போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள் விபரம்!

By Saravana

உலகையே பரபரப்பில் ஆழ்த்தியிருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் மாயமாகி ஒரு வாரத்தை கடந்தும், இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விமானியே அந்த விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று உலகின் பல பகுதிகளிலும் பிராத்தனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், உலகின் மிக சிறப்புவாய்ந்த பெரிய விமானங்களில் ஒன்றான போயிங் 777 இவ்வாறு மாயமானது விமானப் பயணிகள் மத்தியிலும், விமான நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போயிங் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மாடலான இந்த விமானத்தை பற்றிய சில தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கம்ப்யூட்டர் டிசைன்

கம்ப்யூட்டர் டிசைன்

முதல்முறையாக முழுவதும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் விமானம் இது. 1993ல் உற்பத்தி துவங்கப்பட்ட இந்த விமானத்தை 1994ம் ஆண்டு போயிங் நிறுவனம் பறக்கவிட்டு உலகுக்கு தனது தொழில்நுட்பத்தை பரைசாற்றியது. 1995ம் ஆண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலில் சேவையை துவங்கியது. இதைத்தொடர்ந்து, எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த விமானத்தை தங்களது நிறுவனத்தின் சேவைகளில் இணைத்துக் கொண்டன.

பறக்கும் தூரம்

பறக்கும் தூரம்

இந்த விமானத்தில் 1,17,348 லிட்டர் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 9,695 கிமீ தூரம் வரை பறக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

209.11 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தில் அதிகபட்சம் 314 பயணிகள் செல்வதற்கான வசதி கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இரட்டை எஞ்சின் கொண்ட இந்த போயிங் 777 விமானத்துக்கு மூன்று பிராண்டுகளிலான எஞ்சின்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஇ90, பிராட் அண்ட் ஒயிட்னி பிடபிள்யூ4000 மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 800 ஆகிய எஞ்சின்களை தேர்வு செய்து கொள்ளலாம். மாயமான விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 800 எஞ்சின் பொருத்தப்பட்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

அதிகபட்சமாக மணிக்கு 950 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. சாதாரணமாக 905 கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

 விலை

விலை

போயிங் 777 குடும்பத்தை சேர்ந்த விமானங்கள் மாடலுக்கு தகுந்தவாறு 31.5 கோடி டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

விபத்துக்கள்

விபத்துக்கள்

இதுவரை 10 முறை விபத்துக்கள் மற்றும் அசாரணமான சம்பவங்களில் போயிங் 777 விமானங்கள் சிக்கியுள்ளன. அதில், 3 முறை மோசமான விபத்துகளையும், 3 முறை கடத்தல் சம்பவங்களையும் இவை சந்தித்துள்ளன குறிப்பிடத்தக்கதாக கூறுகின்றனர்.

Most Read Articles
Story first published: Monday, March 17, 2014, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X