ஹார்லி டேவிட்சனின் சுவாரஸ்ய வரலாற்றுத் தகவல்கள்

உலக அளவில் அதிகம் போற்றப்படும் மோட்டார்சைக்கிள் பிராண்டாக ஹார்லி டேவிட்சன் திகழ்கிறது. ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் ஆண்களுக்கானது என்ற பிம்பம் மாறி, இப்போது மங்கையரின் மனம் கவர்ந்த பைக்கைகாக மாறியிருக்கிறது.

டிசைன், தரம், பாரம்பரியத்தை தாங்கி வலம் வந்து கொண்டிருக்கும் ஹார்லி டேவிட்சன் பற்றிய 101 உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

மொத்தம் 4 பாகங்களாக வழங்க இருக்கிறோம். வார இறுதியை குதூகலமாக்கும் விதத்தில், ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு கூடுதல் கவர்ச்சியை எடுத்தியம்பிய கட்டழகிகளுடன் சுவாரஸ்ய தகவல்களை வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹார்லியின் துவக்க கால நிகழ்வுகள் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்ளலாம்.

முதல் எஞ்சின்

முதல் எஞ்சின்

1901ம் ஆண்டு சைக்கிளில் பொருத்துவதற்கான மாதிரி எஞ்சின் ஒன்றினை ஹார்லி டேவிட்சன் நிறுவனர் வில்லியம் எஸ் ஹார்லி உருவாக்கினார்.

முதல் ஆலை

முதல் ஆலை

முதல்முதலில் 10க்கு 15 அடி அளவு கொண்ட இடத்தில்தான் ஹார்லியின் முதல் பைக் தொழிற்சாலை செயல்பட துவங்கியது.

 முதல் கார்புரேட்டர்

முதல் கார்புரேட்டர்

முதலாவது கார்புரேட்டரை ஹார்லி டேவிட்சன்தான் உருவாக்கியது. தக்காளி கேனை அடிப்படையாக வைத்து இந்த கார்புரேட்டர் உருவாக்கப்பட்டது.

 முதல் பைக்

முதல் பைக்

ஹார்லி டேவிட்சனின் முதல் பைக் தயாரிப்பின் சீரியல் நம்பர் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. சைலென்ட் கிரே ஃபெலோ என்று பெயரிடப்பட்ட அந்த பைக் ஒரிஜினல் பேரிங்குகளுடன் 1.60 லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

 முதல் டீலர்

முதல் டீலர்

சிகாகோவை சேர்ந்த சி.எச்.லாங்தான் ஹார்லி டேவிட்சன் முதல் டீலர். 1904ல் வர்த்தகம் துவங்கப்பட்டது.

முதல் ரேஸ் வெற்றி

முதல் ரேஸ் வெற்றி

1905ல் சிகாகோவில் நடந்த 15 மைல் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் முதல் வெற்றியை ஹார்லி டேவிட்சன் பைக் பதிவு செய்தது.

இடமாற்றம்

இடமாற்றம்

1906ல் ஹார்லியின் ஆலை ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டதாக தெரியவந்ததால், 28 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட புதிய இடத்திற்கு ஹார்லி ஆலை மாற்றப்பட்டது.

அடுத்த வெற்றி

அடுத்த வெற்றி

1908ல் நியூயார்க்கில் நடந்த கேட்ஸ்கில் மவுண்டெயின்ஸ் ராலி பந்தயத்தில் வால்டர் டேவிட்சன் 1000க்கு 1000 புள்ளிகளை வெற்றி பெற்றார்.

போலீஸ் வேலை

போலீஸ் வேலை

1908ம் ஆண்டு டெட்ராய்ட் போலீசார் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை ரோந்து பணிகளுக்காக பயன்படுத்த துவங்கினர்.

முதல் வி ட்வின்

முதல் வி ட்வின்

1909ம் ஆண்டு முதல் வி ட்வின் எஞ்சின் கொண்ட ஹார்லி பைக்கின் தயாரிப்பு துவங்கியது.

முதல் சின்னம்

முதல் சின்னம்

1910ல் தான் முதன்முறையாக ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் பிரபலமான ‘Bar and Shield' சின்னம் பயன்படுத்தப்பட்டது.

பிரம்மாண்ட தலைமையகம்

பிரம்மாண்ட தலைமையகம்

வெகுவேகமாக பிரபல்யமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 1912ல் மிலாக்கியில் 6 அடுக்குகள் கொண்ட ஜுனாயு அவென்யூ தலைமை அலுவலகத்தை கட்டியது.

 உற்பத்தி வேகம்

உற்பத்தி வேகம்

1913ம் ஆண்டு முதல் ஹார்லி டேவிட்சன் பைக் உற்பத்தி ஆண்டுக்கு 17,000 ஆக உயர்ந்தது.

முதல் ஜாக்கெட்

முதல் ஜாக்கெட்

ஹார்லி டேவிட்சன் பிராண்டு உடைகள் 1914ல் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், அந்த நிறுவனத்தின் ரேஸ் அணி வீரர்களுக்கு மட்டும் முதலில் வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போர்

1914 முதல் 1918 வரை முதலாம் உலகப் போரில் அமெரிக்க படையினர் பயன்படுத்துவதற்காக சுமார் 20,000 பைக்குகளை ஹார்லி டேவிட்சன் வழங்கியது. அதாவது ஹார்லி உற்பத்தி செய்த பாதிக்கும் மேற்பட்ட பைக்குகள் அமெரிக்க ராணுவத்துக்கே வழங்கப்பட்டது. இவை ரேடியோ தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பொருத்தும் வசதிகள் கொண்டதாக இருந்தன.

 பிரத்யேக இதழ்

பிரத்யேக இதழ்

ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக இதழ் ஒன்றும் 1916ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டது. ‘The Harley-Davidson Enthusiast' என்ற அந்த இதழ்தான் உலகின் நீண்ட காலமாக வெளிவந்த மோட்டார்சைக்கிள் இதழ் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஹார்லிக்கு சோதனை

ஹார்லிக்கு சோதனை

1918ம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி மோசமான வானிலை காரணமாக வழி தவறிய அமெரிக்க வீரர் ராய் ஹோல்ட்ஸ் ஜெர்மனிக்குள் தவறுதலாக சென்றுவிட்டார். அவரையும், ஹார்லி டேவிட்சன் பைக்கையும் பிடித்த ஜெர்மனி படையினர், ஜெர்மனிக்குள் நுழைந்த முதல் அமெரிக்க வீரராக அவரை அறிவித்தது.

பிரபலங்களின் போஸ்

பிரபலங்களின் போஸ்

1918ல் சியாட்டில் நகரில் இருந்த ஹார்லி டேவிட்சன் டீலர் ஒருவர் பிரபல ஓவியரான டிரிக்ஸி ப்ரகனன்சாவை ஹார்லி பைக்குடன் இணைந்து போஸ் கொடுக்க அழைத்தது. இதைத்தொடர்ந்து, எலிசபெத் டெய்லர், வில்லிஸ், ஜெ லெனோ உள்ளிட்டோர் ஹார்லி பைக்குளுடன் போஸ் கொடுத்ததோடு, சிலர் சொந்தமாகவும் வாங்கி பயன்படுத்த துவங்கினர்.

ட்வின் பைக்

ட்வின் பைக்

ஹார்லியின் அனைத்து பைக்குகளும் ட்வின் எஞ்சின் பைக்குகளும் வி ட்வின் எஞ்சின் கொண்டதாக வரவில்லை. 1919-22ல் உற்பத்தி செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்போர்ட் மாடல் படுக்கை வாட்டு ட்வின் எஞ்சினுடன் உற்பத்தி செய்யப்பட்ட மாடலாகும்.

உலகின் ஜாம்பவான்

உலகின் ஜாம்பவான்

1920ல் உலகின் அதிகம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமையை ஹார்லி பெற்றது. 67 நாடுகளில் 2,000 டீலர்களை கொண்டிருந்தது.

அசத்திய ஹார்லி ரேஸர்

அசத்திய ஹார்லி ரேஸர்

1920ம் ஆண்டு ஹார்லி ரேஸ் அணியின் முதல் பந்தய வீரராக விளங்கிய லெஸ்லி ரெட் பார்ஹர்ஸ்ட் என்பவர் 61 கியூபிக் இஞ்ச் மோட்டார்சைக்கில் பந்தயத்தில் முந்தைய 23 சாதனைகளை முறியடித்து வெற்றி வாகை சூடினார்.

100 கிமீ வேகம்

100 கிமீ வேகம்

1921ல் முதன்முறையாக மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் 100 கிமீ வேகத்தை கடந்து ஹார்லி டேவிட்சன் பைக் புதிய சாதனை புரிந்தது.

பிரத்யேக டிசைன்

பிரத்யேக டிசைன்

1925ல் ஹார்லியின் பெட்ரோல் டேங்குகள் tear drop என்ற புதிய டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டன. இப்போதும், பல கஸ்டமைஸ் பைக் வடிவமைப்பாளர்கள் tear drop பெட்ரோல் டேங்க்கை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கின்றனர்.

முன்சக்கரத்துக்கும் பிரேக்

முன்சக்கரத்துக்கும் பிரேக்

1928ல் முதல்முறையாக முன்பக்க சக்கரங்களிலும் பிரேக்குகளை பொருத்தி பைக்குகளை வெளியிட்டது ஹார்லி டேவிட்சன்.

பிளாட்ஹெட் எஞ்சின்

பிளாட்ஹெட் எஞ்சின்

முதல் படுக்கை அமைப்பு ஹெட் கொண்ட எஞ்சினை 1929ல் அறிமுகம் செய்தது ஹார்லி.

தொடரும்

தொடரும்

ஹார்லி டேவிட்சன் வரலாற்று சுவாரஸ்யங்கள் தொடரும்...

Most Read Articles
English summary
Undoubtedly possessing the best curves on the planet, the HARLEY, takes you on a ride like no other. So in a typical scenario, what happens when you add exquisite women into the mix? Look through our gallery to find out!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X