புகாட்டி சிரோன் காரை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட புகாட்டி உல்லாச படகு!

Written by: Azhagar

சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற புகாட்டி நிறுவனம் அட்டகாசமான உல்லாச படகு ஒன்றை தயாரித்துள்ளது. நைன்ட்டி 66 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படகு, ஸ்போர்ட்ஸ் கார் போன்று ஸ்போர்ட்ஸ் ரக படகு (sport yacht) என தெரிவித்துள்ளது புகாட்டி நிறுவனம்

கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் மாடலை அடிப்படையாக வைத்து இந்த நைன்ட்டி 66 படகை தயாரித்துள்ளது. இந்த உல்லாச படகு மாடலை பால்மர் ஜான்ஸன் என்பவர் வடிவமைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் பலரிடமிருந்து தொடர்ந்து வந்த வேண்டுகோளை ஏற்று புகாட்டி சொகுசான இந்த படகை தயாரித்துள்ளது

2016ல் புகாட்டி வெளியிட்ட சிரோன் ஸ்போர்ட்ஸ் கார் 1500 பிஎச்பி பவரில் இயங்கும் எஞ்சினை பெற்ற காராகும், மேலும் 420 கிலோ மீட்டரை ஒரு மணிநேரத்தில் சென்றடையும் திறன் கொண்டதாகவும் உள்ளது. அதே டிசைனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுயிருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் படகு, 66 அடி நீளத்தில் கட்டமைப்பட்டுள்ளது அதனாலே இதற்கு நைன்ட்டி 66 என்ற பெயரை புகாட்டி நிறுவனம் சூட்டியுள்ளது

மேலும் நைன்ட்டி 66 படகு, நீரில் ஒரு மணிநேரத்தில் 82 கிலோ மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. இந்த உல்லாச படகு இரண்டு அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உல்லாச படகின் மேல் தளத்தில் மிகச் சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. லெதர் இருக்கைகள், உயர்தர மர அலங்கார பலகைகள் பயன்படுத்தப்பட்டு அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. அங்கு புகாட்டி நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்றிருபப்பதுடன், சிரோன் காரை பிரதிபலிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன

கீழ் அடுக்கில் ஒரு சிறிய பார், சூரிய ஒளி உள்ளே வருவதற்கான இடைவெளி, தாரளமாக இருக்கைகள் போடுவதற்கான இடம், குளிர்காயவதற்கான வசதி மற்றும் குளிப்பதற்கான ஜக்குஸி என பல சொகுசான கட்டமைப்புகள் கொண்டு நைன்ட்டி 66 படகில் உள்ளன

புகாட்டி சிரோன் கார் போன்றே, இந்த படகின் உடற்பாகங்கள் கார்பன் ஃபைபரானல் ஆனது. இதனால், மிக இலகுவான எடை கொண்டதாகவும், அதிக உறுதித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கிறது

மார்ச் 2018ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள நைன்ட்டி 66 படகு, வரையறுக்கப்பட்டுள்ள அளவில் மட்டுமே தயாரிக்கப்படும் என புகாட்டி தெரிவித்துள்ளது. நீரில் புல்லட் வேகத்தில் செல்லும் சிலிர்பை வழங்கும் விதத்தில் தாயாரிக்கப்பட்டுள்ள நைன்ட்டி 66 படகின் விலையை குறித்து புகாட்டி கார் தயாரிப்பு நிறுவனம் இதுவரை தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

புகாட்டியின் புதிய தி வேர்ய்ரோன் ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படங்களை காண கீழே உள்ள புகைப்பட தொகுப்பை காணுங்கள்

English summary
Bugatti has built a luxury sport yacht, the Niniette 66 to match the Chiron supercar. The deliveries of the yacht will commence from March 2018
Please Wait while comments are loading...

Latest Photos