பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரையும் வாங்கினார் சச்சின்... !

By Saravana

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கார்கள் மீதான காதல் குறித்த ஏற்கனவே பல செய்தித் தொகுப்புகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். குறிப்பாக, பிஎம்டபிள்யூ கார்கள் அவரது இளமை காலம் முதலே, கனவு பிராண்டாக குறிப்பிட்டு வருகிறார்.

அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் பல பிஎம்டபிள்யூ கார்களை சொந்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அந்த வரிசையில், சமீபத்தில் அவரது கராஜில் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரும் இணைந்துள்ளது. ஆம், உலகின் மிகச்சிறப்பான ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக விற்பனையில் கலக்கி வரும் அந்த காரையும் வாங்கி, தான் ஒரு உண்மையான பிஎம்டபிள்யூ பக்தன் என்று நிரூபித்து இருக்கிறார்.

அறிமுகம் செய்ததே சச்சின்தான்

அறிமுகம் செய்ததே சச்சின்தான்

பிஎம்டபிள்யூ கார் பிரியரான சச்சின் டெண்டுல்கர், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு இந்த புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ததே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்க விலை

அடக்க விலை

இந்தியாவில் இறக்குமதி விற்பனை செய்யப்படும் இந்த கார் ரூ.2.29 கோடி விலையில் கிடைக்கிறது. வரிகள் உட்பட ரூ.3 கோடி வரை அடக்க விலை கொண்டது.

ஆர்வம்

ஆர்வம்

பிஎம்டபிள்யூ ஐ8 காரை கான்செப்ட் நிலையிலிருந்தே வாங்க வேண்டும் என்ற வேட்கையில் இருந்ததுடன், இந்தியாவில் அவர் கைபட இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னரே, !ரு காரையும் முன்பதிவு செய்து வைத்துவிட்டார்.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும். பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை பறக்கும். மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் அவ்வப்போது இந்த காரில் பயணித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம், பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேட்டட் பிரேக் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் போன்ற பல நவீன வசதிகளை கொண்டுள்ளது.

சிறந்த கார்

சிறந்த கார்

பிஎம்டபிள்யூ ஐ8 காரின் கையாளுமை குறித்து புகழ்ந்து தள்ளுகிறார் சச்சின். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராக இருப்பதால், இவ்வாறு கூறுகிறேன் என்று சொல்லக்கூடும். எனது நண்பர்கள் வட்டத்தில் லம்போர்கினி, போர்ஷே மெர்சிடிஸ், ஆடி, ஃபெராரி என அனைத்து வகை கார்களும் உள்ளன. அதனை ஓட்டும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லா கார்களுமே சிறந்த கையாளுமை கொண்டவைதான். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி ஐ8 காரின் ஒருபடி மேலே இருக்கிறது என்று சச்சின் கூறுகிறார்.

இன்றா, நேற்றா...

இன்றா, நேற்றா...

சிறு வயதிலிருந்தே சச்சின் பிஎம்டபிள்யூ பிரியர். இன்று பிஎம்டபிள்யூ விளம்பர தூதராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் புகழ் இல்லாத தனது இளமை காலத்தில், அவரது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் பார்க்கிங் பகுதியில் நிற்கும் பிஎம்டபிள்யூ கார்களை பார்த்து ஏக்கமும், தாகமும் கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார்.

செகண்ட் ஹேண்ட் கார்

செகண்ட் ஹேண்ட் கார்

கிரிக்கெட்டில் சற்றே பிரபலமடைந்த பின்னர் 1993ம் ஆண்டில் ஒரு செகண்ட் ஹேண்ட் பிஎம்டபிள்யூ காரை வாங்கி தனது ஆசையை தீர்த்துக் கொண்டதாக நினைவு கூர்கிறார். அப்போது புதிய பிஎம்டபிள்யூ வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்.

முதல் கார்

முதல் கார்

பிஎம்டபிள்யூ பிரியரான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாங்கிய முதல் கார் மாருதி 800. பல பிரபலங்களின் முதல் கார் என்ற பெருமை இந்த காருக்கு உண்டு. அத்துடன், விற்பனையிலும் இந்தியாவின் அதிகம் விற்பனையான மாடல் என்ற பெருமையை சில ஆண்டுகளுக்கு முன் வரை தக்க வைத்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

பென்ஸ் கார்

பென்ஸ் கார்

பிஎம்டபிள்யூ பிரியராக இருந்த சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினர் பயணிப்பதற்காக பென்ஸ் இ க்ளாஸ் கார் ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். அதிக இடவசதி கொண்ட காராக இருப்பதே, சச்சின் வாங்கியதற்கு காரணம். பென்ஸ் சி63 மற்றும் பென்ஸ் 600 எஸ்எல் ஆகிய கார்களும் உள்ளன.

பிஎம்டபிள்யூ கார்கள்

பிஎம்டபிள்யூ கார்கள்

சச்சினிடம் பிஎம்டபிள்யூ 5 சீரீஸ், எம்5 லிமிடேட் எடிசன் கார்கள் இருக்கின்றன. இதில், எம்5 லிமிடேட் எடிசன் மிகவும் பிரத்யேகமான மாடல். மொத்தமாகவே 300 கார்கள் மட்டுமே உலக அளவில் விற்பனைக்கு விடப்பட்டன. குடும்பத்துடன் விழாக்களுக்கு செல்வதற்கு இந்த கார்களில் ஒன்றை பயன்படுத்துவார்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்50டீ

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்50டீ

உலகின் அதிசக்திவாய்ந்த சொகுசு எஸ்யூவி மாடல்களில் ஒன்று. இந்த காரில் இருக்கும் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 381 எச்பி பவரை வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 5.3 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரையும், இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே முன்பதிவு செய்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரியில் சவாரி

ஃபெராரியில் சவாரி

சச்சினுக்கு வேகமாக கார் ஓட்டுவதில் அதீத மோகம் கொண்டவர். அதுவும் ஃபெராரி கார்கள் மீது தீராத தாகம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் அதிக சதங்கள்(29 சதங்கள்) சாதனையை டெண்டு்ல்கர் முறியடித்ததற்காக ஃபெராரி நிறுவனம் அந்த காரை பரிசாக வழங்கியது.

ஃபெராரிக்கு குட்பை

ஃபெராரிக்கு குட்பை

கடந்த 2011ம் ஆண்டில் தனது ஃபெராரி மடோனா காரை சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சச்சின் விற்றுவிட்டார். ஆனால், சூப்பர் கார் இல்லையென்றால் சச்சினுக்கு கை நமநம என்றிருக்கும் அல்லவா. அதற்குத்தான் புதிய நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை இறக்குமதி செய்து வாங்கினார்.

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

ஃபெராரி காரை விற்பனை செய்துவிட்டு 2011ல் நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை சச்சின் வாங்கினார். துபாயில் வைத்து இந்த கார் வலதுபக்க டிரைவிங் கொண்டதாக மாற்றப்பட்டது

 நிசான் ஜிடிஆர் தொடர்ச்சி

நிசான் ஜிடிஆர் தொடர்ச்சி

இந்த காரை இந்தியாவில் இறக்குமதியான பின்னர் நிசான் எஞ்சினியர்கள் வந்து காரை பற்றிய விபரங்களை சச்சினுக்கு கற்றுக் கொடுத்ததுடன், எஞ்சினில் சில மாற்றங்களையும் செய்து கொடுத்தனர்.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

கடந்த ஆண்டு புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுகம் செய்தார். அத்தோடு, இந்த காரின் விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

கார் அசெம்பிள்

கார் அசெம்பிள்

கடந்த ஆண்டு சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலைக்கு சச்சின் டெண்டுல்கர் விசிட் அடித்தார். அப்போது, அங்கிருந்த பணியாளர்களுடன் இணைந்து, சீருடையுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரை அசெம்பிள் செய்தார். இதிலிருந்து அவரது பிஎம்டபிள்யூ ஆர்வம் எந்தளவு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஃபார்முலா- 1 ரேஸ் ஆர்வம்

ஃபார்முலா- 1 ரேஸ் ஆர்வம்

அதிவேகத்தில் கார் ஓட்டுவது மட்டுமல்ல, அதிவேகத்தில் செல்லும் பார்முலா-1 கார்கள் மீது சச்சினுக்கு பெரிய ஈர்ப்பு உண்டு. எந்தளவு நேரம் நெருக்கடியாக இருந்தாலும், பார்முலா-1 போட்டிகளை காண தவறமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

பிடித்த சாலை

பிடித்த சாலை

மும்பை-புனே ஹைவே ஓய்வு நேரங்களில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் தனது நிசான் ஜிடிஆர் காரில் ஓர் அதிவேக ரவுண்டு போவது சச்சினுக்கு பிடித்த ஹாபியாம்.

 கார் கராஜ் மதிப்பு

கார் கராஜ் மதிப்பு

இந்த செய்தித் தொகுப்பில் பார்த்த கார்கள் தவிர்த்து, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி க்யூ7, போர்ஷே பாக்ஸ்டர், வால்வோ எஸ்80, ஃபியட் பாலியோ உள்ளிட்ட பல கார்கள் இருக்கின்றன.அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடி வரை இருக்கும் என மதிப்பு கூறப்படுகிறது.

சச்சினுடன் பிரிக்க முடியாதது

சச்சினுடன் பிரிக்க முடியாதது

சச்சினுக்கும் 10ம் எண்ணுக்கும் உள்ள தொடர்பை கீழே காணலாம்.

  • Sachin Jersey no is 10
  • Birthday- 24/April =2+4+4=10
  • Height 5ft 5 in= 5+5=10
  • World cup winning date 2/4/2011= 2+4+2+0+1+1=10
  • World cup after 28 years= 2+8=10
  • Truly 10dulkar.
  • தொடர்புடைய செய்தித் தொகுப்பு

    தொடர்புடைய செய்தித் தொகுப்பு

    'தல' டோணியின் கார் கலெக்ஷன்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
BMW i8 Hybrid Sports Car is Sachin tendulkar Newset Ride.
Story first published: Tuesday, March 22, 2016, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X