மே 1 முதல் வாகனங்களில் சுழல் விளக்கு பயன்படுத்த முடியாது

Written By:

பிரதமர், ஜானதிபதி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஆகியோரை தவிர சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாட்டில் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சிவப்பு சுழல் விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து ஒரு முறையை உருவாக்கவேண்டும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

சமீபமாக இந்திய அரசியல் களத்தில் பரபரக்க வைத்த இந்த கடிதத்திற்கான நடவடிக்கையை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்துவோருக்கான பட்டியலை வெளியிட்டு, அதற்கான கட்டுபாடுகளையும் அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகிக்கொண்டு வரக்கூடிய சூழலில், சிவப்பு சூழல் விளக்குடன் சாலையில் யாராவது பயணத்தில் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. அதை தடுக்கவே சிவப்பு சூழல் விளக்குகளுக்கான கட்டுபாடுகள் விதிகப்படவேண்டும் என நிதின் கட்கரி கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதுகுறித்து இன்று மத்தியரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநில அளவில் ஆளுநர், முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் கார்களிலும் தேசியளவில்
உச்சநீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் கார்களில் மட்டும் சிவப்பு சுழல் விளக்குகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் விஜபி-களை தவிர காவல்துறை வாகனங்கள், தீ அணைப்பு வண்டி, இராணுவ வாகனங்கள், அவசர ஊர்தி போன்றவை தற்போது நீல நிற சூழல் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றன. அது அவ்வாறே நடைமுறையில் இருக்கும்.

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாக இன்று இது அமைந்திருந்தாலும், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவப்பு சூழல் விளக்கை திரும்பபெற்ற முதல் விஐபி ஆவார். அவருக்கு பிறகு சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத்தும் சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்துவதில்லை.

வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் சிவப்பு சுழல் விளக்குகளுக்கான கட்டுபாடு மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டதை அடுத்து மே 1ம் தேதி வரை காத்திருக்காமல், இன்றே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது வாகனத்திலிருந்த சிவப்பு விளக்கை அகற்றினார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Union Cabinet decided to ban the use of red beacons atop vehicles of dignitaries and government officials.
Please Wait while comments are loading...

Latest Photos