இங்கிலாந்து ராணிக்கு கார் டிரைவர் தேவை... உணவு, உறைவிடம் இலவசம்!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு புதிய கார் டிரைவர் ஒருவர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 37,000 டாலர் சம்பளத்துடன், உணவு மற்றும் உறைவிடம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தும் கார்களை ஓட்டுவதற்காக இந்த புதிய டிரைவர் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளார். அதுசரி, இங்கிலாந்து ராணிக்கு டிரைவர்னா சும்மாவா... அவருக்கான தகுதிகள், அனுபவம் உள்ளிட்டவை குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டு முறைகளை ஸ்லைடரில் காணலாம்.


தினசரி பணிகள்

தினசரி பணிகள்

தினசரி குறைந்தது 10 நிகழ்ச்சிகளிலாவது ராணி கலந்து கொள்ள வேண்டியிருக்கும். வார இறுதியில் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஆக வாரத்துக்கு 48 மணிநேரம் பணி செய்ய வேண்டியிருக்கும்.

தனி டிபார்ட்மென்ட்

தனி டிபார்ட்மென்ட்

Royal MEWSE என்ற துறைதான் ராணியின் ஓட்டுனர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான பணிகளை கட்டுப்படுத்தி வருகிறது. புதிய ஓட்டுனரையும் இந்த துறைதான் நியமிக்கும். மேலும், ராணியின் அன்றாட நிகழ்வுகளை 5 துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

தகுதிகள்

தகுதிகள்

இங்கிலாந்து குடியுரிமை மற்றும் இங்கிலாந்து ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருத்தல் அவசியம். கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இருப்பதோடு, கார் ஓட்டிய சர்வீஸ் ரெக்கார்டு குறித்து ஆய்வு செய்யப்படும். கார் பழுது நீக்கும் மற்றும் தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். மொழித்திறன், ஆளுமைத் திறன் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படும்.

ராணியின் கார்கள்

ராணியின் கார்கள்

ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ, ஜாகுவார் கார்களை ராணி பயன்படுத்துகிறார். மேலும், விண்டேஜ் கார்களையும் அவ்வப்போது ராணி பயன்படுத்துகிறார். எனவே, அனைத்து கார்களையும் ஓட்டத் தெரிந்திருப்பதுடன், கார்களை கையாள்வதும், சிறப்பாக பராமரிக்கத் தெரிவதும் அவசியம்.

முக்கிய ஓட்டுனர்

முக்கிய ஓட்டுனர்

ராணியின் கார்களுக்காக பணியில் இருக்கும் ஓட்டுனர்களில் இவர் முக்கியமானவராக இருப்பார். தவிர, மாற்று ஓட்டுனர்களும் அங்கு பணியில் இருக்கின்றனர். எனவே, குழுவாக இணைந்து செயல்படுதல் அவசியம்.

சம்பளம் குறைவு?

சம்பளம் குறைவு?

வாரத்திற்கு 48 மணி நேர வேலை, ஆனால், ஆண்டுக்கு 37,000 டாலர் மட்டுமே சம்பளம் என்றாலும், உணவு, உறைவிடம் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், ராணியின் அரண்மனை வளாகத்தில் வசிப்பதையும் பெரும் பாக்கியமாகவும், பெருமையாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
Buckingham Palace is Looking for a Chauffeur.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X