மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய சூப்பர்சானிக் பயணிகள் விமானம்!

உலகின் அதிவேக சூப்பர்சானிக் பயணிகள் விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய விமானம் பயணிகள் சேவையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்

By Saravana Rajan

உலகின் அதிவேக பயணிகள் விமானம் என்ற பெருமைக்குரியது கன்கார்டு விமானம். அதிக எரிபொருள் செலவு, விபத்து அபாயம் போன்ற காரணங்களால் அந்த விமானம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.

ஆயினும், அதன் பெயர் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கன்கார்டு விமானத்தில் இருந்த குறைகளை களைந்து, அதைவிட வேகமாக பயணிக்கும் வல்லமை கொண்ட புதிய கன்கார்டு விமானத்தை அமெரிக்க நிறுவனம் உருவாக்கி வருகிறது.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

இந்த புதிய அதிவேக பயணிகள் விமானம் பூம் XB-1 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய XB1 விமானத்தின் 3க்கு 1 என்ற விகிதத்தில் உருவாக்கப்பட்ட ஸ்கேல் மாடல் முதல்முறையாக பொது பார்வைக்கு வந்துள்ளது.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் இந்த விமானத்தை தயாரிக்கிறது. அமேஸான் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியும், பூம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான பிளேக் ஸ்கோல் இந்த விமானத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

அடுத்த ஆண்டு இந்த புதிய விமானம் பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த விமானத்தை இரண்டு பைலட்டுகள் இயக்க முடியும். 4 விமானப் பணியாளர்கள் இருப்பார்கள்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

மேலும், போர் விமானங்கள் வடிவமைக்கப்படுவது போன்றே, இந்த விமானமும் டெல்டா விங் எனப்படும் முக்கோண வடிவ இறக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. இந்த இறக்கை வடிவமைப்பு மூலமாக காற்றால் ஏற்படும் உராய்வும், தடங்கலும் குறையும்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

அதிக வேகத்தில் செல்லும்போது மூக்குப் பகுதியும், உடல் கூடும் வெப்பமடையும். இதன் மூக்குப்பகுதி 345 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் வல்லமை கொண்டது. அதேபோன்று, கார்பன் ஃபைபரால் ஆன உடல்கூடும் விசேஷ கட்டுமானத்தின் மூலமாக உருவாக்கப்படுகிறது.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

இந்த விமானத்தில் 3 ஜெனரல் எலக்ட்ரிக் ஜே8521 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஜெட் எஞ்சின்களில் ஆஃப்டர்பர்னர் என்ற கூடுதல் எரிபொருள் செலுத்து அமைப்பு உள்ளது. இதன்மூலமாக, அதிக முன்னோக்கு விசையை விமானம் பெறும்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

லண்டன் மாநகரிலிருந்து நியூயார்க் நகருக்கு வெறும் 3.5 மணி நேரத்தில் அடைந்துவிடும் இந்த விமானமானது மினி கன்கார்டு விமானமாக வர்ணிக்கப்படுகிறது. சாதாரண விமானங்களைவிட 2.6 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

இந்த விமானம் மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும். கன்கார்டு விமானத்தை விட 100 மைல் கூடுதல் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. 60,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டது.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமிக்க பொறியாளர்கள் குழுவினரால் இந்த பூம் கன்கார்டு விமானம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

இந்த விமானத்தில் 45 பேர் பயணிக்க முடியும். ஒருவருக்கு டிக்கெட் கட்டணமாக 5,000 டாலர்கள் நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பிசினஸ் கிளாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

முதல் 10 விமானங்களுக்கு வெர்ஜின் நிறுவனம் ஆர்டர் செய்துவிட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த விமானம் பயணிகள் சேவையில் அறிமுகம் செய்யப்படும் என்று பூம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் நீண்ட தூர விமான வழித்தடங்களில் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும்.

 மணிக்கு 2,335 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய மினி கன்கார்டு விமானம்!

மொத்தம் 500 வழித்தடங்களில் இந்த விமானத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிளேக் ஸ்கோல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
  • கன்கார்டு விமானத்தை விட வேகமாக பறந்த உலகின் அதிவேக பயணிகள் விமானம்!!
  • உலகின் அதிவேக டாப் - 10 பயணிகள் விமானங்கள்!
  • உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய சுவாரஸ்யங்கள்!
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Boom XB1 Supersonic Passenger Plane Details Revealed.
Story first published: Wednesday, November 16, 2016, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X