காரின் மைலேஜ் பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்...!!

காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கு தரும் ஆலோசனைகள் பலருக்கு பயனுள்ளதாக நினைக்கின்றனர். அதில், கூறப்படும் பெரும்பாலானவை கட்டுக்கதைகளாகளவே இருக்கின்றன.

ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பத்திற்கும் இப்போது கார்களின் தொழில்நுட்பத்திற்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவை ஒத்துப்போனாலும், இப்போதைய கார்களுக்கு அந்த ஆலோசனைகள் வெறும் கட்டுக்கதைகளாகவே கூற முடியும்.


கட்டுக்கதையும், உண்மையும்

கட்டுக்கதையும், உண்மையும்

கார் மைலேஜ் கட்டுக்கதைகளும் உண்மைகள் பற்றியத் சில முக்கிய விஷயங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

கட்டுக்கதை - 01

கட்டுக்கதை - 01

எரிபொருள் நிரப்புவதற்கு அதிகாலை அல்லது இரவு நேரம்தான் சிறந்தது என்று கூறுகின்றனர். குளிர்ச்சியான நேரத்தில் பெட்ரோல் நிரப்பும்போது அளவு சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இது இப்போதுள்ள உலகில் கட்டுக்கதையாகவே பார்க்க முடியும்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

நவீன கட்டமைப்பு கொண்ட புதிய பெட்ரோல் நிலையங்களில் பூமியின் ஆழமாக பதிக்கப்பட்டிருக்கும் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் விசேஷ பூச்சு கொண்டதாக இருக்கும். வெளிப்புறத்தில் வெப்ப நிலை எவ்வாறு இருந்தாலும், அந்த தொட்டிகளில் வெப்ப நிலை ஒரே சீராக இருக்கும். எனவே, எந்தவொரு வெப்பநிலையிலும் அதன் அடர்த்தியில் அதிக வேறுபாடுகள் ஏற்படுவதில்லை. வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும்போது இழப்பு ஏற்படுமே தவிர, எரிபொருள் தொட்டியிலிருந்து வரும் பெட்ரோலில் அதிக இழப்பு ஏற்படுவதில்லை.

கட்டுக்கதை - 02

கட்டுக்கதை - 02

சென்னை போன்ற நகரங்களில் வெயில் மண்டையை பிளந்தாலும், மைலேஜ் குறையும் என சிலர் ஏசி போடாமல் செல்வார்கள். ஏசி போட்டால் எஞ்சினுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டு மைலேஜ் குறையும் என்பது அவர்களது எண்ணம்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

ஏசி போடாமல் செல்லும்போது ஜன்னல்களை திறந்து வைப்பதால் காரின் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்படும். இதனால், எஞ்சினுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டு மைலேஜ் குறையும். மேலும், தற்போது வரும் நவீன ஏசி சாதனங்கள் மிகுந்த செயல்திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால், மைலேஜில் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

கட்டுக்கதை - 03

கட்டுக்கதை - 03

குறைந்த நேரத்திற்கு சிக்னலில் நிறுத்தினாலும் எஞ்சினை அணைத்துவிடுவதன் மூலம் எரிபொருள் சிக்கனம் பெற முடியும் என்ற கருத்து நிலவுகிறது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இசியூ இல்லாமல் வந்த கார்புரேட்டர் எஞ்சின்களில் அந்த கணக்கு ஓகே. ஆனால், தற்போது வரும் நவீன எஞ்சின்கள் மிகுந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லவை. 90 வினாடிகளுக்கு மேல் நிறுத்த வேண்டியிருந்தால் மட்டுமே எஞ்சினை அணைத்து வைக்கலாம்.

கட்டுக்கதை - 04

கட்டுக்கதை - 04

பிக்கப் டிரக்குகளில் டெயில்கேட்டை கீழே இறக்கி வைத்துவிட்டு சென்றால் அதிக மைலேஜ் பெற முடியும் என்று கூறுவதுண்டு.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

நவீன பிக்கப் டிரக் மாடல்கள் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. காலியாக செல்லும்போதும், பாரம் ஏற்றிச் செல்லும்போது சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டிருப்பதால், மைலேஜில் வித்தியாசம் இருக்காது.

கட்டுக்கதை - 05

கட்டுக்கதை - 05

ஆட்டோமேட்டிக் கார் மாடல்கள் மைலேஜ் தராது என்று கூறுவது சகஜம். இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கான மவுசு மிகவும் குறைவு.

 உண்மை என்ன?

உண்மை என்ன?

டிஎஸ்ஜி, சிவிடி போன்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் சிறப்பான மைலேஜை வழங்குகின்றன. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை வழங்குகின்றன. ஒன்றிரண்டு கிமீ மட்டுமே வித்தியாசம் இருக்கும். அதுவே பழைய ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கும், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களுக்கும் அதிக வித்தியாசம் இருந்ததன. பட்ஜெட் மட்டுமே இதில் ஒரு பொருட்டாக கூறலாம்.

கட்டுக்கதை - 06

கட்டுக்கதை - 06

டயரில் காற்றழுத்தத்தை கூடுதலாக வைத்தால் சிறப்பாக ரோல் ஆகும் என்று கூறுகின்றனர்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

குறைவான காற்றழுத்தம் இருந்தால் அதிக எரிபொருள் செலவாகும் என்பதுடன் டயரிலும் பாதிப்பு ஏற்படும் உண்மை. அதேபோன்று, டயரில் காற்றழுத்தம் அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். அதிகமாக காற்றழுத்தம் வைக்கும்போது டயரின் நடுப்பகுதி கடுமையாக தேய்மானம் அடையும். மேலும், வளைவுகளிலும், அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும்போது வாகனத்தின் பேலன்ஸ் சரியாக இருக்காது. எனவே, தயாரிப்பாளர் பரிந்துரையின்படி, டயரில் காற்றழுத்தத்தை பராமரிப்பது நல்லது.

கட்டுக்கதை - 07

கட்டுக்கதை - 07

ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும்போதும், கூடுதல் மைலேஜை பெறுவதற்கு இந்த செறிவூட்டும் ஆயிலை வாங்குங்கள் என்று ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனைக் கடைகளில் கூறுவதுண்டு. அதன்மூலம், மைலேஜ் அதிகரிக்கும் என்பது கருத்து.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இதுபோன்ற சில செறிவூட்டும் பொருட்கள் மற்றும் ஆயிலை சேர்க்கும்போது அது மெல்ல மெல்ல எஞ்சினில் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆட்டோமொபைல் நிபுணர்கள் நடத்திய சோதனைகளில் பல செறிவூட்டிகளால் எந்த பலனும் இல்லை என்றே தெரியவந்துள்ளது. சில செறிவூட்டிகள் மட்டுமே சிறிய அளவிலான பலனை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அதன் விலையும் அதிகம்.

கட்டுக்கதை - 08

கட்டுக்கதை - 08

பிரிமியம் பெட்ரோல் மூலம் காரின் மைலேஜ் வெகுவாக அதிகரிக்கும். எனவே, கூடுதல் விலையானாலும் பரவாயில்லை, பிரிமியம் பெட்ரோலை நிரப்புவது நல்லது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

பிரிமியம் பெட்ரோல் மூலம் காரின் மைலேஜ் சிறிதளவு அதிகரிக்கலாம். தயாரிப்பாளரின் பரிந்துரை தகவல்களை படித்தால் சாதாரண பெட்ரோலே சிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு காருக்கும் இது மாறுபட்டாலும், அதன் கூடுதல் விலையை வைத்து பார்க்கும்போது பெரிய அளவில் பயன் தராது. வேண்டுமெனில், சோதித்து பார்க்கலாம்.

கருத்து, அனுபவம்

கருத்து, அனுபவம்

உங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிரந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Here are the myths and facts about the mileage of cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X