பம்பார்டியர் நிறுவனத்தின் புதிய பயணிகள் விமானம் அறிமுகம்!

By Saravana Rajan

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களை போன்றே, பம்பார்டியர் நிறுவனம் விமான தயாரிப்பில் உலக அளவில் பெயர் பெற்றது. தனிநபர் பயன்பாடு மற்றும் சிறிய, நடுத்தர ரக விமானங்கள் தயாரிப்பில் இது பிரபலமாக விளங்குகிறது.

இந்த நிலையில், ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக புதிய விமானங்களை களமிறக்க உள்ளது. அதில், தனது புதிய நடுத்தர ரக விமானத்தை பம்பார்டியர் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

பம்பார்டியர் CS100 என்ற பெயரில் இந்த முதல் நடுத்தர வகை விமானம் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. நேரோ பாடி என்ற குறுகலான உடல்கூடு அமைப்புடைய ரகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சேவை

சேவை

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு முதல் விமானம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 15ந் தேதி முதல் ஸூரிச், பாரிஸ் இடையே சேவையை துவங்கியிருக்கிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

கட்டணத்தை பொறுத்து இந்த விமானத்தில் 100 முதல் 150 பேர் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கைகளை அமைக்க முடியும். அதேநேரத்தில், பிற விமானங்களை விட இது சற்றே விசாலமான இருக்கைகளை கொண்டிருக்கிறது.

 இருக்கை அளவு

இருக்கை அளவு

இதன் போட்டியாளர்களான போயிங் 737 விமானம் 43.9 செமீ அகலமுடைய இருக்கையையும், ஏர்பஸ் ஏ319 விமானம் 45.7 செமீ இருக்கையையும், எம்பரேயர் இ195-இ2 விமானம் 46.5 செமீ அகலமுடைய இருக்கையும் பெற்றிருக்கின்றன. ஆனால், பம்பார்டியர் சிஎஸ்100 விமானத்தில் 48.3 செமீ அகலமுடைய இருக்கைகள் இருக்கின்றன. இதனால், சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.

பெரிய ஜன்னல்கள்

பெரிய ஜன்னல்கள்

இந்த விமானத்தின் மற்றொரு விசேஷம், மிக பெரிய ஜன்னல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் என்று பம்பார்டியர் தெரிவிக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இரட்டை எஞ்சின் கொண்ட நடுத்தர தூர வகை விமானம். இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி ப்யூர்பவர் PW1500G எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிர்வுகள், சப்தம் குறைவான அதே சமயத்தில் குறைவான புகையை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

அதிகபட்சமாக 17,630 கிலோ எரிபொருளை நிரப்ப முடியும். முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 6,112 கிமீ தூரம் வரை பயணிக்கும். உள்நாட்டு போக்குவரத்திற்கும், குறைந்த தூர போக்குவரத்திற்கும் ஏதுவான மாடலாக இருக்கும்.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 870 கிமீ வேகம் வரை இயக்க முடியும். ஆனால், மணிக்கு 827 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.

இயக்குதல் செலவு

இயக்குதல் செலவு

இந்த விமானம் மிக குறைவான இயக்குதல் செலவு கொண்டதாக இருக்கும் என்று பம்பார்டியர் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, இயக்குதல் செலவு அதிகம் என்று கைவிடப்பட்ட வழித்தடங்களில் கூட இந்த விமானத்தை இயக்க முடியும்.

விலை

விலை

பம்பார்டியர் சிஎஸ்100 விமானத்திற்கு 71.8 மில்லியன் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் பல பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள் இந்த விமானத்தை ஆர்வம் காட்டியிருப்பதுடன், சில நிறுவனங்கள் ஆர்டரும் கொடுத்துவிட்டன.

மலைக்க வைக்கும் மல்லையா விமானம்!

மலைக்க வைக்கும் மல்லையா விமானம்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bombardier delivers first CS100 Passenger Plane To Swiss.
Story first published: Friday, July 22, 2016, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X