வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு எளிய நடைமுறை: பொன்.ராதா

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனங்களை பதிவு செய்வதற்கும் இருக்கும் சிக்கல்களை களைய மக்களவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பொன். ராதாகிருஷ்ணன்.

By Azhagar

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், நடைமுறைகளை எளிதாக்கவும் புதிய ஆன்லைன் விதிமுறைகளை மத்தியரசு அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் வாகனப் பதிவு செய்வதில், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் இருந்த வந்த சிக்கல்கள் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்க்க புதிய விதிகள்

மக்களவைவில் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வாகனப் பதிவிற்கான 'வாகன் 4.0' இணையமும், ஓட்டுநர் உரிமத்திற்காக இயங்கும் 'சாரதி 4.0' இணையமும், புதிய விதிகள் கொண்டு மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இரண்டு இணையசேவைகளும் அனைத்து தரப்பு மக்களும் கையாளக்கூடிய வகையில், எளிதான நடைமுறைகளை கொண்டுயிருக்கும் என்றார்.

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்க்க புதிய விதிகள்

வாகன் 4.0 மற்றும் சாரதி 4.0 இணைய சேவைகளில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் படி விரைவில் அமலப்படுத்தப்படும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்க்க புதிய விதிகள்

இதனுடன் வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பெறுவதற்கான மாற்றங்களையும் பொன். ராதாகிருஷ்ணன் மக்களவையில் பேசினார். தற்போது வாகனங்கள் பதிவுசெய்யப்பட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் மட்டுமே தகுதி சான்றிதழ் பெறமுடியும் என்ற நிலை இருக்கிறது.

இந்த விதிகள் மாற்றப்பட்டு, உரிமையாளர் எங்கு வாழ்கிறாரோ, அதற்கான ஆவணங்களை காண்பித்து, உரிய ஆர்.டி.ஓ அலுவலகங்களில் வாகனத்திற்கான தகுதி சான்றிதழை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்க்க புதிய விதிகள்

சாலை பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய சாலை நிதியில் கூடுதலாக 10 சதவீத நிதி (ரூ.720 கோடி) ஒதுக்கப்படவுள்ளது. இதை வைத்து அனைத்து மாநில, யூனியன் பிரேதசங்களின் சாலைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
85 road transport offices under Vahan 4.0 and 235 road transport offices under Sarathi 4.0 have been brought to the centralised platform Minister Pon.Radha Krishnan announced.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X