முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் வாகனம் திருட்டு - உ.பி-யில் திடீர் பரபரப்பு..!

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் வாகனம் திருடப்பட்டதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்புக்காக வந்த கான்வாய் வாகனங்களில் ஒன்று திருடப்பட்டதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாஜக வென்றது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டு தினசரி செய்திகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் யோகி ஆதித்தயநாத் பற்றியது தான் இந்தச் செய்தியும்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வரும் யோகி, சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

அந்த வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக தலைநகர் லக்னோவில் இருந்து 300கிமீ தொலைவில் உள்ள ஜான்சி என்ற மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் யோகி.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் புடைசூழ ஜான்சி மாவட்டத்திற்கு சென்றார் யோகி ஆதித்யநாத்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

ஜான்சி மாவட்ட கலெக்டர் அலுவலமான விகாஸ் பவனில் சட்டம் ஒழுங்கு குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரிகளின் கூட்டத்தில் முதல்வர் யோகியும் கலந்துகொண்டார்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் விகாஸ் பவனை ஒட்டியுள்ள சர்க்யூட் ஹவுஸ் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வர் கலந்துகொண்டுள்ள கூட்டம் முடிய நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் களைப்பில் இருந்த கான்வாய் வாகன ஓட்டுநர்கள் சிறிது ஓய்வு எடுக்க சென்றனர்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

கான்வாய் வாகன ஓட்டுநர் ஒருவர் ஓய்வு எடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது தான் ஓட்டிவந்த காரை மட்டும் காணாததால் அதிர்ச்சியில் உறைந்தார்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

கான்வாய் வாகனத்தில் ஒன்று கானாதது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் அந்த ஓட்டுநர்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

முதல்வரின் வாகனமே திருடப்பட்டதை அறிந்த உள்ளூர் காவல்துறையினர் அதிர்ந்து போயினர். தங்கள் ஊரில் இப்படி ஒரு இழுக்கு நேரிட்டுவிட்டதே என்று மாவட்ட காவல்துறை உஷார்படுத்தப்பட்டது.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

திருடப்பட்ட கார் மாவட்ட எல்லையை தாண்டி சென்றுவிடாமல் தடுத்து எப்படியும் திருடப்பட்ட காரை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று மாவட்டத்தின் அனைத்து செக்போஸ்டுகளும் உஷார்படுத்தப்பட்டது.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

மொத்த காவல்துறையுமே திருடப்பட்ட வாகனத்தை தீவிரமாக தேடி அலைந்துகொண்டிருந்த போது தான் மாவட்ட கண்கானிப்பாளர் தினேஷ் சிங்கிற்கு கான்வாய் வாகனம் குறித்த தகவல் வந்தது.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

உண்மையில் திருடப்பட்டுவிட்டதாக நினைத்து தேடப்பட்டு வந்த கார், திருடுபோகவே இல்லையாம்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

நடந்தது என்னவென்றால். சர்க்யூட் ஹவுஸ் அருகே அனுமதியில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த கான்வாய் வாகனத்தை போக்குவரத்து காவல்துறையினர் ‘டோவ்' செய்து முறையான பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளனர்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

இது தெரியாமல் டிரைவர் அளித்த தகவலில் பேரில் மொத்த காவல்துறையுமே கதிகலங்கிப் போய் காரை தேடிக்கொண்டிருந்தது வேடிக்கையாக போனது.

ஆனால், இங்கு முதல்வரின் வாகனம் என்பதால் யாருமே இதுகுறித்து ஆராய்ந்து பார்க்காமல் மாவட்ட காவல்துறை முழுவதையும் தவிக்கவிட்டு விட்டனர்.

முதல்வரின் கான்வாய் வாகனம் திருட்டு - உபியில் பரபரப்பு..!

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடமே இனிமேல் பார்க்கிங் செய்யப்பட்ட உங்கள் வாகனம் காணாமல் போனால் அது போக்குவரத்து காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதா என்பதனை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே..!

Most Read Articles
English summary
Read in Tamil about UP CM Yogi Adityanath's convoy car had been stolen. actually it was towed by UP police. what happened next?
Story first published: Friday, April 21, 2017, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X