அமைச்சர் மகன் பலியான மெட்ரோ ரயில் பால கார் விபத்தின் அதிர்ச்சிகர சி.சி.டி.வி காட்சிகள்..!

Written By:

ஹைதராபாத்தில் நடைபெற்ற கார் விபத்தில் ஆந்திராவின் மூத்த அமைச்சரின் மகன் மரணமடைந்ததை அடுத்து, விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் வேகமாக சென்ற சொகுசுக் கார் ஒன்று மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது பலமாக மோதி விப்பத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கி சின்னபின்னமான அந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி63 ஏ.எம்.ஜி மாடலாகும். விலையுயர்ந்த இந்த காரை ஓட்டி வந்தவர் ஆந்திர மாநில அமைச்சர் பி. நாராயணனின் மகன் நிஷித் நாராயணன் என்பது தெரியவந்தது.

ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலை எண் 36ல் கட்டமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூணில் நிஷித் ஓட்டி வந்த கார் அதிவேகத்தில் சென்று மோதியது. காரில் அவருடன் ராஜ ரவிச்சந்திரா என்பவரும் பயணித்தார். இவர் நிஷித் நாரயணின் நண்பராவார்.

பலத்த காயமடைந்த இவர்களை தகவலறிந்து விரைந்து வந்த ஹைதராபாத் காவல்துறையினர் இருவரையும் மீட்டு அருகிலிருந்த அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைச்காக அனுமதித்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற பின் மருத்துவர்கள் பரிசோதனை செய்து நிஷித் நாராயணன் ஏற்கனவே உயிரழிந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த நிஷித்தின் நண்பர் ராஜா ரவிச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு வந்து     அனுமதித்த பிறகு உயிரிழந்துவிட்டார்.

கடந்த 10ம் தேதி நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஏற்பட்ட நிஷித்தின் மரணம் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தின.

தொடர்ந்து அமைச்சர் பி.நாராயணனுக்கு ஆறுதல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த விபத்து நடைபெற்றதற்கான சி.சி.டி.வி வீடியோ காட்சியை ஹைதராபாத் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

மெர்சிடிஸ் நிறுவனத்தால் மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கக்கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் ஜி 63 எஸ்.யூ.வி காரில் இத்தகைய விபத்து நிகழ்ந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெர்சிடிஸ் ஜி 63 எஸ்.யூ.வி காரில் ஆபத்துக்காலத்தில் துரிதமாக செயல்படக்கூடிய ஆர்-பேக்ஸ் மற்றும் வயிற்றுப்பகுதியை காப்பாற்றும் பெல்விஸ் பேக்ஸ் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மேலும் அவசர காலத்தில் தானாகவே இயங்கும் பிரேக் அமைப்பு (ஏ.பி.எஸ்) , மின்னணு உறுதிப்பாடு திட்டம் (ஈ.எஸ்.பி) மற்றும் வேகத்திற்கும் சாலை அமைப்பிற்கு தகுந்தவாறு பணியாற்றும் அடேப்டிவ் பிரேக் அமைப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன.

இத்தனை அம்சங்கள் இருந்து காரை ஓட்டிய நிஷித் நாராயணன் இறக்க காரணமாக அமைந்தது, அவர் காரின் மீது செலுத்திய வேகம் தான் என்பது காவல்துறை வெளியிட்டுள்ள இந்த சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

மெர்சிடிஸ் ஜி 63 கார் 5.4 நொடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை அடையும் திறன் கொண்டது. அதிவேகமாக நாம் இதில் 245 கிலோ மீட்டர் வேகத்தை ஒரு மணி நேரத்தில் அடையலாம்.

நள்ளிரவு பயணம் என்பதால் நிஷித் நாராயணன் மெர்சிடிஸ் ஜி 63 காரில் எத்தனை வேகத்தில் வந்தார் என்பது ஹைதாரபாத் காவல்துறையினருக்கு தெரியவில்லை.

எனினும் சி.சி.டி.வி காட்சிகளை அலசி ஆராய்ந்து பார்த்ததில் நிஷித் மெர்சிடிஸ் ஜி 63 காரை சுமார் 210 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் ஓட்டியிருக்கலாம் என மூத்த அதிகாரி வெங்கட் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதிவேக விபத்திற்கு ஏற்றவாறு கார்களை வடிவமைத்திருந்தாலும், அதை இயக்கும் திறனில் மட்டுமே காரின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும் என்பதை இந்த விபத்தின் மூலம் புரிந்துகொண்டதாக பல இணையதள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கார் நிறுவனங்கள் தயாரிப்புகளில் அமைத்தாலும், அவை ஏனோ எஞ்சினின் செயல்திறனுக்கு ஒப்பாக அமைவதில்லை. அதை இந்த விபத்தின் மூலம் தெரியவருவதாக இணையதளவாசிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

ஆந்திராவின் அமைச்சர் நிஷித் நாரயணன் சென்ற மெர்சிடிஸ் ஜி 63 எஸ்.யூ.வி கார் விபத்திற்குள்ளான சி.சி.டி.வி காட்சி

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, May 16, 2017, 12:09 [IST]
English summary
CCTV footage of Andhra Pradesh Minister son's High speed Car crash Death. Click for extra details...
Please Wait while comments are loading...

Latest Photos