அமெரிக்க அதிபருக்கான புதிய விமானத்தை தயாரிக்கும் போயிங்!

By Saravana Rajan

அமெரிக்க அதிபருக்கான புதிய விமானத்தை வடிவமைக்கும் பணிகளில் போயிங் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தற்போது ஆரம்ப கட்ட வடிவமைப்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து, விமானத்தை தயாரிக்கும் பணிகள் துவங்க இருக்கிறது போயிங். தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானத்தைவிட பல்வேறு வகையில் நவீனத்துவம் கூடியதாக இருக்கும் புதிய விமானம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

அமெரிக்க அதிபருக்கான புதிய விமானத்தை தயாரிக்கும் போயிங்!

போயிங் நிறுவனத்தின் விசேஷ பிரிவு இந்த விமானங்களை தயாரித்து வருகிறது. இந்தநிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானத்தின் ஆயுட்காலம் நெருங்கி வருவதையடுத்து, அதநவீன வசதிகளுடன் புதிய விமானத்தை தயாரிக்கும் பணிகள் துவங்கியிருக்கின்றன.

விசேஷ அம்சங்கள்

விசேஷ அம்சங்கள்

தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ விமானம் 1990ம் ஆண்டு டெலிவிரி பெறப்பட்டது. மொத்தம் இரண்டு விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று 28000 என்ற வரிசை எண்ணையும், மற்றொன்று 29,000 என்ற வரிசை எண்ணையும் கொண்டவை. இவை ஏர்ஃபோர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகின்றன.

 விமான மாடல்

விமான மாடல்

தற்போது போயிங் 747-200பிஎஸ் என்ற ரகத்தை சேர்ந்த இரண்டு விமானங்கள் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ விமானங்களாக பயன்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக புதிய விமான ரகத்தை தேர்வு செய்யும் பணி முடிந்துவிட்டது.

புதிய விமானங்கள்

புதிய விமானங்கள்

அமெரிக்க விசேஷ பாதுகாப்புப் பிரிவு புதிய விமானங்களை தயாரித்துக் கொடுக்கும்படி ஆர்டர் செய்தது. அதன்படி, தனது 747-8 மற்றும் 787 ட்ரீம்லைனர் ஆகிய இரு விமான மாடல்களை அமெரிக்க விசேஷ பாதுகாப்புப் படைப் பிரிவிடம் போயிங் நிறுவனம் வழங்கியது. இரு விமான மாடல்களையும் ஆய்வு செய்த பிறகு 747-8 விமான மாடல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆர்டர்

ஆர்டர்

அமெரிக்க அதிபருக்கான பயன்பாட்டில் இரண்டு விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று 747-8 விமானங்களை அமெரிக்க அதிபருக்காக ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

விசேஷ அம்சங்கள்

விசேஷ அம்சங்கள்

செயற்கைகோள் தொலைபேசி, ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் வசதி, அதிநவீன ரேடார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் இருக்கும். அமெரிக்க அதிபர் தங்குவதற்கான படுக்கையறை, ஆலோசனைக் கூடம், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த விமானம் கட்டப்படும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

போயிங் 747-8 விமான வகை நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதுடன், உலகிலேயே அதிகம் தயாரிக்கப்பட்ட 747 குடும்பத்தின் நவீன வகை மாடல். எனவே, நம்பகத்தன்மையில் இவை மிகச்சிறப்பாக இருக்கும் என்பதுடன், பராமரிப்பும் மிக குறைவாக இருக்கும் என்பதாலேயே இவை தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

 அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2005ம் ஆண்டு போயிங் 747-8 விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு முதல்முறையாக பறந்த இந்த விமானம், 2011ம் ஆண்டில் வர்த்தக பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது லூப்தான்ஸா, கத்தே பசிபிக் கார்கோ, கோர்கோலக்ஸ், நிப்பான் கார்கோ ஏர்லைன்ஸ்,ஏர் சைனா உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் பயன்பாட்டில் உள்ளது.

சரக்கு போக்குவரத்து

சரக்கு போக்குவரத்து

அதிக இடவசதி கொண்டதாக இருப்பதால், நீண்ட தூர வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, 104 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த விமானத்தில் மூன்று வகுப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டால், அதில் 410 பேர் வரை பயணிக்க முடியும். அந்த விமானத்தையே தற்போது அமெரிக்க அதிபருக்கான விசேஷ வசதிகளுடன் மாற்றங்களை செய்து டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது.

பயண தூரம்

பயண தூரம்

முழுமையாக எரிபொருள் நிரப்பினால், அதிகபட்சமான பயணிகள் மற்றும் சரக்குகளுடன் 14,300 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும். இந்த விமானத்தில் ஜிஇ நிறுவனத்தின் GEnx-2B67 வகையிலான நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 917 கிமீ வேகத்திலும், தரையிலிருந்து 43,100 அடி உயரத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டு விமானிகள் மூலமாக இயக்கப்படும்.

ஒப்பீடு

ஒப்பீடு

உலகின் மிகப்பெரிய விமானங்களான ஏர்பஸ் ஏ380 மற்றும் அன்டோனோவ் ஏஎன்-124 ஆகிய விமான மாடல்களுக்கு இணையானதாக இந்த விமானம் ஒப்பிடப்படுகிறது.

டெலிவிரி

டெலிவிரி

வரும் 2024ம் ஆண்டில் இந்த புதிய விமானங்கள் அமெரிக்க அதிபரின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ விமானம்

அதிகாரப்பூர்வ விமானம்

தென்கொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக ஏற்கனவே 747-8 விமானம் ஆர்டர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானம் - ரகசியங்கள்!

அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானம் - ரகசியங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Boeing Begins Work On New US Presidential Aircraf
Story first published: Thursday, August 11, 2016, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X