ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது குண்டு துளைக்காத பிஎம்டபிள்யூ கார் ஆம்புலன்ஸ் போல செயல்பட்டு பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. அதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த மாதம் 21ந் தேதி ஈராக்கில் குர்திஷ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிர்குக் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலின்போது காயமடைந்தவர்களையும், பொதுமக்களையும் பிஎம்டபிள்யூ கார் ஒன்று ஆபந்பாந்தவானாக மாறி காப்பாற்றியது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஈராக்கின் குர்திஷ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிர்குக் மாகாணத்தில் வசித்து வருபவர் அகோ அபுரஹ்மான். கடந்த 21ந் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக அவரது நண்பர் தகவல் சொல்லியிருக்கிறார்.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

இதையடுத்து, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் இறங்க, சம்பந்தப்பட்ட பகுதிக்கு தனது குண்டுதுளைக்காத பிஎம்டபிள்யூ காரில் விரைந்துள்ளார். ஆனால், அங்கு அவர் கண்ட காட்சி மனதை நொறுங்க செய்திருக்கிறது.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

பல அப்பாவி பொதுமக்களும், குர்திஷ் பாதுகாப்புப் படை வீரர்களும் படுகாயங்களுடன் சாலைகளில் கிடந்துள்ளனர். ஆனால், அங்கு ஆயுதம் ஏந்திய ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்ததால், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

உடனடியாக களத்தில் இறங்கிய அபுரஹ்மான் தனது குண்டு துளைக்காத காரில் காயமடைந்தவர்களையும், பொதுமக்களையும் மருத்துவமனைக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் கொண்டு போய் விட்டுள்ளார். இந்த நிலையில், தனது குண்டு துளைக்காத பிஎம்டபிள்யூ காரில் வைத்து நள்ளிரவு வரை பாதிக்கப்பட்ட 70 பேரை அசாத்திய தைரியத்துடன் மீட்டுள்ளார் அபுரஹ்மான்.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

மேலும், அவர் மீட்டுச் சென்றவர்களில் ஒரேயொருவர் மட்டும் உயிரழந்துவிட்டார். அபுரஹ்மானும் இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்துவிட்டார். இவரது வீரதீர செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். குர்திஷ் கவர்னர் நேரில் அழைத்து அவரை கவுரப்படுத்தியிருக்கிறார்.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ள பகுதியில் வசிக்கும் அபுரஹ்மான், நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த குண்டுதுளைக்காத பிஎம்டபிள்யூ காரை 9,000 டாலர் மதிப்பில் வாங்கியிருக்கிறார். அந்த பிஎம்டபிள்யூ கார் துப்பாக்கி குண்டு தாக்குதல்களில் சேதமடைந்துள்ளது.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

அந்த பிஎம்டபிள்யூ கார் பல தடவை ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் சிக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட குண்டு தாக்குதல்களை அந்த கார் சந்தித்துள்ளது. பலமுறை துப்பாக்கிக் குண்டுகளுக்கு இலக்காகி இருக்கிறது. ஆனாலும், பல அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற உதவி புரிந்துள்ளது.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

இந்தநிலையில், அந்த காரை வாங்க தனது தலைமையகத்தின் மியூசியத்தில் வைப்பதற்காக பிஎம்டபிள்யூ கேட்டுள்ளது. மேலும், அந்த காருக்கு பதிலாக புதிய குண்டுதுளைக்காத காரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

ஆனால், அதற்கு அபுரஹ்மான் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதேநேரத்தில், குர்திஷ் மக்களின் வீரத்தை பரைசாற்றும் விதத்தில், அங்கள்ள சுலைமானியா மியூசியத்தில் வைப்பதற்கு அபுரஹ்மான் முடிவு செய்திருக்கிறார்.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

அவர் பயன்படுத்திய கார் மாடல் 1986ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்த பிஎம்டபிள்யூ இ32 என்ற பழைய தலைமுறை 7 சீரிஸ் கார் மாடல். குண்டு துளைக்காத அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட விசேஷ மாடல். வயதானாலும், சளைக்காமல் துப்பாக்கிக் குண்டு தாக்குதல்களை சமாளித்துள்ளது.

 ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: ஆபத்பாந்தவானாக மாறிய பிஎம்டபிள்யூ கார்!

பொதுவாக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பெரும் கோடீஸ்வரர்களும், அரசியல் தலைவர்களுமே குண்டுதுளைக்காத கார்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை குண்டுதுளைக்காத பிஎம்டபிள்யூ கார் ஆம்புலன்ஸ் போல செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது.

Picture credit: basnews

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bulletproof BMW Used to Rescue Dozens During ISIS Attack.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X