இந்த ஸ்கூட்டர் எப்ப வரும்?.. ஆவலைத் தூண்டும் சிட்டிசெய்லர்!!

Posted by:

வாகன பெருக்கத்தால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் செல்வதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. பார்க்கிங், சுற்றுச்சூழல் பிரச்னை, பாதுகாப்பு என இவை அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஒரு இருசக்கர வாகனத்தை கூறுங்கள் என்றால் இன்றைக்கு நம் கையில் இல்லை.

எனவே, மேற்கண்ட குறைகளை போக்கும் விதத்தில் ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் பிரபல டிசைனர் கிறிஸ்டோபர் குஹ். சிட்டிசெய்லர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் எதிர்கால போக்குவரத்துக்கு தீர்வு காணும் விதத்தில் அனைத்து அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நண்பேண்டா

இது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பின்புற சக்கரத்தில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

மழையோ, வெயிலோ...

இந்த ஸ்கூட்டரில் முன்புறம் வைன்ட்ஷீல்டு, மேற்கூரை இருப்பதால் மழை பெய்தாலும் செல்லலாம். தூசி உள்ளிட்ட பிரச்னைகளால் கண்கள் பாதிக்காது.

பாதுகாப்பு

சீட் பெல்ட், ஏர்பேக் ஆகியவையும் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு தரும். மேலும், ஏர்பேக் பொருத்தப்பட்ட முதல் இருசக்கர வாகனமாகவும் இருக்கும்.

நோ ஹெல்மெட்

இந்த ஸ்கூட்டரில் செல்லும்போது ஹெல்மெட் அணியத் தேவையில்லை.

பார்க்கிங்

இலகு எடை கொண்ட காம்பெக்ட் வாகனமாக இருப்பதால் பார்க்கிங் செய்வதும் எளிது.

பேக்பேக்

இந்த ஸ்கூட்டரின் பின்புறத்தில் பேக்பேக் பை ஒன்றும் தொங்கவிடப்பட்டுள்ளது. இதில், அலுவலகம் அல்லது ஷாப்பிங் செல்லும்போது பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

See next photo feature article

பிஎம்டபிள்யூ லோகோ

பிஎம்டபிள்யூ சோலோ ஸ்கூட்டரின் டிசைனை ஒத்திருக்கும் இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே  பிஎம்டபிள்யூ லோகோவையும் பொருத்தி அழகு பார்த்திருக்கிறார் கிறிஸ்டோபர்.

Story first published: Tuesday, May 28, 2013, 10:33 [IST]
English summary
Now, there has been different new innovations for transportation and one of them is the CitiSailer. There are a lot of issues with regards to safety in two-wheeled vehicles. That is why the designer Christopher Kuh took keen note of this and created a safe vehicle.
Please Wait while comments are loading...