1,153 கிமீ மைலேஜ் தரும் காரை உருவாக்கி கார் நிறுவனங்களை ஆச்சரியப்பட வைத்த கல்லூரி மாணவர்கள்..!

Written By:

ஒரு இயல்பான காரின் மைலேஜ் அதிகபட்சமாக லிட்டருக்கு 10 முதல் 50 கிமீ வரையிலோ அல்லது அதற்கு சற்று கூடுதலாகவோ தான் இருக்கும். இதுவே கார்கள் அளிக்கும் அதிகபட்ச மைலேஜ் ஆக உள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டி ஒன்றில் பங்கெடுத்த மாணவர்கள் குழுவினர் மணிக்கு 1,153 கிமீ மைலேஜ் தரும் கார் ஒன்றினை வடிவமைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.

ஆட்டோமொபைல் உலகின் முக்கியப் புள்ளியாக விளங்கக்கூடிய அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் 11வது வருடாந்திர ‘ஷெல் ஈகோ மாரத்தான் அமெரிக்காஸ்' என்ற பல்கலைக்கழங்களுக்கு இடையிலான ஆட்டோமொபைல் வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அமெரிக்கா, பிரேசில், கனடா, கொலம்பியா, கவுதமாலா, மெக்ஸிகோ, பெரு, போர்டோரிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து 115 பல்கலைக்கழகங்கள் சார்பில் 1,200 மாணவர்கள் பங்கேற்றனர்.

‘ஷெல் ஈகோ மாரத்தான் அமெரிக்காஸ்' என்பது பல்கலைக்கழங்களுக்கு இடையே பெட்ரோல் முதல் ஹைட்டோஹன் பியூயல் செல்கள், வரையிலான பல்வேறு எரிபொருளை பயன்படுத்தி அதன் மூலம் ஒடக்கூடிய கார் மாதிரியை உருவாக்கும் வருடாந்திர போட்டியாகும். மிச்சிகன் நகரின் டெஸ்ட் ட்ராக்கில் இந்த கார்கள் பரிசோதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான போட்டியில் கனடாவின் க்யூபெக் நகரைச் சேர்ந்த லாவல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் குழுவினர், மணிக்கு 1,153 கிமீ மைலேஜ் தரும் காரை உருவாக்கி முதல் பரிசை வென்றுள்ளனர்.

லாவல் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் உருவாக்கியது பெட்ரோல் மூலம் இயங்கும் கார் மாதிரி ஆகும். உலகின் சிறந்த மைலேஜ் கொண்ட காராக இது விளங்குகிறது.

லாவல் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டே 1,098.99 கிமீ மைலேஜ் தரும் கார் மாதிரியை உருவாக்கி முதல் பரிசை தட்டிச் சென்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

மொத்தம் 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் லாவல் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் குழு தயாரித்துள்ள இந்த அதிக மைலேஜ் கொண்ட கார் மிகவும் குறைந்த எடையில், சிறந்த ஏரோடைனமிக் வடிவத்தில், அதிக பவர் கொண்டதாகவும் உள்ளது. இதன் அதிகபட்ச சக்தி 2 பிக்ஹச்பி ஆகும். இது இஞ்சின் ஆஃப் ஆன நிலையிலும் இயங்கக்கூடியதாக உள்ளது.

‘ஷெல் ஈகோ மாரத்தான் அமெரிக்காஸ்' போட்டி ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என 3 கண்டங்களில் நடத்தப்படுகிறது. இது மாணவர்களை சொந்தமாக கார் தயாரிக்க ஊக்கப்படுத்துவதோடு அவர்களை சிறந்த பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக்க முயல்வதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Story first published: Wednesday, May 24, 2017, 11:24 [IST]
English summary
Read in Tamil about world's highest mileage car built by college students.
Please Wait while comments are loading...

Latest Photos