பிஎம்டபிள்யூ ரகசிய கார் பாதுகாப்பு மையத்தில் என்னென்ன கார்கள் உள்ளது தெரியுமா?

சொகுசு கார் நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வல்லமையை எடுத்துரைப்பதற்காக உருவாக்கிய கார் மாடல்களையும், சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட அரிய வகை கார்களையும் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றன.

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரகசிய கார் பாதுகாப்பு நிலையத்தின் விபரங்களும், அங்கு பாதுகாக்கப்படும் சில கார்களின் விபரங்களும் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளன. அந்த ரகசிய கார் பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாக்கப்படும் சில முக்கிய கார்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 மிஸ்டர் பீன் கார்

மிஸ்டர் பீன் கார்

தொலைக்காட்சியில் மிஸ்டர் பீன் காமெடி பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் மிஸ்டன் பீன் பயன்படுத்தும் காரும், அதை வைத்து அவர் செய்யும் சேட்டைகளும் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில், மிஸ்டர் பீன் பயன்படுத்திய மினி கார் மாடல் இந்த பாதுகாப்பு நிலையத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான இந்த கார் தற்போது கண்ணும் கருத்துமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

02. வி16 எஞ்சின்

02. வி16 எஞ்சின்

1987ம் ஆண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வி12 எஞ்சினில் மாறுதல்களை செய்து, அதனை வி16 எஞ்சினாக மாற்றியது. அந்த பிரம்மாண்ட எஞ்சினை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் பொருத்தி ஆய்வு செய்தது. 6..7 லிட்டர் திறன் கொண்ட அந்த வி16 எஞ்சின் அதிகபட்சமாக 408 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் முன்புற எஞ்சின் பே பகுதியில் இடம் போதாமல், பின்புற டிக்கியில் இதன் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாடல் தயாரிப்பு நிலைக்கு கொண்டு வரப்படவில்லை.

03. இ36 எம்3 ஜிடி

03. இ36 எம்3 ஜிடி

1995ம் ஆண்டில் பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்த இந்த ஜிடி வகை மாடலில் மொத்தமாக 356 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இந்த காரில் இருந்த எஞ்சின் அதிகபட்சமாக 295 எச்பி பவரை அளிக்க வல்லது. தற்போது நல்ல கண்டிஷனில் உள்ள இந்த காரை வாங்க விரும்பினால், 28,000 பவுண்டுகளை கொடுக்க வேண்டியிருக்கும். இந்திய மதிப்பில் ரூ.27 லட்சம் மதிப்பு கொண்டது.

04. 3.0 சிஎஸ்எல் பேட்மொபைல்

04. 3.0 சிஎஸ்எல் பேட்மொபைல்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பெர்ஃபார்மென்ஸ் பிரிவுக்கு பெருமை சேர்த்த மாடல். பிஎம்டபிள்யூ இ9 காரின் அடிப்படையில் கூடுதல் ஆக்சஸெரீகளுடன், அதிசக்திவாய்ந்த மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டது. சாதாரண மாடலைவிட 200 கிலோ குறைவாக உருவாக்கப்பட்ட இந்த கார் 0 - 96 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் கடந்து விடும். தற்போது 1.90 லட்சம் பவுண்டு மதிப்புகளாக தெரிவிக்கப்படுகிறது.

 05. டாம் க்ரூஸ் கார்

05. டாம் க்ரூஸ் கார்

மிஷன் இம்பாசிபிள் ஹாலிவுட் படத்தில் டாம் க்ரூஸ் பயன்படுத்திய இந்த பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரும் ரகசியமான இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. 650ஐ என்ற இந்த மாடல் துபாயில் நடந்த மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பின்போது மிகவும் சேதமடைந்த நிலையில் வந்தது. அதனை புனரமைத்து, அதனை மெருகூட்டி பாதுகாத்து வருகிறது பிஎம்டபிள்யூ.

 06. லீ மான்ஸ் எக்ஸ்-5

06. லீ மான்ஸ் எக்ஸ்-5

1999ம் ஆண்டு லீ மான்ஸ் பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் 700 எச்பி பவரை வழங்க வல்ல வி12 எஞ்சின் உள்ளது. மிக கடுமையான கார் பந்தயமான லீ மான்ஸிற்காக உருவாக்கப்பட்ட இந்த காரும் தற்போது பத்திரமாகவும்,முழு பராமரிப்பிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

 07. பிஎம்டபிள்யூ ரேஸ் கார்

07. பிஎம்டபிள்யூ ரேஸ் கார்

1999ம் ஆண்டு லீ மான்ஸ் கார் பந்தயத்திற்காக பிஎம்டபிள்யூ உருவாக்கிய பந்தய வகை கார். இந்த காரிலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்ட அதே வி12 எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டது.

08. பிஎம்டபிள்யூ டர்போ

08. பிஎம்டபிள்யூ டர்போ

இந்த மாடலில் மொத்தமே இரண்டே கார்கள்தான் தயாரிக்கப்பட்டன. 1972ம் ஆண்டில் தனது சூப்பர் கார் வடிவமைப்பு வல்லமையை வெளியுலகுக்கு காட்டும் விதத்தில் இந்த கார்களை பிஎம்டபிள்யூ உருவாக்கியது. இந்த காரில் 280 எச்பி பவர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. முன்னால் செல்லும் காருக்கு மிக நெருக்கமாக சென்றால், எச்சரிக்கும் ரேடார் சாதனம், சீட் பெல்ட் போட்டால் மட்டுமே எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதிகள் இந்த காரில் இருந்தன.

09. பிஎம்டபிள்யூ இசட்3 ரோட்ஸ்டெர்

09. பிஎம்டபிள்யூ இசட்3 ரோட்ஸ்டெர்

பிஎம்டபிள்யூவின் பெருமைமிக ஸ்போர்ட்ஸ் கார் வரிசையிலான இசட்3 காரில் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 750ஐ காரின் வி12 எஞ்சினுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக 326 எச்பி பவரை இந்த எஞ்சின் வழங்கும். துரதிருஷ்டவசமாக ஒரேயொரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

10. ஜேம்ஸ்பாண்ட்டின் பிஎம்டபிள்யூ...

10. ஜேம்ஸ்பாண்ட்டின் பிஎம்டபிள்யூ...

ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் வந்த டுமாரோ நெவர் டைஸ் ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்தான் இது. இந்த காரில் விசேஷமான கண்ணாடி கூரை, ராக்கெட்டுகளை ஏவும் வசதி, சங்கிலியை அறுத்தெறியும் கருவி, எதிரிகளின் கார்களை பஞ்சராக்கும் உலோகத்தாலான கத்தி போன்ற கருவிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த காரை பின் இருக்கையிலிருந்தும் இயக்க முடியும் என்பது இதன் மற்றொரு விசேஷம். பிரேக், ஆக்சிலரேட்டர், க்ளட்ச் பெடல்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தன. மேலும், சாலையை விசேஷ கேமராக்கள் மூலமாக, சைடு மிரர்கள் மற்றும் விண்ட் ஷீல்டு மூலமாக பார்த்து ஓட்ட முடியும்.

 11. இ1 எலக்ட்ரிக் கார்

11. இ1 எலக்ட்ரிக் கார்

தற்போது ஐ வரிசையில் மின்சார கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்து வருகிறது. இதற்கு முன்னோடியாக இ1 என்ற 4 இருக்கை வசதி கொண்ட மின்சார கார் ஒன்றை தயாரித்தது. மொத்தமாகவே 6 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதுவும் தற்போது ரகசிய கார் பாதுகாப்பு மையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 12. பிஎம்டபிள்யூ எம்1

12. பிஎம்டபிள்யூ எம்1

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிராண்டில்தான் அதிசக்திவாய்ந்த கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த எம் பிராண்டிற்கு பெருமை சேர்த்த எம்1 காரும் தற்போது ரகசிய கார் பாதுகாப்பு மையத்தில் நிறுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
BMW's Top Secret Car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X