சீனாவில் மிக நீண்ட தூர புல்லட் ரயில் சேவை துவக்கம்!

சீனாவில் மிக நீண்ட தூர புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

Written By:

உலகின் மிகப்பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பை சீனா பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் பீஜிங்கை இணைக்கும் விதத்தில் அந்நாட்டின் மிக நீண்ட தூர புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்த சேவை அந்நாட்டின் போக்குவரத்தில் புதிய மைல்கல்லாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டுத் தலைநகர் பீஜிங்கிற்கு இந்த புல்லட் ரயில் துவங்கப்பட்டுள்ளது.

இரு நகரங்களுக்கு இடையிலான 2,760 கிமீ தூரத்தை அந்த புல்லட் 13 மணி நேரத்தில் கடந்தது. சாதாரண ரயில்களில் செல்லும்போது 34 மணி நேரமாக இருந்த பயண நேரம் இப்போது வெகுவாக குறைந்துள்ளது.

 

அதேநேரத்தில், குன்மிங்- பீஜிங் இடையிலான தூரத்தை 11 மணிநேரத்தில் கடப்பதற்கு சீன ரயில்வே நிர்வாகம் இலக்கு வைத்துள்ளது.

இந்த புதிய புல்லட் ரயில் மூலமாக யுனான், ஜெஜியாங், ஜியான்ங்ஸி, ஹூனான், குயிஸோ ஆகிய 5 மாகாண மக்கள் பெரும் பயனடைவர்.

இங்கிலாந்து நாவல் எழுத்தாளர் ஜேம்ஸ் ஹில்டனின் லாஸ்ட் ஹாரிஸான் நாவலில் இடம்பெற்ற உலகின் மிகவும் பிரபலமான சாங்ரி-லா ஆஃப் வேர்ல்டு ரெசார்ட்டின் பெயரையே இந்த புல்லட் ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் புல்லட் ரயிலில் பயணிக்க 1,147 யுவான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.11,315 என்ற அளவில் கட்டணம் இருக்கிறது.

இதுவரை சீனாவிலுள்ள பீஜிங் - குவாங்ஸோ நகரங்களுக்கு இடையிலான 2,298 கிமீ தூரத்திற்கு இயக்கப்பட்ட புல்லட் ரயில்தான் நீண்ட தூர ரயிலாக இருந்தது. தற்போது அந்த பெருமையை பீஜிங் - குன்மிங் நகரங்களுக்கு இடையிலான ரயில் பெற்றிருக்கிறது.

சீனாவில் 20,000 கீமீ தூரத்திற்கான புல்லட் ரயில் கட்டமைப்பு உள்ளது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த புல்லட் ரயில் கட்டமைப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அங்குலம் அங்குலமாக இங்கே பார்ப்பதற்கான வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தள வாசகர்கள் பெறலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China launches longest Bullet train service.
Please Wait while comments are loading...

Latest Photos