பார்க்கிங் வசதி இருந்தால் புதிய கார் வாங்க அனுமதி: பீஜிங் நிர்வாகம் பரிசீலனை

அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிலும், சீனத் தலைநகர் பீஜிங் போக்குவரத்து நெரிசலால் அதிக நெருக்கடியை சந்தித்து வருகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்தும், சுற்றுச்சூழலும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு உடனடியாக தீர்வு காணும் முயற்சிகளில் பீஜிங் போக்குவரத்து துறை இறங்கியுள்ளது. புதிய கார் வாங்குவதை தடுக்கும் வகையிலான புதிய சட்டங்களை அமல்ப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

திணறும் பீஜிங்

திணறும் பீஜிங்

பீஜிங் நகரில் மட்டும் 5 மில்லியன் வாகனங்கள் இருக்கின்றனவாம். ஆனால், வாகனங்களை நிறுத்துவதற்கு 7,41,090 பார்க்கிங் இடவசதி மட்டும் அந்த நகரத்தில் உள்ளதாம். இதனால், வாகனங்கள் கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படுவதும் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பார்க்கிங் லாட்டுகள்

புதிய பார்க்கிங் லாட்டுகள்

பீஜிங் நகரில் அமைந்திருக்கும் பழைய வீடுகள் அனைத்திலும் பார்க்கிங் வசதி இல்லை. எனவே, புதிய பார்க்கிங் வளாகங்களை அமைப்பதற்கும் பீஜிங் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற அளவுக்கு போதாது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனவாம்.

போலீசுக்கு தலைவலி

போலீசுக்கு தலைவலி

வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் கண்ட நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, எதிரெதிர் வீடு மற்றும் வணிக நிறுவனத்தாருக்கும், கார் உரிமையாளர்களுக்கும் கடும் வாக்குவாதமும், சண்டையும் ஏற்படுவதும் போலீசாருக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

வீட்டில் கார் நிறுத்துவதற்கான வசதி இருந்தால் மட்டுமே இனி புதிதாக கார் வாங்குவதற்கு அனுமதிப்பது என்ற முடிவை பீஜிங் நிர்வாகம் எடுத்துள்ளதாம். இல்லையெனில், கார் நிறுத்துவதற்கான இடம் இருப்பதை உறுதி செய்யும் சான்றிதழை புதிய கார் வாங்கும்போது காண்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை விரைவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியையும் அந்நாட்டு அரசுடன் இணைந்து பீஜிங் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வேயில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளன. ஒரு சாரார் வேண்டும் என்றும் மற்றொரு சாரார் வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பழைய சட்டம்

பழைய சட்டம்

வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்க முடியும் என்ற சட்டத்தை 1988ம் ஆண்டு சீன அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தால் வாகனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சட்டம் 2004ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இங்கேயும் தேவைதான்...

இங்கேயும் தேவைதான்...

பீஜிங்கில் மட்டுமின்றி நம் நாட்டின் முக்கிய நகரங்களிலும் இந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் பெரும் பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற சட்டங்களை இப்போதே கொண்டு வந்தால் ஓரளவு வாகனப் பெருக்கம் மற்றும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

Source:Globaltimes.cn

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X