ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடம் வரவேற்பு பெற்ற 'கார்ஸ் 3' அனிமேஷன் படம் இன்று வெளியானது; சிறப்புத் தகவல்கள

Written By:

அனிமேஷன் படங்கள் தயாரிப்பில் ஆஸ்கார் விருதுகளை வாங்கு குவிக்கும் பிரபல பிக்ஸ்டர் ஸ்டூடியோ நிறுவனம் 2006ல் வெளியிட்ட படம் தான் கார்ஸ்.

மனிதர்களே இல்லாத உலகில் மனிதனுக்கான சிந்தனை திறன் பெற்ற வாகனங்கள் பல பூமியில் தங்களுக்கான வாழ்க்கைமுறையை வாழ்வது தான் கார்ஸ் படத்தின் பின்னணி.

ஆட்டோமொபைல் ஆர்வலர்களை குறிவைத்து வெளியான இப்படம், அவர்களை தாண்டி உலகளவில் வெளியாகி பல தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது.

இதை பார்த்த பிக்ஸர் ஸ்டூடியோஸ், 2011ம் ஆண்டில் கார்ஸ் படத்தின் 2ம் பாகத்தை வெளியிட்டது. அதுவும் செம ஹிட்டாக, தற்போது இதனுடைய 3வது பாகம் இன்று உலகளவில் வெளிவந்துள்ளது.

இதிலும் கார் ரேஸ் தான் கதைக்களம் என்றாலும், இதுவரை இல்லாத மிக அதிரடியான உருவாக்கதலோடு கார்ஸ் 3 தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோமொபைல் அர்வலர்கள் மட்டுமில்லாமல் பல தரப்பு மக்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ஸ் 3 திரைப்படத்தின் முதல் பார்வை டீசர் வெளியான சமயத்தில் இணையதள வாசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால் பல நாட்கள் காத்திருப்பிற்கு பின்னர் கடந்த 9ம் தேதி தான் கார்ஸ் 3யின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியானது. ஆனால் வெளியான 7 நாட்களில் கார்ஸ் 3 டிரைலர் 5 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஹாலிவுட் படங்களில் இருக்கும் கதைக்களங்களை விட தற்போதைய அனிமேஷன் படங்கள் பல ஆக்கத்திறன் மிக்க படைப்புகளாக தயாராகி வருகின்றன.

அதில் தொழில்நுட்ப ரீதியிலும், உருவாக்க ரீதியிலும் மிகவும் தனித்துவமான படைப்பாக தயாராகியுள்ளது கார்ஸ் அனிமேஷன் பட வரிசை.

இன்று வெளியான இப்படத்திற்கு உலகளவில் உள்ள பல அனிமேஷன் பட ரசிகர்களும், ஆட்டோமொபைல் ஆர்வலர்களும் மிகப்பெரிய ஆதரவு அளித்துள்ளனர்.

படத்தை பார்த்த பல ரசிகர்கள் கார்ஸ் 3 படத்தின் உருவாக்க பணிகளையும், ரேஸ் கார்களின் வடிவமைப்பு திறன்களையும் அதிகளவில் பாராட்டி, தங்களது வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cars 3 Animated Comedy Film Produced by Pixar Animation Studios released today. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos