கார் மட்டுமா... கார் நிறுவனங்களின் சின்னங்களையும் விட்டுவைக்காத சீனர்கள்!

By Saravana

உலகின் மிக விலையுயர்ந்த கார்களை அப்படியே காப்பியடித்து வெளியிடுவதில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கில்லாடியாக இருந்து வருகின்றன. அங்குள்ள சட்டத் திட்டங்களும், அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பிரச்னை எழுப்ப முடியாத நிலை இருக்கிறது.

இந்தநிலையில், கார்களை மட்டுமல்ல, உலகின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களின் லோகோ எனப்படும் அடையாளச் சின்னங்களையும் சீன நிறுவனங்கள் காப்பியடித்திருப்பதை இந்த செய்தியில் காணலாம்.

சீன நிறுவனங்கள் மட்டும் என்றில்லை, சில வெளிநாட்டு நிறுவனங்களின் லோகோவை சுட்டு, தங்களது அடையாளச் சின்னங்களை உருவாக்கியிருக்கும் கார் நிறுவனங்களை பற்றியும் அறிந்துகொள்ளலாம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

 பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

படத்தில் பிஎம்டபிள்யூ லோகோவை காப்பியடித்து, புதிய லோகோவை உருவாக்கியிருக்கும் சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் லோகோ வழங்கப்பட்டிருக்கிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சென்ஸென் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஹைபிரிட், எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. டென்ஸா என்ற துணை பிராண்டில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அக்குரா

அக்குரா

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் அக்குரா சொகுசு கார் பிராண்டின் அடையாளச் சின்னத்தை தலைகீழாக திருப்பிப் போட்டு லோகோவை உருவாக்கியிருக்கும் சீனாவை சேர்ந்த சங்கன் கார் நிறுவனம். சீனாவின் சாங்கின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சிறிய வகை டிரக்குகள், மினி வேன்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

பென்ட்லீ

பென்ட்லீ

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீயின் லோகோவில், பி என்ற ஆங்கில எழுத்தை மட்டும் எடுத்துவிட்டு, தனது பிராண்டின் ஆர் என்ற எழுத்தை மட்டும் போட்டு லோகோவாக உருவாக்கியிருக்கிறது சீனாவின் ரிச் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம். இது செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டு என்பது குறிப்பிடத்தக்கது. செர்ரி யார் என்று கேட்கிறீர்களா, டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சீன கூட்டாளிதான் இந்த செர்ரி என்பதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது.

ரேவா

ரேவா

ஜெர்மனியை சேரந்த ரேவா நிறுவனத்தின் லோகோவை அச்சு அசலாக அப்படியே காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறது சீனாவின் ரிலை நிறுவனம். இதுவும் செர்ரி ஆட்டோமொபைல் குழுமத்தின் அங்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 மஸ்தா

மஸ்தா

மஸ்தா கார் நிறுவனத்தின் லோகோவில் சிறிய மாறுதலை செய்து பயன்படுத்தியிருக்கிறது சீனாவின் ஹெய்மா நிறுவனம். சீனாவின் ஹெய்னன் மாகாணத்திலிருந்து செயல்படும் இந்த நிறுவனம் எஃப்டபிள்யூ குழுமத்தின் அங்கம். கார்கள், மினி வேன்களை விர்பனை செய்து வருகிறது.

 டொயோட்டா

டொயோட்டா

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் லோகோவை மாறுதல்களை செய்து பயன்படுத்தி வருகிறது சீனாவின் ஜின்செங் ஆட்டோமொபைல் நிறுவனம். 1949ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் விமான துறை, வாகன தயாரிப்பு துறை, சேவை துறை என பல துறைகளில் பிரபலமாக விளங்குகிறது. டொயோட்டா லோகோவை பார்த்து ஒரு நிறுவனம் அல்ல. பல சீன நிறுவனங்கள் காப்பியடித்துள்ளன. தொடர்ந்து பார்க்கலாம்.

டொயோட்டா - 2

டொயோட்டா - 2

சீனாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் கீலி நிறுவனத்தின் துணை பிராண்டான மெர்ரி என்ற நிறுவனத்தின் லோகோவை படத்தில் காண்கிறீர்கள். சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் கூடுதல் குழப்பங்களை செய்திருப்பதை காணலாம். கீலி யார் தெரியுமா, ஸ்வீடனை சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் இப்போதைய உரிமையாளர்.

இன்ஃபினிட்டி

இன்ஃபினிட்டி

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்தின் சொகுசு பிராண்டுதான் இன்ஃபினிட்டி. இந்த பிராண்டின் லோகோவை சீனாவின் செர்ரி நிறுவனம் ஒரு சிறிய மாறுதலுடன் பயன்படுத்தியிருப்பதை காணலாம்.

இன்ஃபினிட்டி- 2

இன்ஃபினிட்டி- 2

சீனாவின் சுஸோவ் நிறுவனத்தின் லோகோவும் இன்ஃபினிட்டி லோகோவின் டிசைனிலிருந்து தழுவியிருப்பதை காணலாம்.

இன்ஃபினிட்டி - 3

இன்ஃபினிட்டி - 3

சீனாவின் ஹூவாசியாங் நிறுவனத்தின் லோகோவும் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் லோகோவின் அடிப்படை சாரம்சங்கள் இருப்பதை காணலாம்.

அஸ்டன் மார்ட்டின்

அஸ்டன் மார்ட்டின்

இங்கிலாந்தின் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் லோகோவை தழுவியிருக்கும் இந்த நிறுவனம் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு பிராண்டான ஜெனிஸிஸ்தான்.

அடடே... லம்போர்கினியும்தான்...!

அடடே... லம்போர்கினியும்தான்...!

உலகின் புகழ்பெற்ற சூப்பர் கார் பிராண்டான இத்தாலியின் லம்போர்கினி பிராண்டின் லோகோவை அப்படியே உருமாற்றியிருக்கிறது இங்கிலாந்தை சேர்ந்த அராஷ் நிறுவனம். காளைக்கு பதிலாக, பருந்து படத்தை போட்டுவிட்டனர்.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லோகோவை பிரதிபலிக்கும் அமெரிக்காவின் வெஸ்ட்காட் நிறுவனத்தின் லோகோ.

மஹிந்திராவுமா...

மஹிந்திராவுமா...

ஊரெல்லாம் குறை சொல்லிவிட்டு வரும்போது, நம்ம ஊரு மஹிந்திரா லோகோவும், இந்த வகையில் சேர்கிறது. அமெரிக்காவின் ஓல்ட்ஸ்மொபைல் நிறுவனத்தின் லோகோவிலிருந்துதான் நம் நாட்டின் மஹிந்திரா லோகோ தழுவியிருப்பதாக கூறப்படுகிறது. உண்மையா, பொய்யா என்பதை படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Car company logo rip-offs From China.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X