சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு விரைவில் இலவச சைக்கிள் சேவை..!!

Written By:

பயணிகளின் வசதிக்காக சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச சைக்கிள் சேவை திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீ சுற்றளவு கொண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த இலவச சைக்கிள் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்தமாதம் முதல் சைக்கிள் சேவை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இலவச சைக்கிள் சேவைக்காக விரைவில் ஒரு கைப்பேசி எண்ணை சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடவுள்ளது.

சைக்கிள் சேவையை விரும்பும் பயணிகள் தங்களது கைப்பேசியில் இருந்து அந்த எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவேண்டும்.

குறுந்தகவல் பெற்ற பின், சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கைப்பேசி எண்ணிலிருந்து பயணிகளுக்கு பாஸ்வேர்டு பதிலாக வரும்.

அந்த எண்ணை மெட்ரோ நிலையத்தில் உள்ள சைக்கிளுக்கான நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் காண்பித்து சைக்கிளை எடுத்து செல்லலாம்.

அதே ரயில்நிலையத்தின் தான் சைக்கிளை ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அருகில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலும் சைக்கிளை எடுத்து சென்ற பயணி அதை திருப்பி ஒப்படைக்கலாம்.

கேரளாவில் கொச்சி நகரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்த போது இலவச சைக்கிள் சேவையை பிரதமர் மோடி அங்கு தொடங்கி வைத்தார்.

கொச்சி நகரத்தில் மெட்ரோ பயணிகளுக்கு சைக்கிள் சேவையை வழங்கி வரும், அதி'ஸ் பைசைக்கிள் கிளப் என்ற அமைப்புடன் இணைந்து இலவச சைக்கிள் சேவையை மெட்ரோ நிர்வாகம் சென்னைக்கும் வழங்கவுள்ளது.

சென்னையில் கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், இக்காட்டு தாங்கல், புனித தொமையர் மலை, ஷனாய் நகர் மற்றும் நேரு பார்க் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த இலவச சைக்கிள் சேவை முதற்கட்டமாக தொடங்கப்படவுள்ளது.

மேலே கூறப்பட்ட ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும், சுமார் 10 சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் இதற்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில், சைக்கிளின் எண்ணிகையும் மற்றும் மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த சேவை அதிகரிக்கப்படும்.

இலவசமாக வழங்கப்படும் இந்த சைக்கிள் திருடு போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பயணிகள் தரும் கைப்பேசி எண்ணை வைத்து, அவரது முழுவிவரமும் அறியப்படும்.

அதற்கு பிறகு தான் சைக்கிள் பயணிகளுக்கு ஒப்படைக்கப்படும். மேலும் சைக்கிளின் இயக்கம் குறித்து டிராக் செய்யப்படுவதற்கான தொழில்நுட்பமும் இந்த சேவையில் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil- Chennai Metro Rail Passengers Gets Free bicycle Rides from Next Month. Click for the Details...
Story first published: Thursday, July 6, 2017, 11:51 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos