உலகின் அதிவேக மனிதன் பில் வார்னர் விபத்தில் மரணம்!

இருசக்கர வாகன உலகின் அதிவேக மனிதனாக வர்ணிக்கப்படும் மோட்டார்சைக்கிள் பந்தய வீரர் பில் வார்னர் நேற்றுமுன்தினம் நடந்த கோர விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 44.

புளோரிடாவை சேர்ந்த அவர் கடந்த 2011ம் ஆண்டு மணிக்கு 500 கிமீ வேகத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி உலகின் அதிவேக சாதனையை படைத்தவர்.

சாதனை உத்வேகம்

சாதனை உத்வேகம்

அமெரிக்காவின் மெயினி ரேஸ் டிராக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முந்தைய சாதனையை முறியடிப்பதை இலக்காக கொண்டு தனது மோட்டார்சைக்கிளை சீற விட்டார். மணிக்கு 415 கிமீ வேகத்தில் சென்றபோது அவரது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இழப்பு மோட்டார்சைக்கிள் பந்தய உலகத்துக்கு பேரிழப்பு என லோரிங் டைமிங் அசோசியேஷன் தலைவர் டிம் கெல்லி தெரிவித்தார்.

உலக சாதனை

உலக சாதனை

கடந்த 2011ம் ஆண்டு டர்போசார்ஜர் எஞ்சின் கொண்ட சுஸுகி ஹயபுசா மோட்டார்சைக்கிளில் மணிக்கு 500 கிமீ வேகத்தில் சென்று உலக சாதனை படைத்தார். அவரது சாதனையை யாரும் இதுவரை தொட முடியவில்லை.

சுயநினைவு

சுயநினைவு

அமெரிக்காவின் மெயினியில் உள்ள கைவிடப்பட்ட விமானப் படை தளத்தின் ஓடுபாதையில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்தவுடன் பில் வார்னர் சுயநினைவுடன் இருந்துள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக மருத்துவமனையில் மரணத்தை தழுவிவிட்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம்

விபத்துக்கான காரணம்

கடந்த முறை உலக சாதனை நிகழ்த்தியபோது ஓடுபாதையின் 2.4 கிமீ தூரத்தை பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆனால், இந்த முறை 1.6 கிமீ தூரத்திலேயே சாதனை வேகத்தை எட்டுவதற்காக அதிக வேகத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தியுள்ளார். எனவேதான், அவர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

புளோரிடாவில் அதிர்ச்சி

புளோரிடாவில் அதிர்ச்சி

பில் வார்னரின் மரணம், புளோரிடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பில் வார்னர் சாதனை வீடியோ

மயிர்க்கூச்செரியும் அவரது வேகத்தை காணொளியில் காணுங்கள்.

Most Read Articles
English summary
Bill Warner died on Sunday after losing control and zooming off a runway while trying to break his speed record at Loring Air Force Base in Limestone, Maine. Bill Warner (44), a resident of Florida, USA has set a new speed record while riding a turbocharged Suzuki Hayabusa in July 2011.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X