர சமயத்தில் உயரதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒன் டச் தொலைதொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்டர்நெட் வசதியும் உண்டு.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இந்த பஸ்சை ராணுவ தலைமையகம் செயற்கைகோள் மூலம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 டிரைவருக்கு சிறப்பு பயிற்சி

டிரைவருக்கு சிறப்பு பயிற்சி

அமெரிக்க எப்பிஐ புலனாய்வு அமைப்பிடம் சிறப்பு பயிற்சி பெற்றவர் இதில் டிரைவராக பணியாற்றுகிறார்.

வசதிகள்

வசதிகள்

மீட்டிங் ஹால், கிச்சன், மாஸ்டர் பெட்ரூம், பாத்ரூம், டாய்லெட் என அனைத்து வசதிகளுடன் ஒரு நடமாடும் சொகுசு பங்களாவாக இருக்கிறது இந்த ஆடம்பர பஸ்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

கண்ணி வெடித் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொருட்டு இதன் அடிப்பாகம் விசேஷ உலோகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தீப்பிடிக்காத தொழில்நுட்பமும் உண்டு.

இதை மட்டும் கேட்டுடாதீங்க

இதை மட்டும் கேட்டுடாதீங்க

ரூ.5 கோடிக்கும் அதிகமான தொகையை கொடுத்து இந்த பஸ்சை அமெரிக்க பாதுகாப்பு துறை வாங்கியது.

Most Read Articles
English summary
American President Barack Obama used the bus on a nation wide tour in 2011. He also used the same bus in 2012 during his re-election campaign. The US president's bus is a regular bus in terms of technicalities. It is powered by a 500bhp engine and has two rear axles. What makes this special is its unique features and design. Have an inside look in to Barack Obama's bus in the photo feature below.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X