முதல்முறையாக வெற்றிகரமாக பறந்த பறக்கும் டிரக்!!

By Saravana

அமெரிக்க ராணுவத்துக்காக பறக்கும் டிரக் ஒன்று சமீபத்தில் வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் போன்றே இந்த டிரக் இருந்த இடத்திலிருந்து மேலேழும்பி பறக்கும் வசதி கொண்டது.

பிளாக்நைட் டிரான்ஸ்ஃபார்மர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய பறக்கும் டிரக் தற்போது கான்செப்ட நிலையிலேயே இருக்கிறது. அடுத்த கட்ட சோதனைகளில் வெற்றி பெறும்போது இது ராணுவ பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படும்.

வடிவமைப்பாளர்

வடிவமைப்பாளர்

அமெரிக்க ராணுவத்திற்காக புதிய வாகன மாதிரிகளை உருவாக்கி வரும் அட்வான்ஸ்டு டேக்டிஸ் என்ற நிறுவனம் இந்த புதிய டிரக்சை வடிவமைத்துள்ளது. இந்த டிரக்சில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஓடுதளம் வேண்டாம்

ஓடுதளம் வேண்டாம்

இந்த பறக்கும் டிரக் மேலே எழும்புவதற்காக ஓடுதளம் தேவையில்லை. vertical takeoff and landing (VTOL) என்று கூறப்படும் கீழே இருந்து மேலே செங்குத்தாக எழும்புவதற்கும், அதேபோன்று, செங்குத்தாக வந்து கீழே இறங்குவதற்கான வசதி கொண்டது.

சோதனை வாகனம்

சோதனை வாகனம்

கப்பல்களில் சரக்கு பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் கன்டெய்னர் போன்று தோற்றம் கொண்டிருக்கிறது. ராணுவ வீரர்களையும், சரக்குகளையும் எளிதாகவும், விரைவாகவும் கொண்டு செல்வதற்கான வாகனமாக இதனை வடிவமைத்துள்ளனர். இது 2,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

முதல் சோதனை

முதல் சோதனை

முதல்முறையாக பறந்தபோது 10 அடி உயரத்தில் இந்த டிரக் பறந்தது. இது சோதனைகளை வெற்றிகரமாக கடந்து விட்டால், வானில் 3,050 மீட்டர் உயரம் வரையில் பறக்கும். அதேபோன்று, தரையில் மணிக்கு 112 கிமீ வேகத்தில் செல்லும்.

 சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த பறக்கும் டிரக்சில் பக்கவாட்டில் தலா 4 ரோட்டர்கள் எனப்படும் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. தரையில் செல்லும்போது இந்த ரோட்டர்களை மடக்கிவிட முடியும்.

 இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

பிளாக்நைட் டிரான்ஸ்ஃபார்மரின் சிறிய மாடல் பறக்கும் டிரக் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அது பாந்தர் டிரான்ஸ்ஃபார்மர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 1,000 கிலோ எடை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

 ரிமோட் கன்ட்ரோல்

ரிமோட் கன்ட்ரோல்

இந்த பறக்கும் டிரக்சை பைலட் மூலம் இயக்கலாம் என்பதோடு, கீழே தரைக்கட்டுப்பாட்டு மையம் மூலம் ரிமோட் கன்ட்ரோல் மூலமும் இயக்கும் வசதி கொண்டது.

Most Read Articles
Story first published: Friday, April 18, 2014, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X