பிஎம்டபிள்யூ காரில் 82 கிமீ.,க்கு டிரிஃப்ட் செய்து கின்னஸ் சாதனை!

கடந்த பிப்ரவரி 15ந் தேதி செவர்லே கமரோ எஸ்எஸ் காரில் டிரிஃப்ட் செய்வதில் கைதேர்ந்த அப்டோ டாடோ ஃபெகாலி புதிய கின்னஸ் சாதனை படைத்தார். 11.18 கிமீ., தூரத்தை காரை டிரிஃப்ட் செய்தபடியே வெறும் 10 நிமிடங்களில் எட்டினார்.

இந்த சாதனைகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், பிஎம்டபிள்யூ காரில் புதிய டிரிஃப்ட் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 11ந் தேதி நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு பிஎம்டபிள்யூ நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ எம்-5

பிஎம்டபிள்யூ எம்-5

இந்த கின்னஸ் சாதனைக்காக பிஎம்டபிள்யூ எம்5 கார் பயன்படுத்தப்பட்டது. அதுவும் டிரிஃப்ட் கார்களுக்குண்டான எந்தவொரு மாறுதல்களும் இல்லாமலே இந்த சாதனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அமெரிக்காவின், தெற்கு கரோலினாவில் உள்ள பிஎம்டபிள்யூவின் பெர்ஃபார்மென்ஸ் மையத்தை சேர்ந்த இன்ஸ்ட்ரக்டர் ஜோஹன் ஷாவர்ட்ஸ்தான் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

மொத்த சுற்றுகள்

மொத்த சுற்றுகள்

பெர்ஃபார்மென்ஸ் மையத்திலுள்ள 841 அடி நீளம் கொண்ட பிரத்யேக களத்தில் மொத்தம் 322.5 முறை சுற்றி வந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஜோஹன். அவர் டிரிஃப்ட் செய்து ஓட்டிய மொத்த தூரம் 82.506 கிமீ.

பிஎம்டபிள்யூ எம்5 எஞ்சின்

பிஎம்டபிள்யூ எம்5 எஞ்சின்

இந்த காரில் 560 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எம்-டிசிடி டிரான்ஸ்மிஷன் துணைபுரிகிறது.

பிரத்யேக டயர்கள்

பிரத்யேக டயர்கள்

சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட எம்-5 காரில் கான்டினென்டல் கான்டிஸ்போர்ட் அல்ட்ரா ஹை பெர்ஃபெர்ஃபார்மென்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. (sizes 255/30/20 front, 295/30/20 rear).

நல்ல விஷயம்தான்

நல்ல விஷயம்தான்

இந்த நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட 20,000 டாலர் தொகை பிஎம்டபிள்யூவின் ப்ரோ ஏஎம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், இந்த நிதி 150 வெவ்வேறு அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி, நன்றி, நன்றி..!!!

நன்றி, நன்றி, நன்றி..!!!

இந்த நிகழ்வுக்கு ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்கள் மற்றும் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் ஜோஹன் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த சாதனையை சாத்தியப்பட வைத்த பிஎம்டபிள்யூ பெர்ஃபார்மென்ஸ் மையத்திற்கும், பணியாளர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

Most Read Articles
English summary
BMW M5, which recorded a sustained drift measuring 82 km! Learn more about this latest Guinness World Record below. You can also watch the teaser video that BMW made before the final official attempt was made.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X