காப்பியடிக்கப்பட்ட கார் மாடல்கள்... லிஸ்ட்டில் இந்திய மாடல்களும் உண்டு!

By Saravana

ஆப்பிள்- சாம்சங் குடுமிப்புடி சண்டை துவங்கி எந்தவொரு துறையிலும் காப்பியடிக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இது ட்டோமொபைல் துறையிலும் அதிகம் பிரச்னை தரும் விஷயம்தான். வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயத்தை கொடுப்பதற்காக காப்பியடிக்க எந்தவொரு இடத்திலும் இப்போது தயக்கமில்லை.

அந்த வகையில், ஆட்டோமொபைல் துறையில் ஒரு காரை பார்த்து வடிவமைக்கப்பட்ட புதிய கார் மாடல்களின் தொகுப்பை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம். இதில், சில மாடல்கள் அப்படியே அச்சு அசலாக டிசைனை காப்பிகேட் செய்துள்ளனர்.

சீனா Vs இந்தியா

சீனா Vs இந்தியா

ஆட்டோமொபைல் துறையில் அதிகம் காப்பயடிக்கும் நாடுகளில் சீன வாகன மார்க்கெட் ஒன்று. அதேவேளை, இந்திய மார்க்கெட்டில் அந்தளவுக்கு காப்பியடிக்கும் போக்கு இல்லை என்பது சிறிய சந்தோஷமே. இருப்பினும், ஒரு சில மாடல்கள் உண்டு. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காப்பியடித்து வடிவமைக்கப்பட்ட கார் மாடல்களை காணலாம்.

மாருதி ஏ ஸ்டார்/ சுஸுகி ஆல்ட்டோ

மாருதி ஏ ஸ்டார்/ சுஸுகி ஆல்ட்டோ

இந்தியாவில் சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட மாருதி ஏ ஸ்டார் காரின் டிசைன் வாடிக்கையாளர்களை கவராத ஒன்று. ஆனால், இந்த டிசைனை காப்பியடித்து ஒரு கார் மாடல் சீனாவில் விற்பனையில் இருந்து வருகிறது. அது எந்த கார் மாடல் என்பதை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

கீலி பாண்டா

கீலி பாண்டா

சுஸுகி ஆல்ட்டோ அல்லது மாருதி ஏ ஸ்டார் காரின் டிசைனை ஒத்திருக்கும் இந்த கார் சீனாவின் கீலி நிறுவனத்தின் தயாரிப்பு. 2009ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட் மாடல் இது. கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற கார். சீனாவில் விற்பனையாகும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

ஹம்மர் எச்1

ஹம்மர் எச்1

ராணுவ பயன்பாட்டிற்காக அமெரிக்காவின் ஏஎம் ஜெனரல் வாகன நிறுவனம் தயாரித்து வந்த பன்முக பயன்பாட்டு வாகனத்தின் அடிப்படையில் தனிநபர் மார்க்கெட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஹம்மர் எஸ்யூவி. இந்த எஸ்யூவியின் அடிப்படையில் சீனாவில் மூன்று நிறுவனங்கள் எஸ்யூவியை தயாரித்தன. அதனை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

இதுவும் சீனாதான்

இதுவும் சீனாதான்

High Mobility Multipurpose Wheeled Vehicle (HMMWV) என்பதே ஹம்வீ என்ற வாகனமாக அழைக்கப்பட்டது. அதனடிப்படையில், சீனாவில் ராணுவ பயன்பாட்டிற்காக தயாரித்து வழங்கப்பட்டது. ஹம்மர் அடிப்படையில் தயாரித்து வழங்கப்பட்ட Dongfeng EQ2050 என்ற மாடலைத்தான் படத்தில் காண்கிறீர்கள். இதில் வேடிக்கை என்னவெனில், முதலில் இந்த வாகனத்துக்கான உதிரிபாகங்களை தருவித்து தயாரித்த சீன நிறுவனங்கள், தற்போது சொந்தமாகவே ஹம்வீ வாகனங்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.

 டொயோட்டா ஃபர்ஸ்ட்(Toyota 1St)

டொயோட்டா ஃபர்ஸ்ட்(Toyota 1St)

டொயோட்டா ஃபர்ஸ்ட் என்ற இந்த காரின் டிசைனை வைத்து ஒரு கார் மாடலை சீனாவின் பிரபல நிறுவனம் டிசைன் செய்தது. அது எந்த மாடல் அடுத்த ஸ்லைடரில் காணலாம்.

கிரேட்வால் புளோரிட்

கிரேட்வால் புளோரிட்

டொயோட்டா ஃபர்ஸ்ட் காரின் டிசைனை அப்படியே பயன்படுத்தி சீனாவின் கிரேட்வால் நிறுவனம் வடிவமைத்த இந்த காரின் பெயர் புளோரிட். முகப்பு டொயோட்டா யாரிஸ் காரின் டிசைனை ஒத்திருக்கிறது. 2009ல் அறிமுகமான இந்த கார் இரு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கார் மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு வந்தது. அது எந்த மாடல்? யூகிக்க முடிகிறதா?!

டெம்போ டிராக்ஸ்

டெம்போ டிராக்ஸ்

பென்ஸ் ஜி வேகன் டிசைனில் அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்ட மாடல்தான் டெம்போ டிராக்ஸ். பென்ஸ் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கிறது.

மினி கூப்பரையும் காப்பி

மினி கூப்பரையும் காப்பி

மினி கூப்பர் கார்களின் டிசைன் மிக பிரத்யேகமானதாக இருக்கின்றன. ஆனால், அதையும் ஒரு சீன வாகன தயாரிப்பு நிறுவனம் ஆட்டையை போட்டு வடிவமைத்துள்ள கார் மாடலை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 லிஃபான் 320

லிஃபான் 320

மினி கூப்பர் டிசைனில் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்து லிஃபான் நிறுவனம் லிஃபான் 320 என்ற காரை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

லம்போர்கினி ரெவன்ட்டன்

லம்போர்கினி ரெவன்ட்டன்

சீனாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டிசைனை காப்பியடித்து கார்களை அறிமுகம் செய்துள்ளன. அதுபோன்று போலந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் லம்போர்கினி ரெவன்ட்டன் கார் மாடலின் டிசைனை ஒத்ததாக ஒரு காரை விற்பனை செய்கிறது. அதனை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 அரினேரா ஹசரியா

அரினேரா ஹசரியா

போலந்து நாட்டை சேர்ந்த அரினேரா வடிவமைத்த முதல் கார் மாடல். போலந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் மாடலும் கூட. இங்கிலாந்தை சேர்ந்த டிசைனர் மற்றும் லீ நோபல் என்ற எஞ்சினியரும் இந்த காரை உருவாக்கினர். இந்த காரின் புரோட்டோடைப் மாடல் 2012ம் ஆண்டு இந்த கார் போலந்து பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்பட்டது. அப்போது, குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் இந்த கார் பல பிரபல கார் மாடல்களை ஒத்திருப்பதாக கூறியதால் சர்ச்சை எழுந்தது. மொத்தம் 33 கார்களை மட்டுமே தயாரிக்க உள்ளதாக அரினேரா தெரிவித்தது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

ஜெர்மன் டிசைனையும் சீன வாகன தயாரிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி அடிப்படையில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒரு பிரிமியம் கார் மாடலை விற்பனை செய்கிறது. அது எந்த மாடல் என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்க வேண்டாம். அடுத்த ஸ்லைடிலேயே உடனே தெரிந்துகொள்ளலாம்.

சுவாங்குவான் சிஇஓ

சுவாங்குவான் சிஇஓ

முன்புறம் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியையும், பக்கவாட்டில் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 டிசைனையும், பின்புறம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியின் டிசைனையும் போட்டு கலந்து டிசைன் செய்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த எஸ்யூவி ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனையாகிறது.

போர்ஷே கேயென்

போர்ஷே கேயென்

மீண்டும் ஒரு ஜெர்மன் கார் மாடலான போர்ஷே கேயென் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு ஒரு எஸ்யூவியை சீனா தயாரித்து விற்பனை செய்கிறது. அது எந்த மாடல் என்பதற்கான தகவலை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஹதாய் போலிகர்

ஹதாய் போலிகர்

பென்ட்லீயின் எக்ஸ்9 எஃப் கான்செப்ட் ஸ்டைலிலான கிரில், பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைன்கள் போர்ஷே கேயென் எஸ்யூவியை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட சீன தயாரிப்பு இது.

ரேஞ்ச்ரோவர்

ரேஞ்ச்ரோவர்

ஒரு புகழ்பெற்ற கார் மாடலை அடிப்படையாக வைத்து டிசைன் செய்யப்படும் கார் மாடல்கள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கார் மாடல் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பிஏடபிள்யூ பி90

பிஏடபிள்யூ பி90

பீஜீங் ஆட்டோ ஒர்க்ஸ் என்பதன் சுருக்கமே பிஏடபிள்யூ. பெயர் கூட பிஎம்டபிள்யூவிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது. பிறகென்ன, ரேஞ்ச்ரோவரை அப்படியே உரித்து வைத்தது போன்ற ஒரு எஸ்யூவி மாடலை பிஏடபிள்யூ வடிவமைத்தது. இது கிடக்கட்டும் ரோல்ஸ்ராய்ஸ்க்கு வந்த ஆபத்தை அடுத்த ஸ்லைடில் பாருங்கள்.

அடங்கொப்புரானே

அடங்கொப்புரானே

உலகின் மிக ஆடம்பர கார் மாடலாக கருதப்படும் ரோல்ஸ்ராய்ஸ் டிசைனின் பிரத்யேக டிசைனுக்கு மயங்காத கோடீஸ்வரர்கள் இல்லை. ஆனால், அதையே சீனாவின் கீலி நிறுவனம் காப்பியடித்து ஒரு காரை உருவாக்கியது. அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள். நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

கீலி ஜிஇ

கீலி ஜிஇ

இதுதான் கீலீ ஜிஇ. 2009ம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை அப்படியே ரீபேட்ஜ் செய்தது போன்று இருந்தது. பின்னர், இந்த காரின் டிசைனில் மாற்றங்களை செய்து எம்கிராண்ட் என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்தனர். இந்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 47,000 டாலர் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 ஆடி ஏ4 அவன்த்

ஆடி ஏ4 அவன்த்

இந்த ஆடி காரை வைத்து சீனாவில் ஒரு கார் எலக்ட்ரிக் கார் மாடல் வெளியிடப்பட்டது. அந்த கார் மாடலை கண்டு ஆட்டோமொபைல் துறையினர் ஆடி போயினர். ஏனெனில், ஆடியின் சின்னத்தை மட்டும் மாற்றிவிட்டு ஒரு புதிய கார் மாடலாக இதனை சீனாவை சேர்ந்த யெமா நிறுவனம் வெளியிட்டது.

மஸ்டாங் எஃப்16

மஸ்டாங் எஃப்16

ஆடி ஏ4 அவந்த் காரை அப்படியே வைத்து டிசைன் செய்யப்பட்ட கார்தான் இது. ஆட்டோமொபைல் துறையினரின் அர்ச்சனையை யெமா இந்த கார் மூலம் வாங்கிக் கட்டிக் கொண்டது. இது ஒரு எலக்ட்ரிக் கார் மாடல். மணிகக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும், 260 கிமீ தூரம் வரை ஒரே சார்ஜில் செல்லும் சிறப்பம்சத்தையும் கொண்டது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி

லேண்ட்ரோவர் டிஸ்கவரி

1997 லேண்ட்ரோவர் டிஸ்கவரி மாடலின் டிசைனை ஒத்ததாக இந்தியாவின் பெரும் கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு எஸ்யூவியை டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. அது எந்த மாடல் என்பதை காண ஆவலா? அடுத்த ஸ்லைடில் தகவல்.

 டாடா சஃபாரி

டாடா சஃபாரி

அது டாடா சஃபாரிதான். டிஸ்கவரி எஸ்யூவியின் பல டிசைன் தாத்பரியங்களை சஃபாரியை உற்று பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை லேண்ட்ரோவர் பிற்காலத்தில் நம் கையில்தான் வரப்போகிறது என்று முன்கூட்டியே கணித்து டிசைன் செய்தனரோ என்னவோ?

 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே காரின் கிரில்லில் பொருத்தப்பட்டிருக்கும் லோகோவை தூக்கி விட்டு ஒரு கார் மாடலை சீன நிறுவனம் வெளியிட்டது. அந்த கார் மாடலின் விபரத்தை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

பிஒய்டி எஃப்8

பிஒய்டி எஃப்8

இதுதான் அந்த கார். சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புதான் இது. இத்தோடு முடிந்துவிட்டதா சீன நிறுவனங்களின் கைவண்ணம். இல்லையில்லை. தொடர்கிறது. வாருங்கள் அடுத்த ஸ்லைடுக்கு போகலாம்.

 ஸ்மார்ட் ஃபார்டூ

ஸ்மார்ட் ஃபார்டூ

ஒரு பிரத்யேக கார் மாடலாக இந்த ஸ்மார்ட் ஃபார்டூ இருக்கிறது. இதை காப்பியடித்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்களே என்ற அச்சம் கூட இல்லாமல் ஒரு கார் மாடல் வெளியிடப்பட்டது. அதுவும் சீன கைங்கர்யம்தான்!

சுவான்குவான் நோபுள்

சுவான்குவான் நோபுள்

ஸ்மார்ட் ஃபார்டூ டிசைனை காப்பியடித்து வடிவமைக்கப்பட்ட இந்த கார் மாடலை பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனை செய்கிறது சுவான்குவான் நிறுவனம். இது சுஸூகி ஆல்ட்டோ காரின் சேஸீயின் அடிப்படையாகக் கொண்டது. குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி கிடைத்தவுடன், நம்மூருக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 சீனாவில் ஏன் அதிகம்?

சீனாவில் ஏன் அதிகம்?

இந்த ஆராய்ச்சியில் இறங்கினால் பட்டியலை முடிக்க சில தினங்கள் தேவைப்படும். சரி, சீனாவில் ஏன் காப்பிகேட் பிரச்னை இருக்கிறது என்று ஆராய்ந்தபோது சில தகவல்கள் கிடைத்தன. சீனாவின் வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு கொள்கையால் பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. சீன காப்புரிமை விதிகளால் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு புண்ணியமில்லை. மேலும், அந்நாட்டில் கார் வர்த்தகம் செய்வதற்கு உள்நாட்டு நிறுவனத்துடன் கூட்டணியாக இணைந்துதான் வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட முடியும் நிலை இருக்கிறது.

Most Read Articles
English summary
If you can't beat them, join them. This seems to be the mantra for so many things these days, and car design is not to be left out. Several cars in the world today are blatant rip offs of other automobiles - China is known to do this best, with a long list of copycat cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X