மஹிந்திரா கவச வாகனத்தை வாங்கிய பெங்களூர் போலீஸ்: ஃபேஸ்புக்கில் பெருமிதம்!

இலகு ரக மஹிந்திரா கவச வாகனத்தை பெங்களூர் மாநகர போலீசார் வாங்கியுள்ளனர். மஹிந்திரா மார்க்ஸ்மேன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இலகு ரக கவச வாகனத்தை ஏற்கனவே மும்பை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூர் போலீசாரும் இந்த கவச வாகனத்தை வாங்கியுள்ளதை ஃபேஸ்புக் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதத்தில் விசேஷ வசதிகள் கொண்ட இந்த மஹிந்திரா கவச வாகனம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 முதல் மாடல்

முதல் மாடல்

இலகு ரகத்திலான நம் நாட்டின் முதல் கவச வாகன மாடலாக மஹிந்திரா மார்க்ஸ்மேன் குறிப்பிடப்படுகிறது. துணை ராணுவம் மற்றும் போலீசார் பயன்படுத்தும் வகையிலான விசேஷ வசதிகள் கொண்டது.

குண்டு துளைக்காத வாகனம்

குண்டு துளைக்காத வாகனம்

கையெறி குண்டுகள், துப்பாக்கித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் விசேஷ உடலமைப்பு கொண்டது. இதன் கண்ணாடிகளும் குண்டு துளைக்காத அம்சஙகள் கொண்டது. இதன்மூலம், எதிரிகளை எளிதாக நெருங்கி தாக்குதல் நடத்த முடியும். இதன் அடிப்பாகமும் வெடிகுண்டு மற்றும் கண்ணி வெடி தாக்குல்களை சமாளிக்கும் திறன் கொண்டது.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த மினி கவச வாகனத்தில் 270 டிகிரி கோணத்தில் திருப்பும் வசதியுடன் கூடிய எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள் அமர்ந்து கொண்டு தாக்குதல் நடத்த முடியும்.

வாகனத்தை இயக்கும் வசதி

வாகனத்தை இயக்கும் வசதி

ஓட்டுனர் மற்றும் இணை ஓட்டுனர் மூலமாக இந்த வாகனத்தை இயக்க முடியும். பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலமாக வாகனத்தின் பின்புற நிகழ்வுகளை திரையில் துல்லியமாக பார்த்து வாகனத்தை செலுத்த முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மினி கவச வாகனத்தில் பிஎஸ்-3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட 2.5 லிட்டர் சிஆர்டிஇ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 228 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும், இந்த வாகனம், 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.

Photo credit: wikipedia

எடை

எடை

இந்த வாகனம் 2,600 கிலோ எடை கொண்டது. கூடுதலாக 600 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த வாகனத்தில் ஓட்டுனர், இணை ஓட்டுனர் உள்பட 6 பேர் செல்வதற்கான இடவசதி கொண்டிருக்கிறது.

Photo credit: wikipedia

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை செல்லும். ரன்ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், வெடிகுண்டு தாக்குதல்களில் டயர் பஞ்சரானாலும், வாகனத்தை குறிப்பிட்ட தூரம் வரை இயக்க முடியும். அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mahindra Marksman is India’s first armoured capsule-based light bulletproof vehicle to provide protection to the personnel of defence, paramilitary and police forces against small arms fire and grenade attacks. It has capability to be used in counter terrorist as well as conventional roles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X