அடேங்கப்பா... 50,000 ரூபா ஸ்கூட்டருக்கு 8 லட்சத்தில் பேன்ஸி நம்பர்!!

By Saravana

புதிய வாகனங்களுக்கு பேன்ஸி பதிவு எண் பெறுவதை ஒரு பேஷனாகவும், கவுரவமாகவும் கருதுகின்றனர். குறிப்பாக, சண்டிகர் நகரில் இந்த பேன்ஸி நம்பருக்கான மவுசு மிக அதிகம். இதனால், அங்குள்ள ஆர்டிஓ., அதிகாரிகள் பேன்ஸி பதிவு எண்களை தேர்வு செய்து ஏல முறையில் விற்பனைக்கு விடுகின்றனர். இதனால், அந்த ஆர்டிஓ.,வுக்கு வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகிறது.

அங்கு, பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து பேன்ஸி நம்பரை பணக்காரர்கள் வாங்குவது குறித்து ஏற்கனவே நாம் செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில், சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் இதுபோன்று அதிக தொகைக்கு பேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்து மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வாங்கியிருக்கும் ஸ்கூட்டரின் மதிப்பைவிட 16 மடங்கு கூடுதலான தொகை கொடுத்து அந்த பேன்ஸி நம்பரை ஏலத்தில் விடாப்பிடியாக எடுத்துதுதான் இப்போதைய பரபரப்பு.

தொழிலதிபர்

தொழிலதிபர்

சண்டிகர் நகரை சேர்ந்த கன்வால்ஜித் வாலியா என்பவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். அதில், நல்ல வருமானம் கிடைப்பதால் அவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலைதான். அதனால், அவர் செய்த காரியம்தான் இப்போது பரபரப்புக்கு காரணம்.

புது ஸ்கூட்டர்

புது ஸ்கூட்டர்

சமீபத்தில் கன்வால்ஜித் வாலியா புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரை வாங்கினார். அதற்கு பேன்ஸி நம்பரை வாங்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று சண்டிகர் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் கலந்து கொண்டார். ஆனால், அவர் விரும்பிய பேன்ஸி நம்பருக்கு கடும் நிலவியது.

 விடாப்பிடி

விடாப்பிடி

கடும் போட்டி நிலவியதை கண்டு அசராத, எவ்வளவு தொகையானாலும் கொடுத்து ஏலம் எடுக்க முடிவு செய்தார். அதன்படி, ரூ.8.10 லட்சத்தை கொடுத்து அவர் விரும்பிய அந்த பேன்ஸி நம்பரை கைப்பற்றினார். அதாவது, அவரது ஸ்கூட்டரின் விலையைவிட 16 மடங்கு கூடுதல் தொகையை கொடுத்து அந்த நம்பரை வாங்கினார்.

பேன்ஸி நம்பர்

பேன்ஸி நம்பர்

கடும் போட்டிக்கு மத்தியில் அவர் வாங்கியிருக்கும் பேன்ஸி நம்பர் CH01BC 0001 என்பதாகும். இதுதவிர, தனது மகனின் புதிய க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிளுக்கு CH01BC 0011 என்ற பேன்ஸி நம்பரையும், அவர் புதிதாக வாங்கியிருக்கும் எஸ்யூவி வகை காருக்கு CH01BC 0026 என்ற பேன்ஸி நம்பரையும் ரூ.2.6 லட்சம் கொடுத்து அன்றைய தினத்தில் வாங்கியுள்ளார்.

தந்தை வழியில்...

தந்தை வழியில்...

சண்டிகர் டாக்ஸி தொழிற்சங்கத்தை துவங்கிய, தனது தந்தை இதேபோன்று கார்களுக்கு பேன்ஸி நம்பரை வாங்குவதை பழக்கமாக கொண்டிருந்ததாகவும், அதே வழியில் தானும் இந்த பேன்ஸி நம்பர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும் கூறியுள்ளார் கன்வால்ஜித்.

ஏலத்தொகை

ஏலத்தொகை

கடந்த சனிக்கிழமை சண்டிகர் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்த பேன்ஸி நம்பர் ஏலத்தின் மூலம் அந்த ஆர்டிஓ., அலுவலகத்துக்கு ரூ.77.71 லட்சம் வருவாய் கிட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A Chandigarh-based businessman has splurged a whopping Rs. 8.1 lakh on a VIP number for his scooter.
Story first published: Wednesday, May 13, 2015, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X