உலகின் டாப்-5 அதிகாரமிக்க தலைவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்த விஷேச தகவல்கள்..!!

Written By:

உலகில் உள்ள நாடுகளில் எண்ணற்ற தலைவர்கள் இருந்தாலும் ஒரு சில நாடுகளின் தலைவர்களே மிகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும் சர்வ வல்லமை படைத்தவர்களாகவும் போற்றப்படுகின்றனர். அவர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் காரணமாக அவர்கள் பயன்படுத்தும் கார்களும் மிகவும் விஷேசமாகவும் பாதுகாப்பானதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தலைவர்கள் பயன்படுத்தும் கார்களும், அவற்றை பற்றிய விஷேச தகவல்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

உலகிலேயே முதன்மையான வல்லரசு நாடாக கருதப்படுவது அமெரிக்கா தான், உலகிலேயே அச்சுறுத்தல் அதிகம் கொண்ட தலைவராக அமெரிக்க அதிபர் கருதப்படுகிறார். தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அவருக்காக கேடிலாக் ஒன் என்ற காரை விஷேசமாக தயாரித்து அளித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.

‘பீஸ்ட்' என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்தக் கார் 8 டன்கள் எடை கொண்டது, 120 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். எந்த விதமான உயிரியல், ரசாயன மற்றும் ஆயுதத் தாக்குதல் நடத்தினாலும் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு மிகுந்த முன்னேறிய தொழில்நுட்பங்கள் அடங்கியதாக இந்த பீஸ்ட் கார் இருக்கிறது. இந்தக் காரின் கதவுகள் போயிங் 747 விமானத்தின் கதவுகளுக்கு ஒப்பான தடிமன் கொண்டது. (மற்ற கார் கதவுகளைக் காட்டிலும் 10 மடங்கு தடிமன் கொண்டது) இந்தக் கார் கண்ணி வெடித்தாக்குதலுக்கு உள்ளானாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் தடிமனான ஸ்டீல் கொண்டு காரின் அடிப்பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

மேலும் இதில் ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், ஜிபிஎஸ் நேவிகேஷன், சேட்டிலைட் டிவைஸ்கள், ஹை ரெசொல்யூசன் நைட் விஷன் கேமராக்கள், தீப்பிடிக்காத எரிபொருள் டேங்க், வெடிகுண்டு தாக்குதல்களால் பாதிக்கப்படாத டயர்கள் என இந்தக் கார் ஒரு குட்டி ராணுவத் தளமாகவே செயல்படக்கூடியதாகும். அதிபர் வெளிநாடு பயணங்களுக்கு செல்லும் போது இந்த காரை எடுத்துச்செல்லவே தனி விமானம் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் - 2

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உலக அளவில் மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர் ஆவார். 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் ராணியாக இருக்கும் எலிசபெத், உலகிலேயே நீண்ட காலம் அரியணையில் அமர்ந்திருக்கும் ராணி என்ற பெருமை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் - 2

இவர் ஒரு கார் பிரியர் என்றாலும் இவர் அதிகம் பயன்படுத்துவது பெண்ட்லி ஸ்டேட் லிமோசின் காரைத் தான். இந்த கார் இங்கிலாந்து பொறியாளர்களால் ராணியின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இதன் விலை 6 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் நாடுகளில் முதன்மையானது சீனா, அமெரிக்க பொருதாளாதாரத்திற்கும் இந்நாடு போட்டியாக உருவெடுத்து வருவதாக கருதப்படுகிறது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் ஆவார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ வாகனம் ஹோங்க்யூ லிமோசின் மாடலாகும். இதுவே சீனாவின் அதிக விலை கொண்ட கார் மாடல் ஆகவும் உள்ளது. 18 அடி நீளம் கொண்ட இந்த காரில் அதிகபட்சமாக 400 ஹச்பி ஆற்றலை அளிக்கும் 6.0 லிட்டர் வி12 இஞ்சின் உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

உலகின் மற்றொரு முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது ரஷ்யா, இதன் அதிபர் விளாதிமிர் புதின். இவர் ரஷ்யாவின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். ஏற்கெனவெ ஒரு முறை ரஷ்ய அதிபராக பதவி வகித்த புதின் தற்போது இரண்டாவது முறையாகவும் அதிபர் பொறுப்பு வகித்து வருகிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

ரஷ்ய அதிபர் புதின் உலகின் முக்கியமான தலைவர்களுள் ஒருவர் ஆவார், இவர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ வாகனம் மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் லிமோசின், இது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் காரைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மட்டுமின்றி அதிக ஆற்றல் வாய்ந்த காராகவும் உள்ளது. ராக்கெட் தாக்குதலுக்கு கூட தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தக் கார் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய பிரதமர்களில் தீவிரவாத அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக உள்ளவரும் இவரே. பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துவது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760 எல்ஐ செக்யூரிட்டி எடிசன் என்ற காரை தான்.

இந்திய பிரதமர் மோடி

இந்த கார் அதிநவீன துப்பாக்கிகளில் இருந்துவரும் குண்டுகளையும் துளைக்க விடாது. வெப்பத்தை உணரும் சென்சார், வெடிகுண்டுகள், ஏவுகணைகளை கண்டறியும் சென்சார் ஆகியவை இந்த காரில் உள்ளன. காரை தீவைத்து கொழுத்தினாலும்கூட, அதன் எரிபொருள் டேங் வெடிக்காது, தீப்பிடிக்காது. விஷ வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும்கூட, கேஸ் புரூப் தொழில்நுட்பம் இருப்பதால் காருக்குள் இருப்போருக்கு பாதிப்பு ஏற்படாது.

English summary
Read in Tamil about car collection of World's most powerful leaders.
Please Wait while comments are loading...

Latest Photos