வட்ட வடிவ விமான ஓடுபாதை.. நெதர்லாந்து பொறியாளரின் புது ஐடியா!

Written By:

தற்போது விமான ஓடுபாதைகள் நேராக அமைக்கப்படுவதே வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், விமான போக்குவரத்து வெகு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், விமான நிலையங்களின் கட்டமைப்புகளில் பல மாறுதல்களை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், வட்ட வடிவ விமான ஓடுபாதைகள் குறித்த யோசனையை நெதர்லாந்து பொறியாளர் முன் வைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஹென்க் ஹெஸ்லிங்க் என்ற பொறியாளர்தான் இந்த யோசனையை முன் வைத்து அதற்கான சாத்தியங்களையும் ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வட்ட வடிவ ஓடுபாதை திட்டத்தை நேரடியாக பயன்படுத்தி பார்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வட்ட வடிவ ஓடுபாதையில் விமானங்கள் இறங்குவது குறித்த ஆய்வை சிமுலேட்டர் கருவி மூலமாக அவர் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் பிபிசி வெளியிட்டு இருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விமானங்கள் தரை இறங்கும்போதும், மேலே எழும்போதும் சூறாவளி காற்றால் நிலை தடுமாறுவதை பார்த்து, அதற்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன். 

எனது வட்ட வடிவ ஓடுபாதை திட்டம் மூலமாக விமானங்கள் மேலே எழும்போதும், தரை இறங்கும்போதும் காற்று வீச்சு காரணமாக பாதிக்கப்படாது.

சுமார் 3.5 கிமீ விட்டத்திற்கான வட்ட வடிவ ஓடுபாதையில் வணிக ரீதியிலான விமானத்தை தரை இறக்குவது குறித்து சிமுலேட்டர் சாதனங்களுடன் அவர் ஆய்வு நடத்தி இருக்கிறார். இது சாதாரண ஓடுபாதைகளை விட மூன்று மடங்கு நீளமானது.

இந்த வட்ட வடிவ விமான ஓடுபாதையில் ஒரே நேரத்தில் மூன்று விமானங்களை மேல் எழுப்பவும், தரை இறக்கவும் முடியும் என்கிறார் ஹென்க். இதனால், பெரிய விமான நிலையங்களில் போக்குவரத்தை எளிதாக கையாள முடியும் என்று கூறுகிறார்.

இந்த வட்ட வடிவ ஓடுபாதையில் தரைஇறங்குவதற்கு விமானிகளுக்கு அதிக பயிற்சிகள் தேவை இல்லை என்று தெரிவிக்கிறார் ஹென்க். அதேநேரத்தில், விமான நிலையங்களில் விசேஷ தொழில்நுட்பங்களும், கட்டமைப்பும் தேவைப்படும்.

விமானம் தரையிறங்கும்போது பயணிகள் சிறிய அசைவை உணர்வார்கள். மற்றபடி, பெரிய அளவிலான பிரச்னைகள் இருக்காது என்று ஹென்க் கூறுகிறார். 

மேலும், இந்த விமான ஓடுபாதை மூலமாக இரைச்சல் மற்றும் வளிமண்டல மாசுபடுதல் வெகுவாக குறையும் என்றும் தனது புதிய முயற்சிக்கு வலு சேர்க்கிறார்.

1960ம் ஆண்டில் அமெரிக்க ராணுவம் மட்டும் இந்த வட்ட வடிவ விமான ஓடுபாதை பரிசோதித்து பார்த்தது. ஆனால், வணிக ரீதியில் இயக்கப்படும் விமானங்களுக்கான முதல் முயற்சியாக இந்த திட்டம் தெரிவிக்கப்படுகிறது.

வட்ட வடிவ ஓடுபாதை திட்டத்திற்கு பல சாதகங்களை ஹென்க் தெரிவித்தாலும், இது புதுமையான நுட்பம் இல்லை. விமான தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த காலம் தொட்டு இந்த யோசனை முன் வைக்கப்பட்டு வருவதாக பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற வட்ட வடிவிலான ஓடுபாதை அமைப்பதற்கு மிக பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும் என்பது இதன் மிகப்பெரிய பாதகமாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்து, இது மிகவும் அபாயகரமானதாகவும் சில பொறியாளர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தொடர்ந்து படிக்கலாம்.

 

 

அதிக பார்வைகளை பெற்ற படத் தொகுப்பை தொடர்ந்து காணலாம்.

புதிய ஆடி ஏ3 சொகுசு காரின் படங்கள்!

புதிய ஆடி ஏ3 சொகுசு காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, March 20, 2017, 14:37 [IST]
English summary
circular runways be the future of air travel? Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos