டூப்ளிகேட் பகானி சூப்பர் கார்: வெறும் ரூ.3.70 லட்சம் விலையில்... !!

Written By:

உலகின் மிக பிரத்யேகமான சூப்பர் கார் மாடல் பகானி. மிக வித்தியாசமான வடிவமைப்பு, அதிசக்திவாய்ந்த எஞ்சின், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் சிறப்பம்சங்களுடன் கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு ஒருங்கிணைக்கப்படும் சூப்பர் கார்.

ஆனால், பகானி சூப்பர் கார் கனவை நனவாக்க ரூ.10 கோடி வேண்டும் என்பதுடன், அதனைத்தொடர்ந்து அந்த காரை பராமரிப்பதற்கான செலவினம் லட்சங்களில் செல்கிறது. இந்த நிலையில், இவ்வளவு விலை மதிப்புமிக்க பகானி சூப்பர் கார் கனவுடன் சுற்றி திரியும் கார் பிரியர்களின் கனவை நனவாக்கும் நோக்குடன் டூப்ளிகேட் பகானி சூப்பர் கார்களை சீனாவை சேர்ந்த இளைஞர் தயாரித்து வழங்குகிறார்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தை சேர்ந்த லீ ஷெங்கி என்ற 26வயதான அந்த இளைஞர் இப்போது பகானி சூப்பர் கார்களின் டூப்ளிகேட் மாடல்களை சில லட்சம் விலையில் தயாரித்து கொடுக்கிறார். சூப்பர்கார் என்ற பெயரிலேயே இந்த பகானி கார்களை அவர் தயாரித்து கொடுக்கிறார்.

ஆனால், இவர் தயாரிக்கும் சூப்பர்கார் மாடல்கள் பார்ப்பதற்கு பகானி காரின் டிசைனை ஒத்திருந்தாலும், எஞ்சின் விஷயத்தில் லீ தயாரிக்கும் சூப்பர்கார் வேறுபடுகிறது. ஆம், ஒரிஜினல் பகானி கார்களில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவான ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், லீ தயாரிக்கும் டூப்ளிகேட் பகானி கார்கள் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள். எனவே, செயல்திறனில் நிஜ பகானி போல இருக்காது. பகானி காரின் 6.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 750 பிஎச்பி பவரை அளிக்க வல்ல நிலையில், லீ தயாரிக்கும் சூப்பர் காரில் இருக்கும் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 10 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும். குறைவான விலை மாடல் மணிக்கு 40 கிமீ வேகம் வரையிலும், அதிக திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் மணிக்கு 60 கிமீ வேகம் வரையிலும் செல்லும்.

ஃபைபர் கிளாஸ் பாடி பேனல்கள் கொண்டதாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், புகைப்போக்கி குழாய்கள் ஆகியவை பகானி ஹூவைரா காரினை ஒத்திருக்கிறது. மேலும், பகானி சூப்பர் காரின் புகைப்போக்கி குழாய் சப்தம் அலாதியானது. அதனை பிரதிபலிக்கும் விதத்தில் டூப்ளிகேட் புகைப்போக்கி குழல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டீரியரிலும் அதிக ஒற்றுமைகளை காண முடிகிறது. இந்த கார்கள் நகர்ப்புறத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லீ தயாரித்திருக்கும் சூப்பர் கார்கள் அந்நாட்டை சேர்ந்த மின்சார கார்களை பற்றி எழுதும் சமூக வலைதள அமைப்பு பிரபலப்படுத்தி உள்ளது.

பகானி மற்றும் ஃபெராரி கார்களின் டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் புதிய புரோட்டோடைப் மாடலை 7 மாத கால கடின முயற்சியில் லீ உருவாக்கி இருக்கிறார். அதற்காக, 7,200 டாலர் வரை செலவிட்டுள்ளார். பின்னார், சாங்டான் என்ற இடத்தில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி, அவர்களை சமாதானப்படுத்தி தனது கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளார்.

பகானி ஹூவைரா உள்ளிட்ட கார்கள் ரூ.10 கோடி விலை மதிப்பில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த கார் ரூ.3.70 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைப்பது சீன கார் பிரியர்களை கவர்ந்த விஷயமாக இருக்கும். மேலும், இது சுற்றுச்சூழலுக்கும் உகந்த மின்சார கார் மாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China Builds Duplicate Pagani Huayra super car.
Please Wait while comments are loading...

Latest Photos