முயற்சி திருவினையாக்கும்... சூட்கேஸில் அசத்தலான ஸ்கூட்டரை உருவாக்கிய சீன விவசாயி!

By Saravana

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஹி லியான்கய். வாகனங்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தனது சொந்த முயற்சியில் சூட்கேஸிலேயே ஒரு ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார்.

சூட்கேஸில் பேட்டரி, மோட்டாரை பொருத்தி, அதற்கு வலிமையான சக்கரங்களையும் கொடுத்து ஒரு அசத்தலான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவாக்கியுள்ளார். இது பொம்மை ஸ்கூட்டராக நினைத்துவிட வேண்டாம்.

இந்த அசத்தலான சூட்கேஸ் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் வியக்க வைக்கிறது. 10 ஆண்டுகால அயராத முயற்சியில் உருவாக்கியுள்ள இந்த ஸ்கூட்டரை சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் முன்னிலையில் சோதனை செய்து காட்டி வியக்க வைத்தார்.


 சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

தனது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சங்சா ரயில் நிலையத்திலிருந்து அந்த ஸ்கூட்டரை பொதுமக்கள் முன்னிலையில் வீட்டிற்கு ஓட்டி வந்தார். அந்த படங்களையும், அவரது ஸ்கூட்டரின் அருமை, பெருமைகளையும் அடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

வாவ்...

வாவ்...

வெறும் 7 கிலோ எடை கொண்ட இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரில் 2 பேரை சுமந்து செல்லும் கட்டமைப்பு பலம் பொருந்தியது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு 50 கிமீ முதல் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்கிறார் ஹி லியான்கய்.

வசதிகள்

வசதிகள்

ஜிபிஎஸ் வசதி, திருடுபோவதை எச்சரிக்கும் அலாரம் போன்ற வசதிகளையும் இந்த சூட்கேஸ் ஸ்கூட்டரில் கொடுத்துள்ளார் லியான்கய்.

 அம்சங்கள்

அம்சங்கள்

ஹேண்டில்பார், ஹெட்லைட் மற்றும் ஆக்சிலேட்டர் ஆகியவற்றை கொடுத்து சாலையில் இயக்குவதற்கான ஓர் முழுமையான ஸ்கூட்டராக உருவாக்கியுள்ளார்.

அயராத முயற்சி

அயராத முயற்சி

விவசாயியான ஹி லியான்கய் ஓய்வு நேரங்களில் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகள் அயராத முயற்சியில் தற்போது இதனை சாலையில் இயக்குவதற்கான அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார்.

Most Read Articles
English summary
A man in China has built a battery-powered scooter with a suitcase which not only helps in the transportation of his belongings but also himself, a media report said. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X