ரூ.34 லட்சத்துக்கு பேன்ஸி போன் நம்பரை ஏலத்தில் வாங்கிய டாக்சி நிறுவனம்!

பிஎஸ்என்எல் நடத்திய ஏலத்தில் பேன்ஸி போன் நம்பர் ஒன்றை ரூ.34 லட்சத்துக்கு வாங்கியுள்ளது சென்னையை சேர்ந்த பிரபல டாக்சி நிறுவனம்.

கார், பைக்குகளுக்கு பேன்ஸி நம்பரை அதிக விலை கொடுத்து வாங்குவது குறித்து செய்திகளை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்தநிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் பேன்ஸி போன் நம்பர் ஒன்றை எலக்ட்ரானிக் முறையிலான ஏலத்தில் விட்டது.

ஏலம்

ஏலம்

இந்த ஏலத்திற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 156 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். ஆனால், கடைசி கட்டத்தில் 5 பேர் மட்டும் ஏலத்தில் இருந்தனர்.

ரவி டிராவல்ஸ்

ரவி டிராவல்ஸ்

பெரும் பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தின் இறுதியில், 20002000 என்ற அந்த தொலைபேசி எண்ணை ரூ.33.93 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது கோடம்பாக்கத்தை சேர்ந்த ரவி டிராவல்ஸ் நிறுவனம்.

வசதி

வசதி

இந்த போன் நம்பர் மூலம் ஒரே நேரத்தில் 30 பேருக்கு அழைப்புகளை செய்யவும், பெறவும் முடியும். நாட்டிலேயே இதுபோன்ற ஏலம் முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

வருவாய்

வருவாய்

2,000 கார் மற்றும் இதர வாகனங்களுடன் இயங்கும் ரவி டிராவல்ஸ் வாங்கியுள்ள இந்த போன் நம்பர் மூலம் மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Chennai based cab operator Ravi Travels has pays Rs. 33.93 lakh for fancy BSNL landline number '20002000' in public auction.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X