கிடப்பில் கிடந்த சென்னை பறக்கும் சாலை திட்டம்; 6 ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெறுகிறது: முழு தகவல்கள்

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கான கட்டமைப்பு பணிகள் 6 வருடத்திற்கு பிறகு தொடங்கின.

By Azhagar

பன்னாட்டு ஏற்றுமதிக்காக சென்னையில் அமைக்கப்பட இருந்த பறக்கும் சாலை திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர் பெறுகிறது.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

சென்னை துறைமுகத்திற்கு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பன்னாட்டு ஏற்றுமதிக்காக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல சிறப்பு வழித்தடம் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

அதன்படி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மதுரவாயல் வரை ஏற்கனவே உள்ள சாலை வழியாக வரும் வாகனங்களுக்கு, மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி செல்ல புதிய உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

இதற்கு சென்னை பறக்கும் சாலை திட்டம் (Chennai Express Way) என்று பெயரிட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள் தொடங்கியது.

ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருந்த இத்திடத்திற்கு 2007ம் ஆண்டு, அப்போதைய பிரமர் மன்மோகன் சிங் மதுரவாயலில் அடிக்கல் நாட்டி பறக்கும் சாலை திட்டத்தை தொடங்கிவைத்தார்.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

தமிழகத்தில் 2011ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது. பறக்கும் சாலை திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை அப்போதைய அரசு மீண்டும் மேற்கொண்டது.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

அதன்படி, 2012ம் ஆண்டில் பறக்கும் சாலை திட்டத்திற்காக 30 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்த வேளையில், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

ஜெயலலித்தா மறைவிற்கு பிறகு பல நெருக்கடியான சூழலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்றார்.

கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி சென்றிருந்த அவர், அங்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

இதற்கு பிறகு அன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை அமைக்கப்பட இருந்த பறக்கும் சாலை திட்டத்திற்கான பணிகள் மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார்.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

அதன்படி மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ள பறக்கும் சாலை திட்டப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

பறக்கும் சாலை திட்டம் மட்டும் சென்னையில் நிறைவேற்றப்பட்டால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்தை 30 நிமிடங்களில் அடைந்து விடும்.

மேலும் மதுரவாயல் முதல் மெரீனா கடற்கரையை 15 நிமிடங்களில் அடைந்துவிட முடியும்.

சென்னை பறக்கும் சாலை மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கியது!

சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி , பொதுமக்கள் போக்குவரத்திற்கும் பறக்கும் சாலை திட்டம் பெரிய உதவியாக இருக்கும்.

இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் சென்னை போக்குவரத்து கட்டமைப்பு பறக்கும் சாலை திட்டம் தேசியளவிற்கு கவனம் பெறும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The 6 year old Chennai Port elevated road project gets life. Construction started. Cick for More...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X