காப்பியடிக்கப்பட்ட டிசைன் அம்சங்கள் கொண்ட இந்திய கார் மாடல்கள்

ஆட்டோமொபைல் துறையில் புதிய டிசைன் தாத்பரியங்களை உருவாக்கி வெற்றிப் பெறுவது என்பது கார் நிறுவனங்களுக்கும், டிசைன் டீமிற்கும் பெரும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அவ்வாறு கடுமையான உழைப்பிலும், சிந்தனையிலும் உருவாகும் சில டிசைன் தாத்பரியங்களும், டிசைன் அம்சங்களும் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெறுகின்றன.

அவ்வாறு வெற்றி பெறும் டிசைன் மாதிரியை பின்பற்றுவதும், அதனை மனதில் வைத்து சில மாற்றங்களுடன் தங்களது புதிய மாடல்களை டிசைன் செய்வதும் கார் நிறுவனங்களுக்கு இடையில் நடைபெறும் வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. புதுமை, புரட்சி என்று விளம்பரப்படுத்தப்படும் அத்தகைய முன்னணி கார் மாடல்களில் இருக்கும் காப்பியடிக்கப்பட்ட அல்லது சிறிய மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்ட டிசைன் மாதிரிகளை லென்ஸ் போட்டு ஆராய்ந்து இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.

01. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

01. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில டிசைன் மாதிரிகள் சில குறிப்பிட்ட கார் மாடல்களிலிருந்து எடுத்து சிறிய மாறுதல்களுடன் பயன்படுத்தியுள்ளனர். அப்படியா, என்று ஆச்சரியப்படும் உங்களுக்கு அடுத்த ஸ்லைடில் விடை இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ தொடர்ச்சி...

ஸ்கார்ப்பியோ தொடர்ச்சி...

கண் புருவம் போன்ற அமைப்புடைய பகல்நேர விளக்குகள் ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் ஹெட்லைட் க்ளஸ்ட்டரின் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகல்நேர விளக்கு டிசைன் 2012ம் ஆண்டு முதல் மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் காரின் எல்இடி பகல்நேர விளக்குகள் போன்ற இருப்பதை படத்தை பார்த்து காணலாம். அதில், சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருப்பதை கண்டுணரலாம்.

02. மாருதி செலிரியோ

02. மாருதி செலிரியோ

விற்பனையில் டாப் 10 பட்டியலில் இருந்து வரும் மாருதி செலிரியோ காரின் டிசைன் தாத்பரியங்கள செவர்லே யுவா ஹேட்ச்பேக்கை ஒட்டியே அமைந்திருப்பதை காணலாம். முகப்பு மட்டுமல்ல, அடுத்த பக்கத்தில் வந்து பாருங்கள்.

 செலிரியோ தொடர்ச்சி...

செலிரியோ தொடர்ச்சி...

ஹெட்லைட், பாடி லைன், ரூஃப் லைன் என முகப்பு மற்றும் பக்கவாட்டு டிசைன் அப்படியே செவர்லே யுவா காரை மனதில் வைத்து சிறிய மாறுதல்களை செய்து செலிரியோவாக மாற்றப்பட்டிருப்பதை காண முடிகிறது. குறிப்பிட்டு பார்க்காமல், முகப்பு மற்றும் பக்கவாட்டின் ஒட்டுமொத்த டிசைனில் இருக்கும் ஒற்றுமைகளை காணலாம்.

 03. மாருதி சியாஸ்

03. மாருதி சியாஸ்

அடுத்து நம் கண்ணில் சிக்கி பட்டியலில் இடம்பெற்றிருப்பது மாருதி சியாஸ். இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டபோதே, இந்த விமர்சனம் எழுந்தது. அதாவது, புதிய ஹோண்டா சிட்டி காரின் பின்புறத் தோற்றமும், மாருதி சியாஸ் காரின் பின்புறத் தோற்றத்திலும் அதிக ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி அதிக ஒற்றுமை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கும் பகுதி எது தெரியுமா?

 சியாஸ் தொடர்ச்சி...

சியாஸ் தொடர்ச்சி...

மாருதி சியாஸ் காரின் டெயில் லைட் க்ளஸ்ட்டர் புதிய ஹோண்டா சிட்டி காரின் டெயில் லைட் க்ளஸ்ட்டரை அப்படியே காப்பியடிக்கப்பட்டிருப்பது எளிதாக கண்டுபிடித்துவிடலாம். வழக்கம்போல் சிறிய மாற்றங்களை செய்து பயன்படுத்தியுள்ளனர்.

04. இதுல மட்டும் எதிரிகள் கிடையாது?

04. இதுல மட்டும் எதிரிகள் கிடையாது?

ஜப்பானிய கார் நிறுவனங்களான ஹோண்டாவும், டொயோட்டாவும் வர்த்தகத்தில் பங்காளிகள் போல செயல்பட்டாலும், டிசைன் விஷயத்தில் இங்கு இரண்டற கலந்து நிற்கின்றன. இந்த இரு நிறுவனங்களின் பிரபல மாடல்களான ஹோண்டா சிட்டி மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் இடையே முகப்பில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லையென்றால், அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

இந்த இரு கார்களிலும் முகப்பு பம்பர்களின் இருமருங்கும், குவார்ட்டர் பேனல்களும், வீல் ஆர்ச் ஆகியவற்றின் டிசைன் ஒற்றுமைகளை பார்த்தீர்களா. சரி, இதில் எது காப்பியடித்து டிசைன் செய்யப்பட்ட மாடல் என்று சொல்வதைவிட இரு கார் மாடல்களுமே வேறு ஒரு காரின் டிசைனை பின்பற்றி இதனை வடிவமைத்துள்ளனர். அது எந்த மாடல் என்றால், ஆடி டிடி கார்தான் அது. ஆடி டிடி காரில்தான் இதுபோன்ற டிசைன் முதலில் பயன்படுத்தப்பட்டது.

 05. ஹய்யோ, ஹய்யோ...

05. ஹய்யோ, ஹய்யோ...

இங்கு ஒரு எம்பிவி காருக்கும், செடான் காருக்கும் முடிச்சுப் போட்டிருக்கிறோமே என்று குழம்ப வேண்டாம். ஆம், மொபிலியோ எம்பிவியின் முகப்பில் உள்ள டிசைன் மாதிரியை பின்பற்றி சில மாறுதல்களுடன் சியாஸ் காரை வடிவமைத்துள்ளனர். அது எந்த இடமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிராமல் அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்களேன்.

அதேதான்...

அதேதான்...

மார்க்கெட்டில் முதலில் வந்த ஹோண்டா மொபிலியோவின் பம்பர் டிசைனை மனதில் வைத்து சிறிய மாறுதல்களை செய்து மாருதி சியாஸ் காரின் பம்பரை டிசைன் செய்துள்ளனர். ஏர்டேம், பனி விளக்குகள் என்று பார்த்தால் அட ஆமாய்யா என்று சொல்லத் தோன்றுகின்றதல்லவா. சரி, வாருங்கள் அடுத்த களவாணியை பார்ப்போம்.

மறுபடியும் ஸ்கார்ப்பியோவா...

மறுபடியும் ஸ்கார்ப்பியோவா...

இந்த பட்டியலில் மீண்டும் ஸ்கார்ப்பியோ வந்திருப்பதற்கு காரணமில்லாமல் இல்லை. சொகுசு கார்களில் இருக்கும் டிசைன் அம்சங்களை குறிவைத்து எடுத்து டிசைன் செய்ததற்கு இதுவும் ஒரு சாட்சியாக இருக்கும். இந்தமுறை ஸ்கார்ப்பியோவின் பின்புற டிசைன் மாதிரி எமது லென்ஸ் கண்களில் சிக்கியிருக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். அப்படியில்லைனில், அடுத்த ஸ்லைடில் விடை...

ஸ்கார்ப்பியோ தொடர்ச்சி...

ஸ்கார்ப்பியோ தொடர்ச்சி...

அப்பவே நினைச்சேன்யா என்கிறீர்களா? ஆம், ஸ்கார்ப்பியோவின் புதுமையான அந்த டெயில் லைட் டிசைன் மாதிரி, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளனர். ரேஞ்ச்ரோவரின் டெயில்லைட்டை அப்படியே மானே, தேனே, பொன்மயிலே என்று இடையிடையே போட்டு வேறு மாதிரி கவிதையாக உருவாக்கிவிட்டனர். அதுசரி, லேண்ட்ரோவர் நிறுவனத்தின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸின் மறைமுக விசிறியோ மஹிந்திரா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? சரி, விடுங்கள்... இந்தியாவின் நம்பர்- 1 காம்பேக்ட் செடானும் இந்த பட்டியலில் தப்பவில்லை, அதனை பார்க்கலாம்.

07. மாருதி டிசையர்

07. மாருதி டிசையர்

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி டிசையர் காருக்கும் ஹோண்டா மொபிலியோவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று உங்களால் கூற முடிகிறதா? இல்லையென்பவர்கள் அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்கள்.

 டிசையர் தொடர்ச்சி...

டிசையர் தொடர்ச்சி...

புதிய டிசையர் காரின் முகப்பு டிசைன் ஹோண்டா மாடல்களின் முகப்பு டிசைனிலிருந்து பல்வேறு டிசைன் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஹோண்டா பிரியோ மற்றும் மொபிலியோ கார்களின் க்ரோம் க்ரில், பனி விளக்குகள் அறை டிசைன் மற்றும் ஏர்டேம் என்று பல இடங்களிலும் அந்த டிசைன் மாதிரிகள் பளிச்சிடுவதை காணலாம்.

08. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

08. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்

உலகின் சிறந்த டிசைன் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் ஹூண்டாய் சிறந்த நிறுவனம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிலும், கடந்த ஆண்டு வந்த புதிய எலைட் ஐ20 காரின் டிசைன் பெரிதும் போற்றப்படுகிறது. அதன் க்ராஸ்ஓவர் மாடலாக வெளிவந்த ஆக்டிவ் மாடலின் முகப்பு பகுதியும் ஒரு மாடலிலிருந்து டிசைன் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ20 ஆக்டிவ் தொடர்ச்சி...

ஐ20 ஆக்டிவ் தொடர்ச்சி...

ஏர்டேமுடன் இணைக்கப்பட்டிருக்கும் சில்வர் ஃபாக்ஸ் க்ரில் கார்டு ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியை நினைவூட்டும் விதத்தில் இருக்கிறது. மேலும், இது ரெனோ டஸ்ட்டரையும் ஞாபகப்படுத்த தவறவில்லை.

09. ஐ20 ஆக்டிவ் லிஸ்ட் இன்னமும் முடியல...

09. ஐ20 ஆக்டிவ் லிஸ்ட் இன்னமும் முடியல...

ஃபியட் அவென்ச்சுராவின் டிசைன் மாதிரியும் ஐ20 ஆக்டிவ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது எது என கண்டறிய முடிகிறதா? அடுத்த ஸ்லைடுக்கு வந்துவிடுங்கள்...

ஒற்றுமை...

ஒற்றுமை...

ஃபியட் அவென்ச்சுராவின் அலாய் ரிம் மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் அலாய் ரிம்மிற்கும் இடையில் இருக்கும் டிசைன் ஒற்றுமை தெரிகிறதா.

10. மாருதி ஆல்ட்டோ 800

10. மாருதி ஆல்ட்டோ 800

ரெனோ பல்ஸ் காருக்கும், மாருதி ஆல்ட்டோ 800 காருக்கும் பின்புறத்தில் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. அது என்ன தெரியுமா?

 ஆல்ட்டோ 800 தொடர்ச்சி...

ஆல்ட்டோ 800 தொடர்ச்சி...

பின்புற டெயில் கேட்டில் இருக்கும் லோகோ அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்டரிலிருந்து துவங்கும் லைன்கள் மற்றும் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும் இடம் என அனைத்திலும் பல ஒற்றுமைகள் உண்டு. சிறிய வித்தியாசங்களுடன்... மீண்டும் ஒரு சிறப்புச் செய்தியில் சந்திக்கலாம்.

காப்பியடிக்கப்பட்ட கார் மாடல்கள்

காப்பியடிக்கப்பட்ட கார் மாடல்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
However, for whatever reasons, and despite huge budgets, manufacturers are often ‘inspired' quite strongly by other vehicles in the market, some to a greater extent than others. China, as we know is famous for this, and you can read all about that here, but some cars available in India too, have caught our eye with the high level of similarity of key design features.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X