கார் மெக்கானிக் டூ விமானி... யூ-டியூப் பார்த்து சொந்தமாக விமானம் தயாரித்த இளைஞர்!!

Written By:

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், யாரும் எதையும் சாதிக்கலாம். இந்த தன்னம்பிக்கை தரும் வரிகளுக்கு ஏற்றவாறு ஒரு சம்பவம் கம்போடியா நாட்டில் நடந்துள்ளது.

இன்று இணைய சேவை உலகின் அனைத்து மூலைகளுக்கும் சென்றடைந்துள்ளன. அதை வைத்துக்கொண்டு பலரும் பலவித சாதனைகளை நிகழ்த்தி வருவதை நாம் தினசரி பார்த்து வருகிறோம்.

அப்படி தான் கம்போடியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து தனக்கென ஒரு தனி விமானத்தை தயாரித்து சாதனை செய்துள்ளார்.

கம்போடியாவை சேர்ந்த 30 வயது இளைஞர் பாயென்லாங். அடிப்படையில் மெக்கானிக்கான இவர், தீவிரமான யூ-டியூப் இணையதளத்தின் ஃபாலோவர்.

மெக்கானிக்காக கடின உழைப்பாளியான இவர், பகல் முழுவதும் மெக்கானிக்காகவும், இரவில் உறங்காமல் யூ-டியூப் வீடியோக்களை பார்க்கும் வழக்கமுடையவர்.

இப்படி தனது இயல்பு வாழ்க்கையை கழித்து வந்த பாயென்லாங், ஒரு நாள் விமானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதற்கான விடியோவை யூ-டியூபில் பார்த்துள்ளார்.

அதை பார்த்த ஆர்வமான பாயென்லாங், உடனே இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார்.

பாயென்லாங் ஒரு மெக்கானிக் என்பதால், அந்த போர் விமானத்தில் இருந்த பழுதடைந்த பாகங்களை நீக்கி, இன்றைய சூழலுக்கு ஏற்ப விமானத்தை மாற்றியமைத்தார்.

பாயென்லாங்கின் தீவிர உழைப்பால், அந்த போர் விமானம் செம்மையாக தயாரானது. பிறகு ஒரு வயல்வெளி ஓரமான நிறுத்தி, 3 பேர் தள்ளிவிட பாயென்லாங் அந்த விமானத்தை இயக்கினார்.

விமானமும் வெற்றிக்கரமாக இயக்கம் பெற்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பாயென்லாங் உடனே சென்று தனது குடும்பத்தினரிடம் ரகசியமாக ஒரு விமானத்தை உருவாக்கி வரும் தகவலை கூறினார். பாயென்லாங்கின் குடும்பம் அதிசயத்து நின்றது.

ஒரு ஏழை விவசாயின் மகனான இவர், பல கட்ட துயரங்களுக்கு பிறகு மெக்கானிக்கானார். விமானம் தயாரிக்கும் தனது எண்ணத்தை யாரும் ஏளனமாக நினைக்கக்கூடாது என்பதற்காகவே, அதை ரகசியமாக வைத்திருந்தாக தெரிவிக்கிறார் பாயென்லாங் .

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cambodia Car Mechanic Built his Own Plane Using Only You Tube Videos. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos