லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - அக்கம் பக்கத்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்..!

Written By:

கர்நாடக மாநில தேசிய செடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து, உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏன் இந்த மகிழ்ச்சி என்கிறீர்களா? அதற்கான விடையை வரும் ஸ்லைடர்களில் காணுங்கள்.

கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதிக்கு அருகே கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதை கேள்விப்பட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்து மக்களுக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. காரணம் விபத்துக்குள்ளான லாரி மதுக்கடைகளுக்கு பீர் உள்ளிட்ட மதுபானங்களை ஏற்றி வந்த லாரியாகும்.

இந்த லாரியில் இருந்த மதுபான பண்டல்கள் சாலையெங்கும் சிதறி கிடந்துள்ளது.
இதில் உடைபடாத பீர் உள்ளிட்ட மதுபான பாட்டில்களை எடுக்க அங்கிருந்த மக்கள் பலரும் அந்த இடத்தில் குவிந்தனர்.

ஆளாளுக்கு தங்கள் கைக்களுக்கு கிடைத்த 10, 15 பாட்டில்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அள்ளிச்சென்றனர். பெரும் திரளான பேர் உடையாத பாட்டில்களை சேகரிக்க குவிந்ததால் அங்கு 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அது பாட்டில் சேகரிக்க வந்தவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. காவல்துறையினர் வருவதற்குள் அங்கிருந்த மதுவகைகளை அள்ளிச்சென்றதை பார்க்க முடிந்தது.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்று இவ்வளவு பேருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் அந்த வழியாக கடந்து சென்றவர்களுக்கு வேடிக்கை மற்றும் வினோத உணர்வை ஏற்படுத்தியாக சிலர் கூறினர்.

நல்லவேளையாக விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் சாலையில் கொட்டியும், பலரால் எடுத்துச்செல்லப்பட்டதாலும் நாசமாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து குடிமகன்கள் பாட்டில்களை அள்ளிச்செல்லும் காட்சிகளை ஒருவர் வீடீயோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை மேலே காணுங்கள்..

English summary
Read in Tamil about liquor lorry upsets in tumkur, karnataka.
Please Wait while comments are loading...

Latest Photos