விபத்தில் நொறுங்கிய காருக்கு வந்த மவுசு... 231 கோடிக்கு ஏலம்!

By Saravana

1962- 64ம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட ஃபெராரி ஜிடிஓ 250 கார் மாடல்தான் இன்றைக்கு உலக அளவில் பெரும் மதிப்பு கொண்ட பொக்கிஷங்களாக விளங்குகின்றன. அவ்வப்போது இந்த ரக கார்கள் உலகின் அதிக விலைக்கு ஏலம் போன மாடல் என்ற பெருமையுடன் தொடர்ந்து தலைப்புச் செய்தியில் இடம்பிடிப்பது வழக்கம்.

அந்த வகையில், ஃபெராரி ஜிடிஓ250 மாடல் மீண்டும் உலகின் அதிக விலைக்கு ஏலம் போன கார் என்ற பெருமையுடன் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுள்ளது. ஆம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் துவங்கியிருக்கும் பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த மாடல் கார் ஒன்று 38 மில்லியன் டாலருக்கு ஏலம் போய் அசத்தியுள்ளது.


 போன்ஹாம்ஸின் சாதனை

போன்ஹாம்ஸின் சாதனை

போன்ஹாம்ஸ் என்ற பிரபல நிறுவனம் இந்த காரை ஏலத்தில் விட்டுள்ளது. கடந்த ஆண்டு குட்வுட் ஸ்பீடு திருவிழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ196ஆர் என்ற விண்டேஜ் காரை போன்ஹாம்ஸ் நிறுவனம் 29.65 மில்லியன் டாலர் மதிப்பில் ஏலம் விட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் அதிக ஏல மதிப்பு சாதனையை இந்த ஃபெராரி விண்டேஜ் கார் தற்போது விஞ்சியுள்ளது ஃபெராரி ஜிடிஓ 250 மாடல். இந்த பழமையான கார்களுக்கு இருக்கும் வரவேற்பு ஆச்சரியப்படுத்துகிறது. காரின் அருமை, பெருமைகளை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் மாடல்

லிமிடேட் மாடல்

கடந்த 1962 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடையில் 39 ஃபெராரி 250 ஜிடிஓ கார்கள்தான் தயாரிக்கப்பட்டன. லீ மான்ஸ் 24 ஹவர் ரேஸ் உள்ளிட்ட கார் பந்தயங்களுக்காக இந்த கார்களை ஃபெராரி தயாரித்தது.

52 மில்லியனுக்கு ஏலம்

52 மில்லியனுக்கு ஏலம்

கடந்த ஆண்டு இதே ஃபெராரி ஜிடிஓ 250 மாடல் கார் ஒன்று 52 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது பெபுள் பீச் திருவிழாவில் ஏலம் போன ஃபெராரி ஜிடிஓ250 மாடல் கார்தான் தற்போதைக்கு உலகின் மிக விலையுயர்ந்த காராக குறிப்பிடப்படுகிறது.

மதிப்பு ஏன்?

மதிப்பு ஏன்?

ஏலம் போன கார் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் சேகரிப்பாளரும், ரேஸருமான ஃபேப்ரிஸோ வயோலடி என்பவரிடம் இருந்தது. கடந்த 1965ம் ஆண்டு இந்த காரை அவர் வாங்கினார். அதிக காலம் இந்த காரை வைத்திருந்த பெருமைக்குரியவர். மேலும், இத்தாலி ஃபெராரி கிளப் உருவாவதற்கும் காரணகர்த்தா இவர்தான். கடந்த 2010ம் ஆண்டு மரணமடைந்தார்.

 விபத்துக்குள்ளான கார்

விபத்துக்குள்ளான கார்

கடந்த 1962ல் பிரான்ஸில் நடந்த ரேஸ் ஒன்றில் பிரபல பனிச்சறுக்கு வீரரான ஹென்றி ஓரியல்லர் இந்த காரை ஓட்டியபோது விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். பின்னர் இந்த கார் ஃபெராரி தொழிற்சாலையில் வைத்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஃப்ரண்ட் எஞ்சின் மாடல்

ஃப்ரண்ட் எஞ்சின் மாடல்

ஃபெராரி நிறுவனம் முன்பக்க எஞ்சினுடன் பந்தயங்களுக்காக வடிவமைத்த கடைசி கார் மாடல் இது. இதனைத் தொடர்ந்து 1965ம் ஆண்டு ஃபெராரி 250எல்எம் மாடல் மிட் எஞ்சின் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த கார்களில் 300 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதுடன், மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

மோனலிசா....

மோனலிசா....

இந்த கார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு பல நூறு கோடிகளை கார் பிரியர்கள் கொட்டி கொடுத்து வாங்குவதால், இதனை கார்களின் மோனலிசா என்று ஆட்டோமொபைல் துறையினர் வர்ணிக்கின்றனர்.

Most Read Articles
English summary
A Ferrari 250 GTO has sold for $38.1 million at the 2014 Pebble beach automobile event.
Story first published: Saturday, August 16, 2014, 9:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X