முந்தைய ஃபெராரி கார்கள் புடைசூழ லாஃபெராரியை டெலிவிரி எடுத்த ஃபெராரி காதலர்!

தனது 4 ஃபெராரி கார்களை இத்தாலி கூட்டிச் சென்று புதிய லாஃபெராரியை வீட்டுக்கு கூட்டி வந்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர். ஆம், இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் ஹன்ட் என்பவர் ஃபெராரி கார்களின் காதலர்.

ஏற்கனவே 4 ஃபெராரி கார்களை வாங்கி சேகாரம் செய்துவிட்டார். இந்த நிலையில், ஃபெராரியின் புதிய மாடலான லாஃபெராரியையும் முன்பதிவு செய்து வாங்கிவிட்டார். அதனை டெலிவிரி பெறுவதற்காக தனது 4 ஃபெராரி கார்களையும் நண்பர்கள் துணையுடன் லண்டனிலிருந்து ஃபெராரி தலைமையகம் அமைந்துள்ள இத்தாலியின் மரனெல்லோ நகருக்கு அணிவகுப்பாக எடுத்துச் சென்றார்.

ஜான் ஹன்ட்டின் இரு குழந்தைகளும் சென்றனர். லண்டனிலிருந்து 1,400 கிமீ தூரத்தை 14 மணிநேரத்தில் கடந்து மரனெல்லோவை அடைந்தனர். பின்னர், தனது கார்கள் புடைசூழ புதிய ஃபெராரியை டெலிவிரி பெற்றுக் கொண்டு லண்டன் திரும்பினார்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சுவாரஸ்யமான கூடுதல் விபரங்களை காணலாம்.

ஃபெராரி மாடல்கள்

ஃபெராரி மாடல்கள்

ஃபெராரி 288 ஜிடிஓ, எஃப்40, எஃப்50 மற்றும் என்ஸோ ஆகிய 4 ஃபெராரி கார்களை வைத்துள்ளார். இந்த லிஸ்ட்டில் தற்போது லாஃபெராரியும் 5-வதாக இணைந்துள்ளது. மேலும், ஜான் ஹன்ட் வைத்திருக்கும் மாடல்கள் அனைத்தும் ஃபெராரியின் பிரத்யேக மாடல்களாகும். ஜான் ஹன்ட் வைத்திருக்கும் அந்த பிரத்யேக ஃபெராரி கார்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஃபெராரி ஜிடிஓ

ஃபெராரி ஜிடிஓ

ஃபெராரி 288 ஜிடிஓ கார் 1984ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஃபெராரியின் ஸ்போர்ட்ஸ் கார் மாடல். ரேஸ் மாடலாக உருவாக்கப்பட்டு, சாலையில் செல்லத்தக்க மாடலாக விற்பனைக்கு விடப்பட்டது. மொத்தம் 272 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்கப்பட்டன. இந்த காரில் 2.9 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்.இந்த கார் எஞ்சின் அதிகபட்சமாக 400 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. மணிக்கு 304 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது.

ஃபெராரி எஃப்40

ஃபெராரி எஃப்40

ஃபெராரி எஃப்40 கூபே ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இது 1987ம் ஆண்டு முதல் 1992 வரையில் தயாரிப்பில் இருந்தது. ஃபெராரி 288 ஜிடிஓ காரின் வாரிசாக வந்த மாடல்தான் இது. ஃபெராரியின் 40ம் ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்தையொட்டி என்ஸோ ஃபெராரியின் அனுமதியின் பேரில் வடிவமைக்க மாடலும் கூட. அப்போது இந்த கார் 4 லட்சம் அமெரிக்க டாலர் விலையில் வெளியிடப்பட்டது. ஜிடிஓ காரில் இருந்த அதே 2.9 லிட்டர் எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 471 எச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு வந்தது. மொத்தம் 1,315 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

ஃபெராரி எஃப் 50

ஃபெராரி எஃப் 50

கடந்த 1995ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரட்டை இருக்கை ரோட்ஸ்டெர் ரக மாடல் ஃபெராரி பிரியர்களின் மிகவும் விருப்பமான மாடல். 1995 - 97 ஆகிய ஆண்டுகளில் தயாரிப்பில் இருந்த இந்த மாடலில் மொத்தம் 349 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 1992 ஃபெராரி எஃப்92ஏ ஃபார்முலா ஒன் காரின் 3.5 லிட்டர் வி12 எஞ்சின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 4.7 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 750 எச்பி பவரை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.

ஃபெராரி என்ஸோ

ஃபெராரி என்ஸோ

ஃபெராரி நிறுவனர் என்ஸோ ஃபெராரியின் நினைவாக வெளியிடப்பட்ட மாடல் இது. ஃபார்முலா ஒன் கார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த கார் 2002ல் வெளியிடப்பட்டது. கார்பன் ஃபைபர் பாடி, பார்முலா- 1 கார்களில் இருக்கும் எலக்ட்ரோ ஹைட்ராலிக் ஷிஃப்ட் கியர் பாக்ஸ் கொண்டதாக தயாரிக்கப்பட்டது. ஃபெராரியின் புதிய தலைமுறை வி12 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இது. இந்த காரின் உற்பத்தி துவங்குவதற்கு முன்னரே 349 கார்கள் விற்று தீர்ந்தன. தற்போதும் இந்த கார் யாரும் எதிர்பாராத விலை மதிப்பு கொண்டதாக ஏல நிறுவனங்களால் புகழப்பெறுகின்றன.

லாஃபெராரி

லாஃபெராரி

கடைசியாக ஜான் ஹன்ட் கராஜில் இணைந்திருக்கும் ஃபெராரி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான லாஃபெராரியை எஃப்70 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்ட மாடல். இது ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட மாடலாக ஃபெராரி வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 800 பிஎஸ் பவர் கொண்ட 6.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 163 பிஎஸ் பவரை அளிக்கும் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 963 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வழங்கும். இந்த காரை ஜான் ஹன்ட் 1.8 மில்லியன் டாலர் விலையில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஃபெராரி எப்படியிருக்கிறது?

லாஃபெராரி எப்படியிருக்கிறது?

லாஃபெராரியை டெலிவிரி பெற்றபின் ஜான் ஹன்ட் கூறுகையில்," என்னிடம் இருக்கும் ஃபெராரி கார்கள் ஒவ்வொன்றும் ஓட்டுவதில் வேறுபாடு கொண்டது. என்ஸோ காரை இதுவரை 16,000 கிமீ ஓட்டியுள்ளேன். மிக சிறப்பான மாடல். லாஃபெராரியை 5 நிமிடங்கள் மட்டுமே ஓட்டினேன். இந்த காரை பற்றி தெரிந்து கொள்ள இது போதுமானது. ஓட்டுவதற்கு மிக எளிதாக உள்ளது," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Ferrari owners/fans like to do things a bit differently. British property magnate Jon Hunt, decided to pick up his new 1.8-million La Ferrari by driving down his collection of classic Ferraris from London to Ferrari’s headquarters in Maranello, Italy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X