புகாட்டி பெயரிலான ஒரு பெல்ட் கொக்கியின் விலை 'ஜஸ்ட்' ரூ.50 லட்சமாம்

ஆடம்பர கார் தயாரிப்பாளர்களும், கைக்கடிகார தயாரிப்பாளர்களும் கூட்டணி அமைத்து ஸ்பெஷல் தயாரிப்புகளை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், ஆடம்பர பொருட்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெனீவாவை சேர்ந்த ரோலண்ட் ஐடென் நிறுவனம் புகாட்டி எடிசன் பெல்ட் கொக்கிகளை வெளியிட்டு இருக்கிறது.

காலிபர் ஆர்22 எம்கே1 புகாட்டி கலெக்ஷன் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பெல்ட் கொக்கிகள் பல்வேறு விசேஷ பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆடம்பர தயாரிப்பின் விலைதான் நம்மை தலைசுற்ற வைக்கிறது. சரி, அப்படி என்னதான் இந்த பெல்ட் கொக்கியில் இருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

கைக்கடிகார தொழில்நுட்பம்

கைக்கடிகார தொழில்நுட்பம்

கைக்கடிகாரம் இயங்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இந்த பெல்ட் கொக்கியும் இயங்குகிறது.

காஸ்ட்லி பாகங்கள்

காஸ்ட்லி பாகங்கள்

இலகு எடை டைட்டானியம், கிறிஸ்டல் கண்ணாடி, வைரம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தி இந்த கொக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

வசதி

வசதி

இந்த பெல்ட் கொக்கியில் 100க்கும் அதிகமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 0 முதல் 22 மிமீ வரை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது.

வரையறுக்கப்பட்ட தயாரிப்பு

வரையறுக்கப்பட்ட தயாரிப்பு

காலிபர் ஆர்22 எம்கே 1 புகாட்டி எடிசன் பிராண்டில் மொத்தம் 44 பெல்ட் கொக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இதில், முதல் 11 பெல்ட் கொக்கிள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர, இன்னும் இரண்டு எடிசன்களில் இந்த பெல்ட் கொக்கிகள் வெளியிடப்பட உள்ளன.

விலை

விலை

இந்த பெல்ட் கொக்கியின் மேற்புறத்தில் கிறிஸ்டல் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருப்பதால், உள்ளே இருக்கும் பாகங்களை பார்க்க முடியும். ரூ.51 லட்சம் விலையில் இந்த பெல்ட் கொக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

Most Read Articles
English summary
This boutique manufacturer, based in Geneva, is known for crafting "mechanical luxury" and is particularly well known for their mechanical belt buckles. Their latest product is the Calibre R22 MK I Bugatti collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X