போயிங், ஏர்பஸ் விமானங்களுக்கு போட்டியாக வந்த சீன பயணிகள் விமானம்...!

Written By:

சொந்தமாக பயணிகள் விமானத்தை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது சீனா. இந்த புதிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டு உலகுக்கு தனது தொழில்நுட்ப வல்லமையையும் காட்டி இருக்கிறது.

போயிங், ஏர்பஸ் விமான நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த துறையில் சீனா களமிறங்கி உள்ளது. சீனா தயாரித்துள்ள முதல் பயணிகள் விமானத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

சீனாவின் முதல் பயணிகள் விமானம் சி919 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 ஆகிய விமான மாடல்களுக்கு நேர் போட்டியாக இந்த புதிய விமானம் இருக்கிறது.

சீனாவை சேர்ந்த கோமாக் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் நடுத்தர வகையை சார்ந்தது. 156 பயணிகள் முதல் 168 பயணிகள் வரை செல்ல முடியும். உள்நாட்டு போக்குவரத்து மற்றும் நடுத்தர தூர வழித்தடங்களில் பயன்படுத்த முடியும்.

சீனாவை சேர்ந்த கோமாக் நிறுவனம் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் நடுத்தர வகையை சார்ந்தது. 156 பயணிகள் முதல் 168 பயணிகள் வரை செல்ல முடியும். உள்நாட்டு போக்குவரத்து மற்றும் நடுத்தர தூர வழித்தடங்களில் பயன்படுத்த முடியும்.

இது இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம். சிஎஃப்எம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து எஞ்சின்கள் சப்ளை பெறப்படுகின்றன. இதேபோன்று, பல முக்கிய உதிரிபாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

மணிக்கு 834 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. இந்த விமானத்தை மேலே எழும்புவதற்கு 2,,200 மீட்டர் நீளமுடைய ஓடுபாதையும், தரை இறக்குவதற்கு 1,600 மீட்டர் நீளமுடைய ஓடுபாதையும் தேவைப்படும்.

வரும் 2020ம் ஆண்டு இந்த விமானத்தை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதுவரை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்படும்.

இதுவரை 23 நிறுவனங்களிடம் இருந்து 570 சி919 விமானங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாம். பெரும்பாலான ஆர்டர்கள் சீன நிறுவனங்களிடமிருந்தும், சில ஆர்டர்கள் வெளிநாடுகளில் இருந்தும் கிடைத்துள்ளதாம். இந்த ரக விமானங்களுக்கான மார்க்கெட் மிக பெரிய அளவில் இருக்கிறது. எனவேதான், இந்த ரகத்தில் சீனா கால் பதித்துள்ளது.

கோமாக் சி919 விமானம் 50 மில்லியன் டாலர் விலை மதிப்பு சொல்லப்படுகிறது. போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 விமானங்களைவிட ஒப்பிடும்போது, இதன் விலை பாதி குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எனவே, இந்த விமானம் நிச்சயம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் 2,000 விமானங்களை விற்பனை செய்வதற்கு கோமாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China's First Passenger Plane Takes Off For Maiden Flight.
Please Wait while comments are loading...

Latest Photos